Hardik Pandiya: என் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு விளையாட்டு மூலம் பதிலளித்தேன் – ஹர்திக் - Tamil News | Hardik Pandiya: I responded to the criticism leveled at me through sport - Hardik | TV9 Tamil

Hardik Pandiya: என் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு விளையாட்டு மூலம் பதிலளித்தேன் – ஹர்திக்

என் மீது வைக்கட்டப்பட்ட அனைத்து விமர்சனங்களுக்கும் நான் என்னுடைய விளையாட்டின் மூலம் தான் பதில் சொல்ல வேண்டும் என முன்கூட்டியே முடிவு செய்தேன் என்று பிரதமர் மோடி உடன் நடைபெற்ற உரையாடலின் போது இந்திய அணி துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியா அவருடைய பல்வேறு பிரச்சினைகள் குறித்து மனம் திறந்துள்ளார்.

Hardik Pandiya: என் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு விளையாட்டு மூலம் பதிலளித்தேன் - ஹர்திக்

ஹர்திக் பாண்டியா

Updated On: 

08 Jul 2024 23:43 PM

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு 20 அணிகள் பங்கேற்றன. இதில் இரண்டு குழுக்களாக நடைபெற்ற லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் வெற்றிபெற்ற நான்கு அணிகள் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. அரையிறுதில், வெற்றிபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இரு அணிகளும் பார்படாசில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மோதின. இதில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று 2வது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை உலக கோப்பையை கைப்பற்றியது. இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியிடம் வெற்றியை பறித்த இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்தியா கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றினார்.சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் ஆட்டத்தை மாற்றிய நிலையில், ஹர்திக் ஓவரில் விழுந்த டேவிட் மில்லரின் விக்கெட் இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.

Also Read: ‘சார்’ படத்திற்காக இணைந்த ஜி.வி & சைந்தவி – பாடல் இதோ!

பார்படாஸில் ஏற்பட்ட புயல் காரணமாக விமான சேவை தடைப்பட்டதால், இந்திய அணியினர் நாடு திரும்ப சிறிது கால தாமதம் ஆனது. நிலைமை சீரான பிறகு சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியினரும் அவர்களது குடும்பத்தினரும் தனி விமானம் மூலம் இந்திய அணி நேற்று நாடு திரும்பினர். இந்தியா திரும்பிய வீரர்கள் அன்றே டெல்லியில் உள்ள பிரதமர் மோடியை சந்தித்து விருந்தில் பங்கேற்றனர். அப்போது பிரதமர் மோடி இந்திய அணி வீரர்களுடன் உரையாடினர்.

Also Read: Sabarimala : ஆடி மாத பூஜை.. சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு தேதி அறிவிப்பு

அப்போது ஹர்திக் பேசியது பலருக்கும் தன்னம்பிக்கையை கொடுத்தது.வாழ்க்கையில் கடந்த 6 மாதங்கள் சிறந்த என்டர்டெய்ன்மெண்டாகவும், பல எற்ற இறக்கங்ளோடு இருந்தது. ரசிகர்களும் என்னை மைதானத்தில் வைத்து கிண்டல் செய்தனர். என் வாழ்க்கையில் சில மோசமான நிகழ்வுகளும் நடைபெற்றது. இது எல்லாவற்றுக்கும் நான் பதில் கொடுக்க வேண்டும் என்றும் அது என் விளையாட்டு மூலமாக தான் இருக்க வேண்டும் என முடிவு செய்தேன். அதற்காக என்னையே நான் பலப்படுத்தி கொண்டு என்னை நன்றாக தயார்ப்படுத்திக்கொண்டேன் என்று கூறினார். இது தான் என்னை கிண்டல் செய்தவர்களுக்கும் அவமானப்படுத்தியர்களுக்கும் சிறந்த பதிலாக இருக்கும் என்று நம்பினேன் என ஹர்திக் உருக்கமாக பேசினார்.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!