5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Dwayne Bravo Birthday: டி20யில் 600 விக்கெட்.. டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்.. டுவைன் பிராவோ சாகச பயணம்!

HBD Dwayne Bravo: உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் டுவைன் பிராவோ ஒருவர். ஐபிஎல், சிபிஎல் மற்றும் பிக்பாஷ் லீக் என உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக்களில் களமிறங்கி தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீச்சி எதிரணி பேட்ஸ்மேன்களை ரன் அடிக்க விடாமல் திணற அடிக்கும் பிராவோ, பேட்டிங் மூலமும் தான் விளையாடிய அணிகளுக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளார்.

Dwayne Bravo Birthday: டி20யில் 600 விக்கெட்.. டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்.. டுவைன் பிராவோ சாகச பயணம்!
டுவைன் பிராவோ (Image: Francois Nel/Getty Images)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 07 Oct 2024 10:40 AM

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் டுவைன் பிராவோ இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், பெரும்பாலும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கி கிங் என்று தன்னை நிரூபித்து கொண்ட டுவைன் பிராவோ, ஐபிஎல் போட்டிகள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். அணிக்கு தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை, தேவையான நேரத்தில் ரன்களையும் குவிப்பார். கடந்த 2004ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான டுவைன் பிராவோ, அன்று முதல் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வந்தார்.

இந்தநிலையில், சமீபத்தில்தான் அனைத்து விதமான கிரிக்கெட்டியில் இருந்து டுவைன் பிராவோ ஓய்வு பெற்றார். பிராவோ விளையாடியபோது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் மூன்று வடிவங்களிலும் மிக முக்கியமான வீரர்களில் ஒருவராக இருந்தார். கடந்த 2012 மற்றும் 2016ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பைகள், 2004 ஐசிசி சாம்பியன் டிராபியை வெஸ்ட் இண்டீஸ் வெல்வதில் பிராவோ குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொடுத்தார்.

ALSO READ: IND vs BAN 1st T20: களத்தில் கதகளி ஆடிய ஹர்திக்.. வங்கதேசத்தை ஆட்டிபடைத்து இந்திய அணி வெற்றி!

டுவைன் பிராவோ:

கடந்த 1983ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி டிரினிடாட் மற்றும் டொபாகோவில் பிறந்த பிராவோ, 2004ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அதன்பிறகு, பிராவோ வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒருநாள் போட்டிகள் மற்றும் 91 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இருப்பினும், தற்போது வரை டி20 கிரிக்கெட்டில் டெத் பவுலர்களில் ஒருவராக திகழ்கிறார். பிராவோ தனது வாழ்நாளில் இந்திய பிரீமியர் லீக், பிக் பாஷ் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், பங்காளதேஷ் பிரிமீயர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் உள்ளிட்ட பல உள்நாட்டு டி20 லீக்களில் விளையாடியுள்ளார்.

உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் டுவைன் பிராவோ ஒருவர். ஐபிஎல், சிபிஎல் மற்றும் பிக்பாஷ் லீக் என உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக்களில் களமிறங்கி தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீச்சி எதிரணி பேட்ஸ்மேன்களை ரன் அடிக்க விடாமல் திணற அடிக்கும் பிராவோ, பேட்டிங் மூலமும் தான் விளையாடிய அணிகளுக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளார். பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நீண்ட காலத்திற்கு முன்பே அறிவித்திருந்தார்.

இருப்பினும், உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக்களில் விளையாடி வந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி வந்த டுவைன் பிராவோ, கடந்த ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து, ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தனது பணியை தொடர்ந்தார். இப்போது, கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் நிச்சயம் இவரை மிஸ் செய்வார்கள்.

அதிக விக்கெட்டுகள்:

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற 2021 டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி மோசமாக செயல்பட்டது. இதன்பிறகு, பிராவோ 2021 இல் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 2023ல் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற பிராவோ, கடந்த மாதம் கரீபியன் பிரீமியர் லீக்கில் இருந்து ஓய்வு பெற்றார். கரீபியன் பிரீமியர் லீக்கில் டுவைன் பிராவோ அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார். பிராவோ 103 சிபிஎல் போட்டிகளில் 128 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுமட்டுமின்றி 5 முறை சிபிஎல் கோப்பையையும் வென்றுள்ளார்.

ALSO READ:MS Dhoni: ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா இல்லையா? அனுமதிக்காக மும்பை செல்லும் சிஎஸ்கே நிர்வாகிகள்!

டி20யில் 600 விக்கெட்கள்:

டி20 கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் பிராவோ ஆவார். பிராவோ இதுவரை 578 போட்டிகளில் விளையாடி பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். டெத் ஓவர்களில் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் போட்டிகளை வெல்வதில் பிரபலமான பிராவோ, கடைசி ஓவர்களில் சிக்ஸர் அடித்து போட்டியை வென்று கொடுத்துள்ளார். டி20யில் பிராவோ இதுவரை 630 விக்கெட்டுகளையும், பேட்டிங் மூலம் 6970 ரன்களையும் எடுத்துள்ளார்.

Latest News