Happy Birthday Rashid Khan: அகதிகள் முகாமில் கிரிக்கெட்.. 17 வயதில் அறிமுகம்.. போரில் முளைத்த ரஷித் கானின் போராட்ட வாழ்க்கை!

Rashid Khan: ரஷித் கானின் அசாதாரண லெக் ஸ்பின், அவரை ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக மாற்றியுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு மட்டுமல்லாமல், இந்தியர் பிரீமியர் லீக் (ஐபிஎல்) நட்சத்திர வீரராக ஜொலித்து வருகிறார். ஐபிஎல்லில் முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த ரஷித் கான், கடந்த 2022ம் ஆண்டு முதல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறது. அந்த வகையில், ஆப்கானிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீரர் ரஷித் கான் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

Happy Birthday Rashid Khan: அகதிகள் முகாமில் கிரிக்கெட்.. 17 வயதில் அறிமுகம்.. போரில் முளைத்த ரஷித் கானின் போராட்ட வாழ்க்கை!

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் (Image: GETTY)

Published: 

20 Sep 2024 08:43 AM

ஆப்கானிஸ்தான் மட்டுமின்றி உலகளவில் மிக சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான ரஷித் கான் செப்டம்பர் 20ம் தேதியான இன்று தனது 26 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரஷித் கானின் அசாதாரண லெக் ஸ்பின், அவரை ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக மாற்றியுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு மட்டுமல்லாமல், இந்தியர் பிரீமியர் லீக் (ஐபிஎல்) நட்சத்திர வீரராக ஜொலித்து வருகிறார். ஐபிஎல்லில் முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த ரஷித் கான், கடந்த 2022ம் ஆண்டு முதல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறது. அந்த வகையில், ஆப்கானிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீரர் ரஷித் கான் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

ரஷித் கானின் சிறுவயது போராட்டம்:

உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரஷித் கானின் சிறுவயது வாழ்க்கை பல போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தது. ஒரு காலத்தில் அகதிகள் முகாமில் நாட்களை கழித்து, அதன்பின் கடும் கஷ்டத்திற்கு மத்தியில் நட்சத்திர கிரிக்கெட் வீரராக உருவெடுத்தார். கடந்த 2001ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே கடுமையான போர் நடந்தது. அந்த நேரத்தில் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் ஒவ்வொரு குடிமக்களும் தங்களை பாதுகாத்துகொள்ள வேண்டும் என்ற அச்சம் நிலவியது. இதன் காரணமாக, மக்கள் தங்களுடைய உயிரையும், குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக புலம் பெயர்ந்தனர். இதில், ரஷித் கானின் குடும்பமும் ஒன்று.

அமெரிக்காவிற்கும், தலிபான்களுக்கும் இடையிலான சண்டையின்போது ரஷித் கானின் குடும்பம் பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று அகதிகள் முகாமில் தங்கினர். அப்போது ரஷித் கானின் வயது வெறும் 3 தான். ரஷித் கான் உட்பட அவர்களது பெற்றோர்களுக்கு 10 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: Ravichandran Ashwin: சேப்பாக்கத்தில் சம்பவம் செய்த அஸ்வின்.. வங்கதேசத்திற்கு எதிராக சதம் அடித்து அசத்தல்..!

ரஷித் கான் சிறுவயது முதலே சுறுசுறுப்பாகவும் பிறருக்கு உதவுவதை பார்த்து, அவரது பெற்றோர் ரஷித் கானை மருத்துவராக்க விரும்பினர். ஆனால், இதை எதுவும் பெரிதாக எடுத்துகொள்ளாத ரஷித் கான் பாகிஸ்தான் அகதிகள் முகாமிலேயே கிரிக்கெட் விளையாட தொடங்கினார். அப்படியே படிப்படியாக பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் தெருக்களில் பந்து மற்றும் பேட்டிங் மூலம் தனது திறமையை வளர்த்து கொண்டிருந்தார்.

அதே நேரத்தில் படிப்பை விடாமல் கிரிக்கெட்டையும் தொடர்ந்த ரஷித் கான், கிரிக்கெட்டை ஒரு கட்டத்தில் உயிராக நேசிக்க தொடங்கினார். பாகிஸ்தானில் நடைபெற்ற வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்கு தனது திறமையை வெளிப்படுத்த, அதன்பிறகு போர் நிறுத்தம் காரணமாக மீண்டும் குடும்பத்துடன் ஆப்கானிஸ்தான் சென்றார்.

2015ல் சர்வதேச போட்டிகளில் அறிமுகம்:

தனது திறமையால் ஆப்கானிஸ்தானிலும் கவனம் ஈர்த்த ரஷித் கான், கடந்த 2015ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அடியெடுத்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணிக்காக தனது 17 வயதில் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அந்த போட்டியில் ரஷித் கான் 8 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார். அன்று தொடங்கிய இவரது சர்வதேச வாழ்க்கை இன்று ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக அந்தஸ்தை கொடுத்துள்ளது.

பல்வேறு சாதனைகள்:

2015 அக்டோபரில் ஜிம்பாப்வேக்கு எதிராக வெறும் 17 வயதில் ஒருநாள் போட்டியில் அறிமுகமான ரஷித், விரைவில் பல சாதனைகளை தனது பெயரில் உருவாக்கினார். இந்த சுற்றுப்பயணத்தில் அவர் ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 அறிமுகத்தையும் செய்தார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டது.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசையில் ரஷித் கான் முதலிடம் பிடித்துள்ளார்.

ALSO READ: IND vs BAN 1st Test Highlights: சிக்கலில் இருந்து மீட்ட அஸ்வின், ஜடேஜா.. முதல் நாளில் இந்திய அணி 339 ரன்கள் குவிப்பு!

ரஷித் கானின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்காக ரஷித் கான் இதுவரை 104 ஒருநாள், 93 டி20 மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கியுள்ளார். இதில், ஒருநாள் போட்டியில் 185 விக்கெட்களுடன் 1316 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், டி20 வடிவத்தில் 152 விக்கெட்களுடன் 460 ரன்களும், டெஸ்ட் வடிவத்தில் 34 விக்கெட்களுடன் 106 ரன்களும் எடுத்துள்ளார்.

ஐபிஎல்லில் ரஷித் கான் இதுவரை 121 போட்டிகளில் களமிறங்கி 149 விக்கெட்களுடன் 2859 ரன்கள் குவித்துள்ளார். இதுவே இவரை ஐபிஎல்லில் நட்சத்திர வீரர் என்ற அந்தஸ்தை கொடுத்துள்ளது.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!