Dhammika Niroshana: இலங்கை முன்னாள் கேப்டன் சுட்டுக்கொலை.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

Former Sri Lanka Under-19 captain: 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தம்மிக்க நிரோஷன் இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது இல்லை. ஆல்ரவுண்டரான நிரோஷன் கடந்த 2001 முதல் 2004 வரை காலி கிரிக்கெட் கிளப்பிற்காக 12 முதல் தர போட்டிகளிலும், 8 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

Dhammika Niroshana: இலங்கை முன்னாள் கேப்டன் சுட்டுக்கொலை.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

Source : Sri Lanka Cricket

Published: 

17 Jul 2024 17:44 PM

இலங்கை கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை: இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணத்திற்கு சற்று முன்பு, கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, 19 வயதுக்குட்பட்ட முன்னாள் இலங்கை கேப்டன் தம்மிக்க நிரோஷன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 41 வயதான தம்மிக்க நிரோஷன், நேற்று இரவு தனது குடும்பத்துடன் இலங்கையின் அம்பலாங்கொடா நகரில் வசித்த நிலையில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. அம்பலாங்கொடை பொலிசார் தற்போது குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குற்றவாளி 12 ரக போர் துப்பாக்கியுடன் வந்துள்ளது தெரியவந்துள்ளது.

ALSO READ: Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்த இரு நாடுகள் பங்கேற்க தடை! ஏன் தெரியுமா?

என்ன நடந்தது..?

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் கேப்டனாக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷன், நேற்று இரவு (ஜுலை 16ம் தேதி) அம்பலாங்கொடையில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். நிரோஷன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருந்த போது, ​​மர்மநபர் ஒருவர் நிரோஷனின் வீட்டிற்குள் நுழைந்து அவரை சுட்டுக் கொன்றதாக உள்ளூர் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், கொலை காரணம் இதுவரை தெரியவில்லை.

யார் இந்த தம்மிக்க நிரோஷன்..?

19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தம்மிக்க நிரோஷன் இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது இல்லை. ஆல்ரவுண்டரான நிரோஷன் கடந்த 2001 முதல் 2004 வரை காலி கிரிக்கெட் கிளப்பிற்காக 12 முதல் தர போட்டிகளிலும், 8 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில், ஒவர் 24 விக்கெட்களை வீழ்த்தியதுடன் 300 மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.

கடந்த 2000ம் ஆண்டு சிங்கப்பூர் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் அறிமுகமானார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2002ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில், தம்மிக்க நிரோஷன் 5 இன்னிங்ஸ்களில் 19.28 சராசரியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் தர போட்டியில், தம்மிக 26.89 சராசரியில் 19 விக்கெட்டுகளை எடுத்தார், இதில் இவரது சிறந்த பந்துவீச்சு 4/33 ஆகும். இது தவிர, 19 முதல் தர இன்னிங்ஸில் 269 ரன்கள் எடுத்துள்ளார்.

தம்மிக்க நிரோஷன் தலைமையின் கீழ் விளையாடிய பர்வீஸ் மஹரூப், ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் உபுல் தரங்கா ஆகியோர் பின்னர் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்து ஜொலித்தனர்.

ALSO READ: Indian Hockey Olympic Medals: ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியின் தங்கப் பதக்க வரலாறு.. இதுவரை எத்தனை பதக்கங்களை வென்றுள்ளது தெரியுமா..?

இந்திய அணி எப்போது இலங்கை செல்கிறது..?

இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்கள் நடைபெறவுள்ளது. இந்த தொடர் ஜூலை 27 ஆம் தேதி டி-20 போட்டியுடன் தொடங்கி, ஆகஸ்ட் 7ம் தேதி ஒருநாள் போட்டியுடன் முடிவடைகிறது. ரோஹித் சர்மா டி20யில் ஓய்வு பெற்றதால், சூர்யகுமார் யாதவ் அல்லது ஹர்திக் பாண்டியாவுக்கு டி20 கேப்டன் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிராம்பை வாயில் வைத்து தூங்கலாமா?
3 வேளை சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?
கரும்பு சாறு குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்..!
தேங்காய் பால் கூந்தலுக்கு ஏன் வரப்பிரசாதம் தெரியுமா..?