Sanjay Bangar: ஆர்யன் டூ அனயா.. பெண்ணாக மாறிய கிரிக்கெட் வீரரின் மகன்!

Aryan to Anaya; ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக்கொண்டு தான் பாலினம் மாறியதாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ மூலம் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. ஆர்யன் என்ற தனது பெயரை அனயா என மாற்றிக் கொண்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்க்கும் போது பார்ப்பதற்கு சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் தான் என்பது பலருக்கும் தெரியவில்லை.

Sanjay Bangar: ஆர்யன் டூ அனயா.. பெண்ணாக மாறிய கிரிக்கெட் வீரரின் மகன்!

கோப்பு புகைப்படம்

Published: 

11 Nov 2024 16:56 PM

சஞ்சய் பங்கர்: இந்திய அணியின் முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் தான் பெண்ணாக மாறியுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக்கொண்டு தான் பாலினம் மாறியதாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ மூலம் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. ஆர்யன் என்ற தனது பெயரை அனயா என மாற்றிக் கொண்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்க்கும் போது பார்ப்பதற்கு சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் தான் என்பது பலருக்கும் தெரியவில்லை. இதனிடையே அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் ஆணாக இருந்தபோது இந்திய கிரிக்கெட் வீரர்களின் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் இடம்பெறச் செய்துள்ளார்.

இதன் மூலம்தான் ஆரியன் பெண்ணாக மாறியிருக்கிறார் என்கிற விஷயம் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. உள்ளூர் போட்டிகளில் களமிறங்கி விளையாடி வந்த ஆர்யனுக்கு போதிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்துள்ளது. இதனிடையே தான் பெண்ணாக இருப்பதை உணர்ந்தவர் பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சஞ்சய் பங்கர் பெயர் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. பலரும் ஆர்யன் எடுத்த தைரியமான முடிவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: BGT 2024: இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித்.. பும்ரா புதிய கேப்டனா..?

மனம் திறந்த ஆர்யன் என்ற அனயா

இதனிடையே தனது இந்த பாலின மாற்றம் குறித்து ஆர்யன் என்ற அனயா வெளியிட்டுள்ள பதிவில், “கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற எனது கனவுக்காக பல தியாகங்களையும் போராட்டங்களையும் அர்ப்பணிப்பையும் நான் மேற்கொண்டு இருந்தேன். வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் விடியும் போது களத்திற்கு சென்று பல சந்தேகங்கள் மற்றும் முன் முடிவுகளுக்கு மத்தியில் எனது வலிமையை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தேன் ஆனால் இந்த ஆட்டத்தை தாண்டி எனக்கு இன்னொரு பயணமும் இருந்தது.

Also Read: FD Interest Rate : 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. அதிக வட்டி வழங்கும் டாப் 7 வங்கிகள்.. பட்டியல் இதோ!

அது என்னை நான் சுயமாக கண்டறிய வேண்டிய பாதையில் செல்ல வைத்தது. இந்த பயணத்தில் நான் நிறைய சவால்களை சந்தித்தேன். எனது சுயத்தை அடைவதற்கு சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. அது அவ்வளவு எளிதாக இல்லை. இன்று இந்த விளையாட்டில் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. நான் வந்த பாதை எளிதானது அல்ல. ஆனால் எனது சுயத்தை நான் கண்டறிந்தது தான் மிகப்பெரிய வெற்றி” என தெரிவித்துள்ளார். சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தங்கள் பாலினத்தை மாற்றிக் கொண்டவர்களுக்கு மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதி இல்லை என்று கூறியிருந்த நிலையில் தற்போது ஆர்யனாக இருந்து அனயாவாக மாறியதால் இனி இவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

 

கொசுவர்த்தி சுருள் ஏற்படுத்தும் பாதிப்புகள்...
செலரி ஜூஸ் குடிப்பதினால் கிடைக்கும் நன்மைகள்!
குளிர்காலத்தில் மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
முடி உதிர்வை தடுக்கும் 7 வீட்டு சமையலறை பொருட்கள்..!