IPL 2025: குஜராத் அணிக்கு புதிய பேட்டிங் ஆலோசகர்.. இனி கேரி கிர்ஸ்டனுக்கு பதிலாக பார்த்தீவ் படேலா..? - Tamil News | former indian cricketer parthiv patel to become gujarat titans batting mentor in ipl 2025 | TV9 Tamil

IPL 2025: குஜராத் அணிக்கு புதிய பேட்டிங் ஆலோசகர்.. இனி கேரி கிர்ஸ்டனுக்கு பதிலாக பார்த்தீவ் படேலா..?

Updated On: 

22 Oct 2024 21:00 PM

Parthiv Patel: பார்த்தீவ் படேல் தனது ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இந்தியாவுக்காக 25 டெஸ்ட், 38 ஒருநாள் மற்றும் இரண்டு டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல்லில் 2008 முதல் 2010 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.

1 / 6இந்திய

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்தீவ் படேல், குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்த்தீவ் படேல் 2020 டிசம்பரில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார்.

2 / 6

கடந்த ஐபிஎல் சீசன் வரை குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், வழிகாட்டியாகவும் இருந்தவர் கேரி கிர்ஸ்டன். இவர் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியை விட்டு வெளியேறி பாகிஸ்தான் அணியின் ஒயிட் - பால் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.

3 / 6

இதையடுத்து, வருகின்ற ஐபிஎல் 2025 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேரி கிர்ஸ்டனுக்கு பதிலாக பார்த்தீவ் படேல் இடம் பெறலாம். அப்படி அமைந்தால் பார்த்தீவ் படேலுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும்.

4 / 6

ஐபிஎல் 2022ம் ஆண்டு முதல் கேரி கிர்ஸ்டன் குஜராத் டைட்டன்ஸ் அணியின் இடம் பிடித்துள்ளார். இவரது பயிற்சியின்கீழ் கடந்த 2022ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தையும், 2023ம் ஆண்டு இறுதி போட்டி வரையிலும் சென்றது.

5 / 6

பார்த்தீவ் படேலுக்கு குஜராத்துக்கும் பல சிறப்பான தொடர்புகள் உள்ளது. பார்த்திவ் படேல் குஜராத் அணிக்காக தான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். 2016-17 சீசனில் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் மும்பையை வீழ்த்தி குஜராத் அணிக்கு முதல் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.

6 / 6

பார்த்தீவ் படேல் தனது ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இந்தியாவுக்காக 25 டெஸ்ட், 38 ஒருநாள் மற்றும் இரண்டு டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல்லில் 2008 முதல் 2010 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். அதனை தொடர்ந்து, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!