5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Paralympics: பாராலிம்பிக்கில் மிரட்டிய 7 மாத கர்ப்பிணி.. வெண்கல பதக்கம் வென்று வரலாறு படைப்பு!

Jodie Grinham: பாராலிம்பிக் போட்டியில் 7 மாத கர்ப்பிணி பாரா தடகள வீராங்கனை பதக்கம் வென்று வரலாற்றை படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்தவர் பிரிட்டனை சேர்ந்த ஜோடி கிரின்ஹாம் ஆகும். இதையடுத்து, தற்போது அவருக்கு உலகம் முழுவதிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்த பெண் வில்வித்தை வீராங்கனை, வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.

Paralympics: பாராலிம்பிக்கில் மிரட்டிய 7 மாத கர்ப்பிணி.. வெண்கல பதக்கம் வென்று வரலாறு படைப்பு!
ஜோடி கிரின்ஹாம் (Image: Harry Murphy/Sportsfile via Getty Images)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 24 Oct 2024 14:17 PM

7 மாத கர்ப்பிணி: ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு 2024 பாராலிம்பிக் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இந்த பாராலிம்பிக் போட்டியில் 7 மாத கர்ப்பிணி பாரா தடகள வீராங்கனை பதக்கம் வென்று வரலாற்றை படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்தவர் பிரிட்டனை சேர்ந்த ஜோடி கிரின்ஹாம் ஆகும். இதையடுத்து, தற்போது அவருக்கு உலகம் முழுவதிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்த பெண் வில்வித்தை வீராங்கனை, வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். கர்ப்ப காலத்தில் பதக்கம் வென்ற முதல் பாராலிம்பிக் தடகள வீராங்கனை என்ற பெருமையை ஜோடி க்ரின்ஹாம் பெற்றுள்ளார். அரையிறுதிப் போட்டியில், குழந்தை வயிற்றுக்குள் நகர்ந்ததால், போட்டியில் தோல்வியடைந்தார். இதன்பிறகு, நடைபெற்ற வெண்கலப் பதக்க போட்டியில், இலக்கை துல்லியமாக தாக்கி வெண்கல பதக்கத்தை வென்று அசத்தினார்.

ALSO READ: Ajinkya Rahane: சதமடித்து கம் பேக்! மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்குகிறாரா ரஹானே..?

மேலும், ஜோடி கிரின்ஹாம் பாராலிம்பிக்ஸில் இரண்டாம் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது. இன்று நடைபெறும் கலப்பு குழு நிகழ்வின் கால் இறுதியில் நாதன் மெக்வீனுடன் களமிறங்குகிறார்.

ஜோடி கிரின்ஹாம்:

31 வயதான ஜோடி கிரின்ஹாம், பெண்களுக்கான தனிநபர் கூட்டு போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் அமெரிக்காவின் வில்வீரர் ஃபோப் பேட்டர்சன் பைனை 142-141 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தார். ஜோடி கிரின்ஹாமுக்கு இடது கையின் கட்டவிரலில் பாதி பிறந்தது முதல் இல்லை.

கிரின்ஹாம் 7 மாத கர்ப்பிணி. 2 வயது குழந்தைக்கு தாயும் கூட. க்ரின்ஹாம் அரையிறுதிப் போட்டியின் போது குழந்தையின் அசைவு காரணமாக போட்டியில் இருந்து விலகினார். அப்போது அவர் மிகவும் சிரமத்தை சந்தித்தார். இது மட்டும் நடக்கவில்லை என்றால், இவர் தங்கம் வெல்லவும் வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும்.

வெண்கலம் வென்ற பிறகு பேசிய கிரின்ஹாம், “ இது எளிதானது அல்ல. என் குழந்தை உதைப்பதை நிறுத்தவில்லை. அம்மா என்ன செய்கிறாய் என்று கத்துவது போல் இருந்தது. இருப்பினும், என்னால் போட்டியிட முடியும் என்று தோன்றியது. என்னால் முடிந்தவரை நல்ல குறிவைத்து அடித்தேன். வயிற்றில் குழந்தை இருக்கிறதோ, இல்லையோ பதக்கம் என்னால் வெல்ல முடியும்” என்றார்.

மூன்று முறை கர்ப்பமாக இருந்தும் தாயாக முடியாமல் போன ஜோடி கிரின்ஹாம், பல சிரமங்களுக்கு பிறகு தடையை உடைத்து வெளியே வந்தார். இத்தகைய சூழ்நிலையில், கர்ப்ப காலத்தில் வில்வித்தை செய்வது உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் கடினமாக அவருக்கு கடினமாக இருந்திருக்கும். முன்னதாக, டோக்கியோ பாராலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில் ஜோடி கிரின்ஹாம் தங்கமும், ரியோ பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.

ALSO READ: IPL 2025: ரோஹித்துக்கு அடிபோடும் பஞ்சாப் கிங்ஸ்.. மும்பை அணியின் முடிவு என்ன..?

போட்டிக்கு முன் மருத்துவமனையில் அனுமதி:

பாராலிம்பிக்ஸில் பதக்கம் வெல்வதற்கு முன்பு ஜோடி கிரின்ஹாம், தனது குழந்தை நகராததால் பாரிஸில் உள்ள மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரது குழந்தையின் இதயம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு, நல்ல முன்னேற்றம் அடைந்து மீண்டும் பயிற்சி மேற்கொள்ள தொடங்கினார். தற்போது வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளார்.

Latest News