5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Grand Chess Tour: 3-வது இடத்திற்கு முன்னேறினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா..!

Praggnanandhaa: போலாந்தில் நடைபெற்று வரும் கிராண்ட் செஸ் டூர் தொடரில் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி 3-வது இடத்திற்கு தமிழக வீரர் பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார்.

Grand Chess Tour: 3-வது இடத்திற்கு முன்னேறினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா..!
intern
Tamil TV9 | Updated On: 13 May 2024 13:57 PM

Praggnanandhaa: சமீப காலமாக செஸ் தொடர் தமிழகத்தில் கவனம் பெற்று வருகிறது. தமிழக வீரர்கள் இந்திய அளவில் மட்டும் இல்லாது உலக அளவில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். போலந்து நாட்டில் 9வது கிராண்ட் செஸ் தொடரின் முதல் சீசன் நடைபெற்று வருகிறது. இந்த செஸ் தொடரில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உள்ளிட்ட உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில், ஏழாவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து தமிழக வீரர் பிரக்ஞானந்தா விளையாடினார். இந்த ஆட்டம் 49வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மீண்டும் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து பிரக்ஞானந்தா விளையாடினார். இதில் மேக்னஸ் கார்ல்சனை எளிதாக வீழ்த்தியதன் மூலம் பிரக்ஞானந்தா புள்ளிப்பட்டியலில் 14.5 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

‘பிளிட்ஸ்’ பிரிவு 10வது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன் 28வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்தியாவின் பிரக்ஞானந்தா, போலந்தின் டுடா மோதிய போட்டி ‘டிரா’ ஆனது. மற்றொரு இந்திய வீரர் குகேஷ், சீன வீரரான வெய் இ-யிடம் தோல்வியை தழுவினார். பிரக்ஞானந்தாவுக்கு எதிரான 13வது சுற்றில் அர்ஜுன் வெற்றி பெற்றார். ருமேனியாவின் கிரில் ஷெவ்செங்கோவுக்கு எதிராக குகேஷ் வெற்றி பெற்றார்.போலந்தில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் தொடரில், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா புதிய சாதனை புரிந்துள்ளார்.

Also Read:  தோனிக்கு என்ன ஆச்சு… பெல்ட் அணிந்த தோனியின் புகைப்படம் வைரல்.. ரசிகர்கள் கவலை…!

இந்த 9வது சீசனில் போலந்து, ருமேனியா, குரோஷியா ஆகிய நாடுகளில் தலா ஒரு போட்டியும், அமெரிக்காவில் இரண்டு போட்டி என இந்த ஆண்டு முழுவதும் மொத்தம் 5 போட்டிகள் நடக்கும். இப்போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் வீரர் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்வர். இன்றே கடைசி போட்டி நடைபெறவுள்ளதால், ரசிகர்களிடையே யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

முதலிடத்தில் 20.5 புள்ளிகளுடன் சீனாவின் வெய் இ முதலிடத்திலும், மேக்ன்ஸ் கார்ல்சன் 18 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். மூன்றாவது இடத்தில் பிரக்ஞானந்தாவும், அதேபோல் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 14 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளனர். ‘பிளிட்ஸ்’ பிரிவில் மொத்தம் நடந்த 18 சுற்றுகளின் முடிவில் 14.0 புள்ளிகளுடன் கார்ல்சன் முதலிடம் பிடித்தார். அடுத்த இரு இடங்களை சீனாவின் வெய் இ (12.5 புள்ளி), டுடா (10.5) கைப்பற்றினர். இந்தியாவின் அர்ஜுன் (10.0) 4வது இடத்தை தட்டிச் சென்றார். மற்ற இந்திய வீரர்களான பிரக்ஞானந்தா (9.0), குகேஷ் (5.5) முறையே 6, 10வது இடம் பிடித்தனர்.

‘ரேபிட்’, ‘பிளிட்ஸ்’ பிரிவின் முடிவில் ஒட்டுமொத்தமாக 26 புள்ளி (12+14) பெற்ற கார்ல்சன் மீண்டும் சாம்பியன் ஆனார். இந்தியாவின் பிரக்ஞானந்தா (19), அர்ஜுன் (18) முறையே 4, 5வது இடம் பிடித்தனர். குகேஷ் (12.5) 10வது இடம் பிடித்தையும் பெற்று சாதனை புரிந்து வருகின்றனர்.

Latest News