5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Hardik Pandya: துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

டி20 உலக கோப்பை தொடரின் துணைகேப்டனாக துணை கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். 

Hardik Pandya: துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
intern
Tamil TV9 | Updated On: 01 May 2024 13:53 PM

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு, ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதில் 20   அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடரில் பங்கேற்க உள்ள அணிகள் தங்களது வீரர்களை நாளைக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கூறியிருந்தது.

இந்திய அணியில் இடம்பிடிக்கப்போகும் வீரர்கள் குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. மற்ற நாடுகளும் தங்கள் நாடுகளின் சார்பாக டி 20 உலக கோப்பையில் பங்கேற்கும்  வீரர்களை அறிவித்து வருகின்றன.

பிசிசிஐ டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்த அணியில் ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்) , ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா, அக்சர் படல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

டி 20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த ஹர்திக்பாண்டியா ரோகித் சர்மாவிற்கு பிறகு சில போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டார்.  2022 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி தோல்விக்கு பின்னர் ரோஹித் டி20யில் விளையாடவில்லை என்ற காரணத்தினால் ஹர்திக் பாண்டியா உலக கோப்பையிலும் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சில நாட்களுக்கு முன்னர்,  பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேசுகையில், “இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால் நாங்கள் தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்று ரசிகர்களின் இதயங்களை வென்றோம். வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தான் வெல்லும்” என்று தெரிவித்தார்.

ஜெய்ஷாவின் கருத்து, இணையத்தில் வைரலான நிலையில், யார் கேப்டனாக செயல்பட வேண்டும் என்ற கேள்வி அதிகரித்தது. ஆனால், ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா, ஒரு வீரராக தனிப்பட்ட செயல்பாடுகளையும், கேப்டனாவும் தனது பங்களிப்பை ஆற்றவில்லை என்று தொடர்ந்து விமர்சனம் எழுந்து வந்தது. அதே போல், முன்னாள் வீரர்களும் ப்ளேயிங் லெவனில் ஹர்திக் பாண்டியாவின் பெயரைகூறவில்லை. இதற்கெல்லாம் காரணம், ஐபிஎல் போட்டிகளில் சரியாக விளையாடாதது மட்டுமே என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். குறிப்பாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட முதல் தொடரிலேயே அந்த அணிக்கு கோப்பையை வாங்கி கொடுத்தார். அதன் தொடர்சியாக 2023 ஆம் ஆண்டும் இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார். ஆனால், மும்பை அணியில் மட்டும் தான் விமர்சனத்திற்குள்ளானார்.

ரோகித் மற்றும் விராட் கோலிக்கு இந்த டி20 உலக கோப்பை தொடர் கடைசி தொடராக அமையும் என்பதாலும், அடுத்து வரும் இளம் வீரர்களை வழிநடத்த சரியான தலைமையை தேர்வு செய்யும் விதமாகவே ஹர்திக் பாண்டியாவிற்கு துணைகேப்டன் பதவி வழங்கபப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனை ஹர்திக் பாண்டியா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Latest News