Mithali Raj: திருமணத்தை நிறுத்தியது ஏன்..? சுவாரஸ்ய கதையை சொன்ன மிதாலி ராஜ்!
Mithali Raj Talks About Marriage: சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் 21 ஆண்டுகளுக்கு மேலாக மிதாலி ராஜ் விளையாடியுள்ளார். இந்தியாவுக்காக இதுவரை மிதாலி ராஜ், 12 டெஸ்ட், 232 ஒருநாள் மற்றும் 89 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், 20 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள் கிரிக்கெட்டில் அசைக்க முடியாத பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்தநிலையில், இன்று 41 வயதை கடந்த மிதாலி ராஜ், ரன்வீர் அலகபாடியாவின் போட்காஸ்டில் இந்திய கேப்டனாக இருக்கும்போது தனக்கு நடைபெற இருந்ததாகவும், கிரிக்கெட்டை விட்டுவிட்டால் மட்டுமே திருமணம் நடக்கும் என்று கூறியதால் திருமணத்தை நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
கல்யாணம் நின்ற காரணம் என்ன..?
திருமணம் நின்றது குறித்து பேசிய மிதாலி ராஜ், “அப்போது எனக்கு 25 வயது இருக்கும். திருமணத்திற்கு பிறகு நான் கிரிக்கெட்டை விட்டு குழந்தைகளையும், தன் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று என்னை திருமணம் செய்து கொள்ள இருந்த மாப்பிள்ளை நிபந்தனை வைத்தார். எனக்கு அப்போது கிரிக்கெட் அதிக முக்கியத்துவமாக தெரிந்ததால், திருமணத்தை வேண்டாம் என்று மறுத்து விட்டேன்” என்றார்.
ALSO READ: PV Sindhu Marriage: மணமகளாகப்போகும் பி.வி.சிந்து.. விரைவில் திருமணம்.. மாப்பிள்ளை யார்?
தொடர்ந்து பேசிய அவர், “ எனது ஆரம்ப நாட்களில் கிரிக்கெட்டை ஒரு தொழிலாக தேர்ந்தெடுப்பது என்பது நடுத்தர குடும்பத்தில் தேவையற்றதாக தோன்றியது. பல பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயது வரை மட்டுமே கிரிக்கெட் விளையாடுவார்கள். அதன்பிறகு, திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் சென்று விடுவார்கள். கடந்த 2009ம் ஆண்டு நானும் இதையே செய்ய திட்டமிட்டேன். ஆனால், என்ன நடந்தாலும் உலகக் கோப்பை விளையாடிய பிறகே, குடும்ப வாழ்க்கைக்குள் நுழைவேன் என்று நினைத்திருந்தேன்.
ஆனால், உலகக்கோப்பையில் எனது சிறப்பான ஆட்டத்திற்கு பிறகு, எனக்கு கிடைத்த ஊக்கமும், பாராட்டுகளும் என் வாழ்க்கையை அடியோடு மாற்றியது. ஒரு வீராங்கனையின் வாழ்க்கையில் பாராட்டு எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இது சான்றாகும். இது என் எண்ணத்தையும், முடிவையும் மாற்றியது. இந்த இடத்திற்கு நான் வருவதற்கு பல கஷ்டங்களையும், தியாகங்களையும் செய்தேன். இதன் காரணமாக, எதற்காக அவசரப்பட்டு திருமணம் செய்து கிரிக்கெட் வாழ்க்கையை பாழாக்க வேண்டும் என்று நினைத்தேன். தொடர்ந்து, என் அம்மாவிற்கு போன்று மேலும் இரண்டு வருடம் விளையாட அனுமதி வேண்டும் என்றும், திருமணம் இப்போதைக்கு வேண்டாம் என்று சொன்னேன்.” என்று தெரிவித்தார்.
Mithali Raj sacrificed her marriage to focus on cricket. Now there is this Indian women team who can’t sacrifice doing reels and work hard in the nets pic.twitter.com/QDZsdwZ8AW
— Sandeep Raj (@loyal_CSKfan) December 2, 2024
13 வயதில் கிரிக்கெட்டில் இருந்து விலக நினைத்த மிதாலி ராஜ்:
கடந்த 1997ம் ஆண்டு எனக்கு 13 வயது இருக்கும். அப்போது, நான் முதன்முறையாக சீனியர் முகாமுக்கு சென்றபோது, கிரிக்கெட் தொடர்ந்து விளையாட விருப்பம் இல்லை. நான் முதல் முறையாக தனியாக பயணம் செய்தபோது, என் அம்மாவிற்கு போன் செய்து அழுது வீட்டிற்கு வருகிறேன் என்று அடம் பிடித்தேன். அதன்பிறகு, இந்திய அணியில் இடம் பிடித்த பிறகு, மாதவிடாய் போன்ற உடல் பிரச்சனைகளை துணை ஊழியர்களிடம் கூறுவதில் தயங்கி கொண்டு விளையாடினேன்” என்று தெரிவித்தார்.
ALSO READ: Rohit Sharma: ரித்திகா இன்ஸ்டா மூலம் ரசிகர்களுக்கு ட்ரீட்! ரோஹித் மகனின் பெயர் இதுதானா..?
மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் 21 ஆண்டுகளுக்கு மேலாக மிதாலி ராஜ் விளையாடியுள்ளார். இந்தியாவுக்காக இதுவரை மிதாலி ராஜ், 12 டெஸ்ட், 232 ஒருநாள் மற்றும் 89 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த அனைத்து வடிவங்களையும் சேர்த்து சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த ஒரே வீராங்கனை மிதாலி ராஜ் மட்டுமே. மேலும், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக 155 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 89 வெற்றிகளை பெற்று தந்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை கேப்டனாக அழைத்து சென்றார். கடந்த 2022ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மிதாலி ராஜ், தற்போது மகளிர் பிரிமீயர் லீக்கில் (WPL) குஜராத் டைட்டன்ஸ் அணியில் வழிகாட்டியாக உள்ளார்.