ICC T20I Rankings: ஆல்ரவுண்டர்கள் சிம்மாசனத்தில் ஹர்திக்.. அதிரடி முன்னேற்றம் கண்ட திலக்.. ஐசிசி டி20 தரவரிசை!
Hardik Pandya: ஐசிசி டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஹர்திக் பாண்டியா முதல் இடத்தை பிடித்தார். இதன்மூலம், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோனை முந்தி முதல் இடம் பிடித்தார். இந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா 352 ரன்களுடன், 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடருக்கு பிறகு ஐசிசி தரவரிசை பட்டியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மாற்றங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி வெளியிட்ட பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் டிராவிஸ் ஹெட் 855 ரேட்டிங்குடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து பேட்ஸ்மேன் பில் சால்ட் 828 ரேட்டிங்குடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் திலக் வர்மா, ஒரு தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக 69 இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்தார்.
ALSO READ: Most Wickets in BGT: பார்டர் கவாஸ்கர் டிராபியில் அதிக விக்கெட்டுகள்.. டாப் 5 லிஸ்டிலும் அஸ்வின்!
மேலும், இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவை ஒரு இடம் பின்னுக்கு தள்ளினார். திலக் வர்மா 806 ரேட்டிங்குடன் 3வது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 788 ரேட்டிங்குடன் 4வது இடத்திலும் உள்ளார்.
Tilak Varma climbs to No.3 position in ICC Men’s T20I batting rankings 🏏🔥#TilakVarma #ICCRankings #CricketTwitter pic.twitter.com/8PQs5Bg4Su
— InsideSport (@InsideSportIND) November 20, 2024
தரவரிசையில் சரிந்த பாபர் அசாம்:
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் ஒரு இடம் சரிந்து 742 ரேட்டிங்குடன் 5வது இடத்திலும், பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் 719 ரேட்டிங்குடன் 6வது இடத்தில் உள்ளனர். அதேநேரத்தில்., இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் 717 ரேட்டிங்குடன் 7வது இடத்திலும், இந்திய அணியின் நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 706 ரேட்டிங்குடன் 8வது இடத்திலும் உள்ளனர்.
தொடர்ந்து, இலங்கையின் அதிரடி பேட்ஸ்மேன் பது நிஸ்ஸாங்கா ஒரு இடம் சரிந்து 672 ரேட்டிங்குடன் 9வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸ் 636 ரேட்டிங்குடன் 10வது இடத்தில் உள்ளார்.
ஹர்திக் பாண்டியா நம்பர் 1:
ஐசிசி டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஹர்திக் பாண்டியா முதல் இடத்தை பிடித்தார். இதன்மூலம், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோனை முந்தி முதல் இடம் பிடித்தார். இந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா 352 ரன்களுடன், 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
#HardikPandya has topped the ICC Men’s T20I all-rounder rankings for the second time in 2024 🎯 pic.twitter.com/vPykXjhUbT
— rajveer (@iamrajveer2003) November 20, 2024
2வது இடத்தில் யார்..?
ஐசிசி டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஹர்திக் பாண்டியா 244 ரேட்டிங்டன் முதலிடத்திலும், நேபாளத்தின் தீபேந்திர சிங் ஏரி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அதேநேரத்தில், லியாம் லிவிங்ஸ்டோன் 2 இடங்கள் சரிந்து மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டோனிஸ் நான்காவது இடத்திலும், இலங்கையின் வனிந்து ஹசரங்கா 5வது இடத்திலும் உள்ளனர். ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது நபி 6வது இடத்திலும், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா 7வது இடத்திலும் உள்ளனர். தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸின் ரொமாரியோ ஷெப்பர்ட் 8வது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் 9வது இடத்திலும், நமீபியாவின் ஜெர்ஹார்ட் 10வது இடத்தில் உள்ளனர். அந்தவகையில், முதல் 10 ஆல்ரவுண்டர்களில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்திக் பாண்டியா:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டெஸ்ட் அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை. ஹர்திக் நீண்ட காலமாக டெஸ்ட் அணியில் இடம்பெற வில்லை. தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கு பிறகு, ஹர்திக் பாண்டியா விரைவில் அவரது சகோதரர் க்ருனால் பாண்டியா தலைமையிலான பரோடா அணியில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியான சையத் முஷ்டாக் அலி டிராபியில் விளையாடவுள்ளார்.
பந்துவீச்சாளர்களில் யார் முதலிடம்..?
ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் அதில் ரஷித் முதலிடத்தில் உள்ளார். தொடர்ந்து, இலங்கையின் வனிந்து ஹசரங்கா இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 3வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் அகீல் ஹொசைன் 4வது இடத்திலும், இலங்கையின் தீக்ஷனா 5வது இடத்தில், வெஸ்ட் இண்டீஸின் குடகேஷ் மோட்டி 6வது இடத்திலும், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 7வது இடத்திலும் உள்ளனர்.
ALSO READ: Argentina Team: விரைவில் கேரளாவில் விளையாட வரும் அர்ஜென்டினா.. களமிறங்குவாரா மெஸ்ஸி..?
இந்தியாவை பொறுத்தவரை ரவி பிஷ்னோய் 8வது இடத்திலும், அர்ஷ்தீப் சிங் 9வது இடத்திலும் உள்ளனர். கடைசியாக ஆப்கானிஸ்தானின் பரூக்கி 10வது இடத்தில் இருக்கிறார்.