Ind vs SA 1st T20: திடீரென குறுக்கிட்ட மழை.. இந்தியா- தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி நடைபெறுமா..?

Durban weather forecast: டர்பனில் நடைபெறும் முதல் போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டர்பனில் உள்ள உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கும், இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கும் தொடங்கும். ஆட்டத்தின் தொடக்கத்தின்போது மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் அக்யூவெதர் தெரிவித்துள்ளது.

Ind vs SA 1st T20: திடீரென குறுக்கிட்ட மழை.. இந்தியா- தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி நடைபெறுமா..?

டர்பன் வானிலை அறிக்கை (Image: BCCI and twitter)

Updated On: 

08 Nov 2024 13:20 PM

இந்திய அணியின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் நவம்பர் 8ம் தேதியான இன்று முதல் தொடங்குகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மொத்தம் 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவும், தென்னாப்பிரிக்கா அணிக்கு எய்டன் மார்க்ரமும் கேப்டனாக செயல்பட இருக்கின்றனர். முன்னதாக இந்திய அணி கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தது. அப்போதும் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் இருந்தார். ஆனால் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியாவால் வெல்ல முடியவில்லை. தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

ALSO READ: IND vs SA 1st T20: இந்தியா – தென்னாப்பிரிக்கா முதல் டி20 எப்போது? எந்த சேனலில் பார்க்கலாம்?

டி20 தொடர் அட்டவணை:

  1. முதல் டி20 போட்டி – நவம்பர் 8
  2. இரண்டாவது டி20 போட்டி – நவம்பர் 10
  3. மூன்றாவது டி20 போட்டி – நவம்பர் 13
  4. நான்காவது டி20 போட்டி – நவம்பர் 15

பிட்ச் எப்படி..?

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த பிட்ச் இதுவரை அதிக ரன்கள் குவிக்கும் பிட்சாகவே உள்ளது. அதன்படி, முதல் இன்னிங்ஸில் சராசரி ஸ்கோர் 153 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸில் சராசரி ஸ்கோர் 135 ரன்களாகவும் உள்ளது. டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் இதுவரை 18 டி20 சர்வதேச போட்டிகள் நடந்துள்ளன. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி அதிகபட்சமாக 9 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இரு போட்டியானது முடிவு இல்லாமல் முடிந்தது.

டர்பன் ஸ்டேடியத்தின் ஆடுகளத்தின் தன்மையை தீர்மானிப்பது எப்போது கடினமான ஒரு விஷயம். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா 191 ரன்கள் இலக்கை துரத்தி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. டர்பனில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் இதுவரை ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே இந்தியா விளையாடியுள்ளது. 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த போட்டியில் இந்த அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா அரைசதமும், ஆர்.பி.சிங் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே இதுவரை 27 டி20 போட்டிகள் நடந்துள்ளது. இதில், இந்திய அணி அதிகபட்சமாக 15 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா அணி 11 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்து போனது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 10 டி20 போட்டிகளில் இந்தியா தென்னாப்பிரிக்காவில் விளையாடியுள்ளது. இதில் இந்தியா 6ல் வெற்றி பெற்று 3ல் தோல்வியடைந்தது. ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

மழை பெய்ய வாய்ப்பா..?

டர்பனில் நடைபெறும் முதல் போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டர்பனில் உள்ள உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கும், இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கும் தொடங்கும். ஆட்டத்தின் தொடக்கத்தின்போது மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் அக்யூவெதர் தெரிவித்துள்ளது.

அதன்படி, போட்டிக்கு நடுவே 47% சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால் போட்டிக்கு மழை இடையூறு விளைவிக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் போட்டி ரத்து செய்யப்படலாம்.

ALSO READ: Brett Lee Birthday: டி20 வரலாற்றில் முதல் ஹாட்ரிக்.. பீமர் வீசுவதில் கில்லாடி.. அதிவேக பிரட் லீ பெஸ்ட் மொமெண்ட்ஸ்!

இரு அணிகளின் விவரம்:

இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ராமன்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷதீப் சிங், வைஷாக் விஜயகுமார், அவேஷ் கான், யாஷ் தயாள்.

தென்னாப்பிரிக்கா அணி:

எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னியல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி, டொனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சென், ஹென்ரிச் கிளாசென், பேட்ரிக் க்ரூகர், கேசவ் மகராஜ், டேவிட் மில்லர், மிஹாலலி மபோங்வானா, என்கபா சிம்ப்ஸ் பீட்டர், ஆண்டிலேல் சிம்ப்ஸ் பீட்டர், ஆண்டிலேல் சிம்ப்ஸ் பீட்டர்.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?