5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Watch Video: அனைத்து விதமான கிரிக்கெட்டில் ஓய்வு.. சக வீரர் அளித்த கௌரவத்துடன் அழுதுகொண்ட வெளியேறிய பிராவோ!

Dwyane Bravo Retirement: டுவைன் பிராவோ உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். ஐபிஎல், சிபிஎல் மற்றும் பிக்பாஷ் லீக் என உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக்களில் கலந்துகொண்டு தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீச்சி எதிரணி பேட்ஸ்மேன்களை ரன் அடிக்க விடாமல் திணற அடிக்கும் பிராவோ, பேட்டிங் மூலமும் தான் விளையாடிய அணிகளுக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளார். பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நீண்ட காலத்திற்கு முன்பே அறிவித்திருந்தார்.

Watch Video: அனைத்து விதமான கிரிக்கெட்டில் ஓய்வு.. சக வீரர் அளித்த கௌரவத்துடன் அழுதுகொண்ட வெளியேறிய பிராவோ!
டுவைன் பிராவோ ஓய்வு
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 27 Sep 2024 11:12 AM

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களின் ஒருவரான டுவைன் பிராவோ நேற்று அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். முன்னதாக கரீபியன் பிரிமீயர் லீக்கில் ஒரு போட்டியில் விளையாடிய பிறகு ஓய்வு பெறும் முடிவில் இருந்தார் பிராவோ. ஆனால், காயம் காரணமாக அந்த போட்டிக்கு முன்னதாகவே தனது ஓய்வை அறிவித்தார். நேற்று, போட்டியின்போது பிராவோவுக்கு அவரது சக அணி வீரர்கள் மரியாதையுடன் வழியனுப்பினர். அப்போது, பிராவோ ஸ்டேடியத்தை விட்டு வெளியேறும்போது குழந்தை போல் அழுதார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் ஒரு நிமிடம் கண் கலங்க செய்தது.

 

View this post on Instagram

 

A post shared by CPL T20 (@cplt20)

யார் இந்த டுவைன் பிராவோ..?

டுவைன் பிராவோ உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். ஐபிஎல், சிபிஎல் மற்றும் பிக்பாஷ் லீக் என உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக்களில் கலந்துகொண்டு தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீச்சி எதிரணி பேட்ஸ்மேன்களை ரன் அடிக்க விடாமல் திணற அடிக்கும் பிராவோ, பேட்டிங் மூலமும் தான் விளையாடிய அணிகளுக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளார். பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நீண்ட காலத்திற்கு முன்பே அறிவித்திருந்தார். ஆனால், உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக்களில் விளையாடி வந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி வந்த டுவைன் பிராவோ, கடந்த ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தனது பணியை தொடர்ந்தார்.

ALSO READ: Happy Birthday Lakshmipathy Balaji: கில்லர் ஸ்மைல்.. அக்தர் பந்தில் சிக்ஸர்.. பாகிஸ்தானில் லட்சுமிபதி பாலாஜி செய்த சம்பவம்!

ஓய்வு குறித்து உருக்கம்:

ஓய்வுக்கு பிறகு டுவைன் பிராவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “ ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக 21 ஆண்டுகள் பல ஏற்ற தாழ்வுகளுடன் ஒரு நம்ப முடியாத பயணத்தை கடந்து வந்துள்ளேன். நான் ஒரு கனவை வைத்திருந்தேன். அதுதான் என் வாழ்வில் மிக முக்கியமான விஷயமாக மாறி இவ்வளவு நீண்ட பயணத்தை கொடுத்தது.

எனது சிறுவயது கனவான எனது சொந்த நாட்டிற்காக விளையாட முடிந்ததை நான் என்றென்றும் போற்றுவேன். அடுத்த தலைமுறைக்கு வழிவிட வேண்டு. இந்த யதார்த்ததை புரிந்து கொண்டேன். இதுவே சரியான நேரம். எனது அணியினர் மற்றும் நான் இதுவரை விளையாடிய அணிகளுக்கு நன்றி. முழு மனதுடன் எனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

டுவைன் பிராவோ வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இதுவரை 40 டெஸ்ட், 164 ஒருநாள் மற்றும் 91 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். பிராவோ 40 டெஸ்ட் போட்டிகலில் 2200 ரன்களுடன் 86 விக்கெட்களையும், 164 ஒருநாள் போட்டிகளில் 2968 ரன்களுடன் 199 விக்கெட்களையும், 91 டி20 போட்டிகளில் 1255 ரன்களுடன் 78 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

ALSO READ: MS Dhoni: ஐபிஎல் 2025ல் விளையாட ஆர்வம் காட்டாத தோனி.. விரைவில் ஓய்வு அறிவிப்பா..?

வெஸ்ட் இண்டீஸுல் விளையாடப்படும் சிபிஎல்லில் பிராவோ 107 போட்டிகளில் விளையாடி 20.62 சராசரி மற்றும் 129.33 ஸ்ட்ரைக் ரேட்டில் 1,155 ரன்களும், 129 விக்கெட்களையும் எடுத்துள்ளார். அதேபோல், ஒட்டுமொத்தமாக இதுவரை 582 டி20 லீக் போட்டிகளில் விளையாடி 631 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

கேகேஆரின் புதிய வழிகாட்டியாக பிராவோ நியமனம்:

கடந்த 2023ம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வழிகாட்டியாக இருந்த கவுதம் கம்பீர், கடந்த ஐபிஎல் 2024 சீசனில் கொல்கத்தா அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார். இவரது வழிகாட்டுதலின் கீழ் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, இவரது வழிகாட்டுதல் இந்திய அணிக்கு வேண்டும் என்று முடிவு செய்த பிசிசிஐ, கவுதம் கம்பீரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்தது. இந்தநிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அடுத்த வழிகாட்டி யார் என்று கேள்வி எழுந்து வந்தநிலையில், நேற்று அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்தும் ஓய்வு பெற்ற டுவைன் பிராவோ இன்று கேகேஆர் அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார்.

Latest News