5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Happy Birthday Ganguly: 52 வது பிறந்த நாளை கொண்டாடும் கிரிக்கெட்டின் தாதா.. ரசிகர்கள் வாழ்த்து..!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் உலக கிரிக்கெட்டின் ஜாதகம் என்று அழைக்கப்படும் சவுரவ் கங்குலி பிறந்த நாள் இன்று 52 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்திய அணியின் மூன்று கேப்டன்களை உருவாக்கியது முக்கிய பங்கு வகித்த கங்குலிக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Happy Birthday Ganguly: 52 வது பிறந்த நாளை கொண்டாடும் கிரிக்கெட்டின் தாதா.. ரசிகர்கள் வாழ்த்து..!
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 08 Jul 2024 11:59 AM

அதிரடியான கிரிக்கெட், ஆக்ரோஷமான விளையாட்டு என்று இந்திய அணிகள் விளையாடிய சௌரவ் கங்குலி தாதா என்று சக விளையாட்டு வீரர்களாலும் ரசிகர்களாலும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் 1972 ஆம் ஆண்டு 8 ஜூலை தேதி கொல்கத்தாவில் பிறந்தார். இந்திய அணியில் கிரிக்கெட் வீரராக பயணத்தை தொடங்கிய அவர், பின்பு இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்து பெங்கால் டைகர் என்று அழைக்கப்பட்டார். ஒரு இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர். பிசிசிஐ என்று அழைக்கப்படும் இந்திய தேசிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். கங்குலி கேப்டனாக இருந்த போது அடுத்த கேப்டனாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை தலைமையேற்க அழைத்தார். தோனியின் தலைமையின் கீழ் 2007 ஆம் ஆண்டு நடைபெற்றா ஐசிசி டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் விளையாடினார். கங்குலியின் தலைமையில், கேப்டனாக, 2002 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பெற்றுக்கொடுத்தார். கங்குலி தனது கேப்டன்சியில், 2003 கிரிக்கெட் உலகக் கோப்பை, 2000 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2004 ஆசியக் கோப்பை ஆகியவற்றின் இறுதிப் போட்டிவரை அழைத்து சென்ற பெருமைக்குரியவர்.

Also Read: T20 World Cup: சாம்பியன் டிராபி தொடரில் கேப்டனாக ரோகித் ஷர்மா தொடர்வார்- பிசிசிஐ செயலாளர்

கிரிக்கெட் வீரராக இந்திய அணிக்கு 311 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 11363 ரன்களை எடுத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் உலகில் 9-வது இடத்தில் உள்ளது. 113 டெஸ்ட் போட்டிகள் ஆடி 16 சதங்கள், 35 அரைசதங்கள், 1 இரட்டை சதம் விளாசி 7 ஆயிரத்து 212 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியாவுக்காக 113 டெஸ்ட் மற்றும் 311 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, சர்வதேச கிரிக்கெட்டில் 18,575 ரன்கள் எடுத்துள்ளார். 2008ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், 2012ல் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கங்குலிக்கு 2004 ஆம் ஆண்டு இந்திய குடிமகன் விருதான பத்மஸ்ரீ வழங்கப்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட்டில் நடைபெறும் ஊழல் குறித்து விசாரிக்க இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிட்டியில் இடம்பெற்றுள்ளார்.

Also Read:

இந்திய கிரிக்கெட் அணிக்கு பல இளம் வீரர்களை உருவாக்கிய பெருமை கங்குலியை சாரும். சேவாக், யுவராஜ், அஜித் அகர்கர், ஜாகீர் கான், முகமது கைஃப், பாலாஜி, நெஹ்ரா, இர்பான் பதான், ஹர்பஜன்சிங், போன்ற வீரர்களை உருவாக்கியவர். தற்போது ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் ஆலோசகராகவும், பயிற்சியாளராகவும் வீரர்களை வழிநடத்தி வருகிறார். கங்குலி அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளை புரிந்து இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் கங்குலிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Latest News