Hardik Pandya Birthday: பிறப்பு முதல் விவாகரத்து வரை.. ஹர்திக் பாண்டியாவின் 30 ஆண்டுகால வாழ்க்கை!
Happy Birthday Hardik Pandya: ஹர்திக் மற்றும் க்ருணால் இருவருக்கும் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்தது. சகோதரர்கள் இருவரும் சேர்ந்து தங்கள் கிரிக்கெட் திறமையை வளர்த்து கொண்டனர். அதில், ஹர்திக் பாண்டியா தனது ஆட்டத்தை வேகமாக மேம்படுத்தி விரைவில் வதோதரா அணியின் இடம்பிடித்தார். உள்ளூர் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். இதன் காரணமாக ரஞ்சி டிராபியில் பரோடா அணிக்காக களமிறங்கினார்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அக்டோபர் 11ம் தேதியான இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஹர்திக் பாண்டியா இன்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் முக்கிய பங்கு வகிக்கிறார். தற்போது ஹர்திக் பாண்டியா வங்கதேச அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறார். இதில், ஹர்திக் பாண்டியா தனது பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா நோ லுக் ஷாட்டும், இரண்டாவதும் போட்டியில் எடுத்த அற்புதமான கேட்சும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ALSO READ: Food Recipes: சாப்பிடும் ஆசையை தூண்டும் கொய்யா சட்னி.. இப்படி செய்து ருசித்து பாருங்க..!
ஹர்திக் பாண்டியா பிறந்த இடம்:
ஹர்திக் பாண்டியா 11 அக்டோபர் 1993 அன்று குஜராத்தின் சூரத்தில் உள்ள சோரியாசியில் பிறந்தார். இவரின் முழுப் பெயர் ஹர்திக் ஹிமான்ஷூ பாண்டியா. ஹர்திக் பாண்டியாவின் தந்தை ஹிமான்ஷூ பாண்டியா கார் பையான்சியராக உள்ளார். இவரது தாயார் நளினி பாண்டியா இல்லத்தரசியாக உள்ளார். ஹர்திக்கின் சகோதரர் க்ருணால் பாண்டியாவும் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார்.
– T20 World Cup winner. 🏆
– IPL winning captain. 🎖️
– 87 T20i wickets.
– 76 (43) in the 2017 CT FINAL.
– 87 (90) Vs Pakistan in Asia Cup.
– 63 (33) Vs England in the T20WC Semis.HAPPY BIRTHDAY TO THE CLUTCH GOD OF TEAM INDIA – HARDIK PANDYA. 🇮🇳 pic.twitter.com/s1TJACeDxr
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 10, 2024
ஹர்திக் பாண்டியா படிப்பில் சிறுவயது முதல் ஆர்வம் காட்டபில்லை. ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். கிரிக்கெட்டின் நுணுக்கங்களை கற்பிக்க, இவரது தந்தை பரோடோவுக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார். அங்கு ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா கிரண் மோரே கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை தொடங்கினர்.
கிரிக்கெட்டில் வளர்ச்சி:
ஹர்திக் மற்றும் க்ருணால் இருவருக்கும் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்தது. சகோதரர்கள் இருவரும் சேர்ந்து தங்கள் கிரிக்கெட் திறமையை வளர்த்து கொண்டனர். அதில், ஹர்திக் பாண்டியா தனது ஆட்டத்தை வேகமாக மேம்படுத்தி விரைவில் வதோதரா அணியின் இடம்பிடித்தார். உள்ளூர் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். இதன் காரணமாக ரஞ்சி டிராபியில் பரோடா அணிக்காக களமிறங்கினார்.
உள்நாட்டு கிரிக்கெட்:
கடந்த 2013ம் ஆண்டு ஹர்திக் பாண்டியா வதோதரா அணிக்காக ரஞ்சி டிராபியில் அறிமுகமானார். ஹர்திக் அங்கு தனது வேகப்பந்து வீச்சு மற்றும் ஆக்ரோஷமான பேட்டிங் என ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதன் காரணமாக, இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றது. அதன்பிறகு, இந்தியன் பிரீமியர் லீக்கில் கடந்த 2015ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ஏலம் எடுத்தது. தனது முதல் சீசனிலேயே சிறப்பாக செயல்பட்டு, பல முக்கியமான போட்டிகளில் மும்பை இந்தியன்ஸை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
ALSO READ: Health Tips: காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிக்கிறீர்களா? பல பிரச்சனைகளை தரும்!
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்:
உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் சீசன்களில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி ஹர்திக் பாண்டியா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, அதேஆண்டு அக்டோபர் 16ம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் அறிமுகத்தையும், 2017ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி இலங்கைக்கு எதிராக டெஸ்ட் அறிமுகத்தையும் பெற்றார்.
திருமண வாழ்க்கை:
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும், மாடலுமான நடாஷா ஸ்டான்கோவிச்சும் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டனர். இருவரும் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா லாக் டவுனில் முதல் முறையாக திருமணம் செய்து கொண்டனர். இதற்கு பிறகு, ஹர்திக்கும், நடாஷாவும் பிப்ரவரி 2023ல் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணம் 4 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை. ஹர்திக் பாண்டியாவும், நடாஷாவும் இந்த ஆண்டு விவாகரத்து பெற்று, தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் அகஸ்தியா என்ற ஒரு மகனும் உள்ளார்.