5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ranji Trophy: ஒரே இன்னிங்ஸில் இரண்டு முச்சதம்.. ரஞ்சி டிராபியில் படைக்கப்பட்ட புதிய வரலாறு..!

Triple Centuries: ரஞ்சி டிராபியின் பிளேட் குரூப் போட்டியில் அருணாச்சல பிரதேசம் மற்றும் கோவா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இரண்டு பெரிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. முதல் தர கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் இரண்டு பேட்ஸ்மேன்கள் முச்சதம் அடிப்பது இது இரண்டாவது முறையாகும்.

Ranji Trophy: ஒரே இன்னிங்ஸில் இரண்டு முச்சதம்.. ரஞ்சி டிராபியில் படைக்கப்பட்ட புதிய வரலாறு..!
காஷ்யப் பக்லே – சினேகல் கவுதங்கர் (Image: BCCI Domestic)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 14 Nov 2024 17:50 PM

அருணாச்சல பிரதேசத்துக்கு எதிராக கோவா அணியின் பேட்ஸ்மேன்கள் சினேகல் கவுதங்கர் மற்றும் காஷ்யப் பக்லே ரஞ்சி டிராபியில் புதிய வரலாறு படைத்தனர். காஷ்யப் பக்லே ஆட்டமிழக்காமல் 300 ரன்களும், சினேகல் கவுதங்கர் ஆட்டமிழக்காமல் 314 ரன்களும் குவித்தனர். இதன்மூலம், இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 606 ரன்கள் குவித்து சாதனை படைத்தனர். இது ரஞ்சி டிராபி வரலாற்றில் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பாகும்.

புதிய வரலாறு படைப்பு:

ரஞ்சி டிராபியின் பிளேட் குரூப் போட்டியில் அருணாச்சல பிரதேசம் மற்றும் கோவா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இரண்டு பெரிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. முதல் தர கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் இரண்டு பேட்ஸ்மேன்கள் முச்சதம் அடிப்பது இது இரண்டாவது முறையாகும்.

ALSO READ: Border Gavaskar Trophy: பார்டர்-கவாஸ்கர் டிராபியில் கேப்டனாக அதிக வெற்றிகள்.. முதலிடத்தில் இந்திய கேப்டனா..?

முன்னதாக, முதல் தர கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் இரண்டு முச்சதம் அடித்த சாதனை கடந்த 1989ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. கடந்த 1989ம் ஆண்டு கோவாவுக்கு எதிடாக தமிழ்நாட்டை சேர்ந்த டபிள்யூ.வி.ராமன் மற்றும் கிரிபால் சிங் ஆகியோர் ஒரே இன்னிங்ஸில் முச்சதம் அடித்தனர்.

ரஞ்சி கோப்பை 2024 – 25 பதிப்பில் இதுவரை 4 முச்சதம் அடிக்கப்பட்டுள்ளது.

  • சினேகல் கவுதாங்கர் 314* – கோவா vs அருணாச்சல பிரதேசம்
  • காஷ்யப் பால்கே 300 – கோவா vs அருணாச்சல பிரதேசம்
  • மஹிபால் லோம்ரோர் 300* – ராஜஸ்தான் vs உத்தரகாண்ட்
  • சேத்தன் பிஸ்ட் 303* – நாகாலாந்து vs மிசோரம்

ஒட்டுமொத்த ரஞ்சி கோப்பை வரலாற்றில் இதுவரை 55 முச்சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது.

தப்பித்த 18 ஆண்டுகால உலக சாதனை:

இலங்கையின் முன்னாள் ஜாம்பவான்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தனே ஆகியோரின் 18 ஆண்டுகால உலக சாதனை தப்பித்தது. அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் கோவா அணிக்காக காஷ்யப் பக்லே மற்றும் சினேகல் கவுதங்கர் ஆகியோர் முச்சதம் அடித்தது மட்டுமின்றி, இவர்களுக்கு இடையே 606 ரன்கள் என பார்ட்னர்ஷிப் அமைந்தது. கோவா அணி 2 விக்கெட்டுக்கு 727 ரன்கல் எடுத்திருந்த நிலையில் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் என்ற உலக சாதனை இலங்கையின் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தனே ஆகியோர் படைத்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2006ம் ஆண்டு கொழும்பு ஸ்டேடியத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 624 ரன்கள் குவித்தனர்.

கோவா அணி தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்யப்படாமல் இருந்திருந்தால், சங்கக்கார, ஜெயவர்த்தனே ஆகியோரின் உலக சாதனையும் அழிந்திருக்கும்.

கோவா – அருணாச்சல பிரதேசம்:

அருணாச்சல பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 84 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. கோவா அணிக்காக பந்து வீசிய அர்ஜூன் டெண்டுல்கர் 9 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக, முதலில் பேட் செய்ய வந்த கோவாவுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. கோவா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கடேகர் மற்றும் சுய்யாஷ் பிரபுதேசாய் ஆகியோர் ஆரம்பத்திலேயே பெவிலியன் திரும்பினர். அதாவது, கோவா அணி 12 ரன்களுக்கு முதல் விக்கெட்டையும், 121 ரன்களுக்கு இரண்டாவது விக்கெட்டையும் இழந்தது. அதன்பிறகு, சினேகலும், காஷ்யப்பும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து 606 ரன்கள் குவித்து அசத்தினர்.

ALSO READ: IND vs SA 3rd T20I: ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்கள்.. அதிக 200+ ஸ்கோர்.. இந்திய அணி குவித்த ரெக்கார்ட்ஸ்!

காஷ்யப் 269 பந்துகளில் 39 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 300 ரன்களும், சினேகல் 215 பந்துகளில் 45 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர் உதவியுடன் 34 ரன்களும் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Latest News