5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Hardik Pandya : ஹர்திக் பாண்டியா முதல் ஷிகர் தவான் வரை.. விவாகரத்து செய்துகொண்ட கிரிக்கெட் பிரபலங்கள்

Hardik Pandya Divorce: ஹர்திக்கிற்கும் நடாஷாவிற்கும் இடையிலான 4 வருட திருமண உறவு முடிவுக்கு வந்தது. ஐபிஎல் 2024 போட்டிகள் முடிந்த பிறகு ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவி நடாசாவும் பிரிந்துவிட்டதாக வதந்திகள் கிளம்பின. மேலும், ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து நடாஷா 70% சொத்துகளை கேட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதுவரை இவர்கள் இருவரும் இதுதொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்காத நிலையில், நேற்று ஹர்திக்கும், நடாஷாவும் பிரிவதாக இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தனர்.

Hardik Pandya : ஹர்திக் பாண்டியா முதல் ஷிகர் தவான் வரை.. விவாகரத்து செய்துகொண்ட கிரிக்கெட் பிரபலங்கள்
(Photo: Instagram/Hardik Pandya/Shikhar Dhawan)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 19 Jul 2024 11:12 AM

விவாகரத்து பெற்ற கிரிக்கெட் வீரர்கள்: தினேஷ் கார்த்திக், ஷிகர் தவான், முகமது ஷமி ஆகியோரின் பட்டியலில் தற்போது இணைந்திருக்கும் பெயர் ஹர்திக் பாண்டியா. ஹர்திக்கிற்கும் நடாஷாவிற்கும் இடையிலான 4 வருட திருமண உறவு முடிவுக்கு வந்தது. ஐபிஎல் 2024 போட்டிகள் முடிந்த பிறகு ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவி நடாசாவும் பிரிந்துவிட்டதாக வதந்திகள் கிளம்பின. மேலும், ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து நடாஷா 70% சொத்துகளை கேட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதுவரை இவர்கள் இருவரும் இதுதொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்காத நிலையில், நேற்று ஹர்திக்கும், நடாஷாவும் பிரிவதாக இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தனர். இந்த விவாகரத்தின் மூலம் ஹர்திக் பாண்டியா தனது மகனையும் இழந்துள்ளார். இவரது மகன் அகஸ்தியா தாய் நடாஷாவுடன் செர்பியா சென்றுள்ளார். பாண்டியாவுக்கு முன்பே, விவாகரத்து என்ற காயத்தை அனுபவித்த சில கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அவர்கள் யார் யார் என்று இங்கே பார்க்கலாம்.

Also read: Olympics History: ஒலிம்பிக்ஸ் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? இதன் வரலாறு என்ன..?

ஷிகர் தவான்:

கடந்த 2013ம் ஆண்டு முதல் தற்போதைய இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் ஓப்பனிங் பார்டனராக இருந்த ஷிகர் தவான், சமீபத்தில் விவாகரத்து பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர். ஷிகர் தவான் தனது முன்னாள் மனைவி ஆயிஷா முகர்ஜியை பேஸ்புக்கில் சந்தித்து, கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். யிஷா மற்றும் ஷிகர் தம்பதியருக்கு ஜோராவர் தவான் என்ற 10 வயது மகன் உள்ளார். இருவரும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இருவருக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டு 2023-ம் ஆண்டு மன உளைச்சல் காரணமாக ஆயிஷாவை தவான் விவாகரத்து செய்தார். ஆயிஷா தனது மகனுடன் பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார், இந்தியாவுக்கு வர மறுத்து, ஷிகரை மகனிடமிருந்து ஒதுக்கி வைத்தார். இதன் காரணமாக 2023ம் ஆண்டில், ஷிகர் தவான் மற்றும் ஆயிஷாவின் விவாகரத்துக்கு டெல்லி நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.

முகமது அசாருதீன்:

இந்திய அணியின் கேப்டனாக இருந்த முகமது அசாருதீன் ஒருமுறை அல்ல இரண்டு முறை விவாகரத்து செய்துள்ளார். அசாருதீனின் முதல் திருமணம் நவ்ரீன் என்ற நபருடன் நடந்தது. இவர்களுக்கு அசாதுதீன் மற்றும் அயாசுதீன் என்ற இரு மகன்கள் உள்ளனர். 1996 ஆம் ஆண்டு தனது முதல் மனைவி நவ்ரீனை விவாகரத்து செய்துவிட்டு பாலிவுட் நடிகை சங்கீதா பிஜ்லானியை மணந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் சங்கீதா பிஜ்லானியை விவாகரத்து செய்தார்.

முகமது ஷமி:

கடந்த 2014ம் ஆண்டு இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, ஹசின் ஜஹானை திருமணம் செய்து கொண்டார். இருவரும் முதன்முதலாக ஐபிஎல்லில் சந்தித்து கொண்டார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சியர் லீடராக ஹசின் ஜஹான் இருந்தார். திருமணமாகி 4 வருடங்கள் ஆன நிலையில், 2018 ஆம் ஆண்டு ஷமிக்கு திருமணத்திற்கு வெளியே மற்ற பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், தன்னை கொடுமை செய்வதாகவும் ஹசின் ஜஹான் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். அன்று முதல் இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். ஆனால், இருவரின் வழக்கும் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. ஷமி மற்றும் ஹசீனுக்கு ஒரு மகள் உள்ளார். சமீபத்தில் அவர் தனது மகளின் பிறந்தநாளுக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

தினேஷ் கார்த்திக்:

சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட தினேஷ் கார்த்திக், தனது 21 வயதில் தனது பால்ய தோழியான நிகிதா பஞ்சாராவை 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 5 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. கடந்த 2012ம் ஆண்டு தினேஷ் கார்த்திக் மனைவி நிகிதா சக கிரிக்கெட் வீரர் முரளி விஜய்யுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த தினேஷ் கார்த்திக், நிகிதாவை விவாகரத்து செய்துகொண்டார். பின்னர், தினேஷ் கார்த்திக் 2015ம் ஆண்டு ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கலை மணந்தார்.

Also read: Hardik pandya divorce: மனைவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஹர்திக் பாண்டியா..!

வினோத் காம்ப்ளி:

இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி தனது பால்ய தோழியான நோயெலா லூயிஸை 1998ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு காம்ப்ளி மனைவியைத் தாக்கி சித்திரவதை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, வினோத் காம்ப்ளி தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

ஜவகல் ஸ்ரீநாத்:

ஜவகல் ஸ்ரீநாத் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர். தற்போது ஐசிசியின் மேட்ச் ரெஃப்ரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1999ம் ஆண்டு ஜியோஸ்னாவை மணந்தார். இவர்கள் திருமண வாழ்க்கை 8 ஆண்டுகள் மட்டுமே நீடித்த நிலையில், கடந்த 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். ஒரு வருடம் கழித்து, ஸ்ரீநாத் பத்திரிகையாளர் மாதவி பத்ராவலியை மணந்தார்.

Latest News