5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

FIFA World Cup: கால்பந்து உலகக் கோப்பையை நடத்தும் உரிமை.. சாதித்து காட்டிய சவுதி அரேபியா..!

Saudi Arabia: 2023 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை சவுதி அரேபியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அரபு நாட்டில் நடைபெறுவது இது முதல் முறையல்ல.

FIFA World Cup: கால்பந்து உலகக் கோப்பையை நடத்தும் உரிமை.. சாதித்து காட்டிய சவுதி அரேபியா..!
ஃபிஃபா உலகக் கோப்பை (Image: getty)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 12 Dec 2024 18:28 PM

உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் கால்பந்து முதன்மை இடத்தை பிடித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளில் கால்பந்து விளையாடு அதிகம் விளையாடப்படுகிறது. இதனால், இந்தியா உட்பட பல நாடுகளின் ரசிகர்கள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஃபிபா உலகக் கோப்பையை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், 2030 மற்றும் 2034 ஃபிபா உலகக் கோப்பையை நடத்தப்போகும் நாடுகளை குறித்த அறிவிப்புகளை நேற்று ஃபெடரேஷன் சர்வதேச கால்பந்து சங்கம் அறிவித்தது.

ALSO READ: Cricket Year Ender: இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் தந்த 2024.. 3 வடிவங்களிலும் படைக்கப்பட்ட சாதனைகள்!

எந்தெந்த ஆண்டுகளில் உலகக் கோப்பை..?

2030 ஃபிஃபா உலகக் கோப்பையாபது ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் கூட்டாக நடத்தும் உரிமையை பெற்றுள்ளனர். இதைதொடர்ந்து, 2023 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை சவுதி அரேபியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அரபு நாட்டில் நடைபெறுவது இது முதல் முறையல்ல. 2 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 2022ம் ஆண்டு கத்தாரில் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், மீண்டும் அரபு நாட்டில் கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளது.

அர்ஜெண்டினா அணி சாம்பியன்:

கத்தார் உலகக் கோப்பையில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 2022 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டி சமனில் முடிந்த நிலையில், பெனால்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜெண்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது.

2026 ஃபிஃபா உலகக் கோப்பை எங்கு நடைபெறுகிறது..?

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் இணைந்து நடத்துகின்றனர்.

100 ஆண்டுகளுக்கு பிறகு..

2030 ஃபிஃபா உலகக் கோப்பையானது ஒன்றல்ல இரண்டல்ல, ஆறு நாடுகள் இணைந்து போட்டியை நடத்துகிறது. இதில், ஸ்பெயின், மொராக்கோ, போர்ச்சுகல் தவிர தென் அமெரிக்க நாடுகளான உருகுவே, பராகுவே, அர்ஜென்டினா அணிகளுக்கு தலா ஒரு போட்டி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உருகுவேயில் கால்பந்து உலகக் கோப்பை நடைபெறுவது உறுதியாகியுள்ளது. இதற்கு முன் 1930ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தியது. இந்த சிறப்பு சந்தர்ப்பத்தை கௌரவிக்கும் வகையில், ஒரு போட்டியை ஏற்பாடு செய்யும் உரிமையை ஃபிஃபா வழங்கியுள்ளது. எனவே, தொடக்க விழா உருகுவேவில் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.

ALSO READ: Vinod Kambli Net Worth: ஒரு காலத்தில் கோடியில் புரண்ட காம்பிளி.. தற்போது ஓய்வூதியத்திற்கு காத்திருப்பு.. சரிந்தது எப்படி?

2034 ஃபிஃபா உலகக் கோப்பை நடத்த ஏலம் எடுத்த ஒரே நாடு சவுதி அரேபியா மட்டுமே. சவூதி அரேபியாவைத் தவிர, முன்னதாக ஆஸ்திரேலியாவும் இந்த பந்தயத்தில் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியா, கால்பந்து போட்டிகளை நடத்தும் பொருட்செலவு மற்றும் நிதி நிலைமையை கருத்தில்கொண்டு தனது பெயரை திரும்பப் பெற்றது. அதன் பிறகு சவுதி மட்டுமே ஏலத்தில் இருந்ததால் முன்னுரிமை வழங்கப்பட்டது. இந்த ஹோஸ்டிங் பெற சவுதி அரேபியா நிறைய பணம் செலவழித்ததாக கூறப்படுகிறது. மேலும், உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரர்களின் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை தனது நாட்டில் விளையாட சவுதி அரேபியா அழைத்தது. ஸ்டேடியம் முதல் உள்கட்டமைப்பு வரை அனைத்திற்கும் சவுதி அரேபியா கடந்த 2-3 ஆண்டுகளில் அதிக பணத்தை செலவு செய்தது. இதன் விளைவாக, 2034 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை பெற்று சவுதி அரேபியா பெற்றுள்ளது.

Latest News