5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gautam Gambhir: ஹர்திக் கேப்டன்சியை விமர்சித்த ஏபிடி.. பதிலடி கொடுத்த கம்பீர்

நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வரும் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் உண்மை இல்லை என்றும், கோவத்துடன் கலந்த ஈகோ ஹர்திக்கிடம் அதிகம் உள்ளதாக அவரது செயல்பாட்டை விமர்சித்த ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ்கு முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Gautam Gambhir: ஹர்திக் கேப்டன்சியை விமர்சித்த ஏபிடி.. பதிலடி கொடுத்த கம்பீர்
கவுதம் கம்பீர், டிவில்லியர்ஸ்
intern
Tamil TV9 | Updated On: 16 May 2024 11:46 AM

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்டு, குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவது கிரிகெட் ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை என்பது மும்பை அணியின் விளையாட்டு திறனை பார்க்கும் ரசிகர்களுக்கே தெரிந்தது. அணியில் இருக்கும் வீரர்களுக்குள்ளு ஒற்றுமை இல்லை. நிறைய இடங்களில் அணியின் மற்ற வீரர்களிடம் ஹர்திக் பாண்டியா நடந்துகொண்ட விதம் இணையத்தில் வைரலானது. மேலும் ஹர்திக் பாண்டியா எந்த மைதானத்தில் விளையாடினாலும், ரசிகர்கள் ஒருவிதமான எதிர்ப்பை காட்டி வந்தனர். தொடர்ந்து நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டிகளில் மும்பை இந்தியண்ஸ் அணி தோல்வியை தழுவியது. மேலும், நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை முதலில் இழந்து வெளியேறியது. 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற மும்பை அணி முதலில் வெளியேறியதை கண்ட மும்பை அணியின் ரசிகர்கள் தங்களது எதிர்ப்புகளை சமூக வலைதளங்களின் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: Sanju Samson: வீட்டு மொட்டை மாடியில் சஞ்சு சாம்சன் உருவம்… இணையத்தில் வீடியோ வைரல்.!

ஆனால், ஹர்திக் பாண்டியா தனது முகத்தில் எந்த விதமான சோகத்தையும் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக சிரித்த முகத்துடன் காணப்பட்டார். அதற்கும் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டார்.
இந்நிலையில், “மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா சரியாக செயல்படவில்லை. அவர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. எதிரணிகளிடம் தற்பெருமையுடன் நடந்து கொண்டார்” என முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் ஏபி டிவில்லியர்ஸ் குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.

அதேபோல் கெவின் பீட்டர்சனும் ஹார்திக் பாண்டியாவின் கேப்டன்ஸியை விமர்சனம் செய்து பேசியிருந்தார். தற்போது இவர்கள் இருவருக்கும்தான் கவுதம் கம்பீர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ஹர்திக் பாண்டியா ஐபிஎல் கோப்பையை வென்றவர். ஐபிஎல் போட்டியில், டிவிலியர்ஸ் அவரது ரன்கலை தவிர வேறு எதுவும் சாதிக்கவில்லை. அணியின் பார்வையிலும், டிவில்லியர்ஸ் எதுவும் செய்யவில்லை ஆரஞ்சு பழங்களை அந்த பழத்துடன் மட்டும் தான் ஒப்பிட வேண்டும். ஆப்பிள்களை ஆரஞ்சுகளுடன் ஒப்பிட முடியாது என்று தனது பாணியில் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Latest News