Kylian Mbappe: கால்பந்து வீரர் எம்பாப்பே மீது பாலியல் வன்கொடுமை புகார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
Mbappe: கடந்த 2022ம் ஆண்டு பிரான்ஸ் அணி கோப்பையை வெல்ல முடியாவிட்டாலும், அந்த பதிப்பில் மொத்தம் 8 கோல்களை அடித்ததோடு கோல்டன் பூட் வென்றார். மேலும், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 2018 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எம்பாப்பே ஒரு கோலை அடித்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நான்கு கோல்கள் அடித்து, இறுதிப் போட்டியில் அதிக கோல் அடித்தவர் ஆனார்.
கால்பந்தில் மெஸ்ஸி, ரொனால்டோ மற்றும் நெய்மருக்கு பிறகு உலகம் முழுவதும் அறியப்படும் பிரபல வீரர் பிரஞ்சு நட்சத்திர கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பே. கடந்த 2023 ஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவுக்கு எதிராக கைலியன் எம்பாப்வே விளையாடிய விதத்தை எந்த கால்பந்து ரசிகராலும் மறக்க முடியாது. இந்தநிலையில், கைலியன் எம்பாப்பே ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதகாவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மையா பொய்யா என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ALSO READ: Women T20 World Cup: 8 ஆண்டுகளில் முதல் முறை.. அரையிறுதிக்கு முன்னேறாமல் போன இந்திய அணி!
என்ன நடந்தது..? இது உண்மைதானா..?
எம்பாப்பே தொடர்பாக ஸ்வீடனின் தினசரி நாளிதழான Aftonbladet தனது செய்தியில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டது. அதில், ”நேஷன்ஸ் கோப்பை போட்டியின்போது எம்பாப்பே ஓய்வு எடுத்தார். ஓய்வு எடுத்துக்கொண்ட பிறகு, எம்பாப்பே தனது நண்பர்களுடன் ஸ்வீடனுக்கு சென்றுள்ளார். அங்கு, ஸ்டாக்ஷோம் நகர மையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்ட பிறகு ஒரு பெண்ணை பாலியன் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து, அந்த பெண் கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பே மீது ஸ்டாக்ஹோம் காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளார்” என்று தெரிவித்திருந்தது.
நிராகரித்த கைலியன் எம்பாப்பே:
ஸ்வீடனின் தினசரி நாளிதழான Aftonbladet வெளியிட்ட இந்த செய்தியால், சமூக ஊடகங்களில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கைலியன் எம்பாப்பே மீது பாலியல் வன்கொடுமை குற்றசாட்டு எழுந்ததை தொடர்ந்து ரியல் மாட்ரிட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து, சமூக ஊடகங்களில் கைலியன் எம்பாப்பே இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்று கேள்விகளையும் வைத்தனர்.
இதையடுத்து, இந்த செய்தி முழுவதும் பொய்யானது என்று கைலியன் எம்பாப்பே விளக்கம் அளித்தார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ இது முற்றிலும் பொய்யான செய்தி. இந்த வதந்தியால் நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். இந்த பத்திரிகைக்கு எதிராக சட்ட ஆலோசனை பெற்று வருகிறேன். இது ஒரு சதி. இவை அனைத்தும் தனது பெயரை கெடுக்கும் சதி” என்று குறிப்பிட்டுள்ளார்.
FAKE NEWS !!!! ❌❌❌
Ça en devient tellement prévisible, veille d’audience comme par hasard 😉 https://t.co/nQN98mtyzR— Kylian Mbappé (@KMbappe) October 14, 2024
பாலியல் வன்கொடுமை புகாருக்கு பிறகு, கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பேவின் நண்பர்களும் இந்த செய்தியை மறுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது, “ இது முட்டாள்தனமான செய்தி. எம்பாப்பேவை இழிவுபடுத்துவதற்காக இந்த குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தனர்.
மறுபுறம், கைலியன் எம்பாப்பே மீது குற்றம் சாட்டிய பெண் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. தற்போது கால்பந்து உலகின் மிகப்பெரிய நட்சத்திரமாக கைலியன் எம்பாப்பே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசன் வரை புகழ்பெற்ற கால்பந்து கிளப்களில் ஒன்றான பாரிஸ் செயிண்ட் ஜெர்மைனில் நெய்மர் மற்றும் லியோனல் மெஸ்ஸியுடன் விளையாடி வந்தார். இருப்பினும், சம்பளம் பிரச்சனை காரணமாக ரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியில் இருந்து பிரிந்த எம்பாப்பே, தற்போது ரியல் மாட்ரிட் அணியில் விளையாடி வருகிறார்.
உலகக் கோப்பையில் பல சாதனைகள்:
கைலியன் எம்பாப்பே இதுவரை இரண்டு உலகக் கோப்பைகளில் பிரான்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி, 2022ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை சென்றது. 2018 உலகக் கோப்பையில் மொத்தம் 4 கோல்களை அடித்திருந்தார். 19 வயதில் இறுதிப் போட்டியில் கோல் அடித்து சாதனை படைத்த இரண்டாவது இளம் வீரர் என்ற சாதனையை எம்பாப்பே படைத்தார். இதற்கு முன், 17 வயதில் இறுதிப் போட்டியில் கோல் அடித்து சாதனை படைத்தது பீலே மட்டுமே.
கடந்த 2022ம் ஆண்டு பிரான்ஸ் அணி கோப்பையை வெல்ல முடியாவிட்டாலும், அந்த பதிப்பில் மொத்தம் 8 கோல்களை அடித்ததோடு கோல்டன் பூட் வென்றார். மேலும், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 2018 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எம்பாப்பே ஒரு கோலை அடித்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நான்கு கோல்கள் அடித்து, இறுதிப் போட்டியில் அதிக கோல் அடித்தவர் ஆனார். இறுதிப் போட்டியில் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார். இவருக்கு முன், கடந்த 1966ம் ஆண்டு இங்கிலாந்தின் ஜெஃப் ஹர்ஸ்ட், ஜெர்மனிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மூன்று கோல்களை அடித்திருந்தார்.