Ranji Trophy 2024: ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்.. கேரளாவுக்கு எதிராக கலக்கிய அன்ஷூல் கம்போஜ்!
Anshul Kamboj: முதல் தர கிரிக்கெட்டில் அன்ஷூல் கம்போஜ் முதல் தர கிரிக்கெட்டில் இதுவரை 19 போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கடந்த சீசனில் 10 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி, விஜய் ஹசாரே டிராபியை ஹரியானாவை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான மோசமான தோல்விக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கு, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. இப்படி ஒருபக்கம் சர்வதேச டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் காத்து கொண்டிருந்தாலும், உள்நாட்டு கிரிக்கெட் போட்டியான ரஞ்சி டிராபியில் இந்திய வீரர்கள் கலக்கி வருகின்றன.
கடந்த இரண்டு நாட்களாக பல பெரிய சாதனைகள் ரஞ்சி டிராபியில் படைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று இளம் பந்துவீச்சாளர் ஒருவர் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளார். அந்த பந்துவீச்சாளர் பெயர் அன்ஷூல் கம்போஜ். அன்ஹூல் கம்போஜ் ஹரியானா ரஞ்சி அணிக்காக விளையாடி வருகிறார்.
அன்ஷூல் கம்போஜ்:
லாலியில் நடந்து வரும் ரஞ்சி கோப்பை போட்டியில் கேரளாவுக்கு எதிராக அன்ஷூல் கம்போஜ் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம், ரஞ்சி கோப்பையில் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய 3வது பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அனில் கும்ப்ளே இந்த சாதனையை படைத்துள்ளார். இவர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
1⃣ innings 🤝 1⃣0⃣ wickets 👏
Historic Spell 🙌
3⃣0⃣.1⃣ overs
9⃣ maidens
4⃣9⃣ runs
1⃣0⃣ wickets 🔥Watch 📽️ Haryana Pacer Anshul Kamboj’s record-breaking spell in the 1st innings against Kerala 👌👌#RanjiTrophy | @IDFCFIRSTBank pic.twitter.com/RcNP3NQJ2y
— BCCI Domestic (@BCCIdomestic) November 15, 2024
38 ஆண்டுகளுக்கு பிறகு..
கடைசியாக ரஞ்சி கோப்பை வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய சாதனையானது கடந்த 1985-86 சீசனில் நடைபெற்றது. ராஜஸ்தான் அணிக்காக கடந்த 86 சீசனில் பிரதீப் சுந்தரம் இந்த சாதனையை படைத்தார். இதற்கு முன்பு கடந்த 1956-57 சீசனில் பெங்கால் அணிக்காக விளையாடிய பிரேமாங்ஷு சட்டர்ஜி இந்த சாதனையை படைத்தார். இதையடுத்து, சரியாக 38 ஆண்டுகளுக்கு பிறகு அன்ஷூல் கம்போஜ் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
𝐖.𝐎.𝐖! 🔥
Haryana Pacer Anshul Kamboj has taken all 1⃣0⃣ Kerala wickets in the 1st innings in #RanjiTrophy 🙌
He’s just the 6th Indian bowler to achieve this feat in First-Class cricket & only the 3rd in Ranji Trophy 👏
Scorecard: https://t.co/SeqvmjOSUW@IDFCFIRSTBank pic.twitter.com/mMACNq4MAD
— BCCI Domestic (@BCCIdomestic) November 15, 2024
யார் இந்த அன்ஷூல் கம்போஜ்..?
முதல் தர கிரிக்கெட்டில் அன்ஷூல் கம்போஜ் முதல் தர கிரிக்கெட்டில் இதுவரை 19 போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கடந்த சீசனில் 10 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி, விஜய் ஹசாரே டிராபியை ஹரியானாவை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார். கடந்த ஐபிஎல் 2024ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த மாதம் ஓமனில் நடைபெற்ற வளர்ந்து வரும் ஆடவர் ஆசியக் கோப்பையில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய இவர், 3 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம் லேக்கர், அனில் கும்ப்ளே மற்றும் அஜாஸ் படேல் ஆகியோர் ஒரு டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ALSO READ: Ranji Trophy: ஒரே இன்னிங்ஸில் இரண்டு முச்சதம்.. ரஞ்சி டிராபியில் படைக்கப்பட்ட புதிய வரலாறு..!
முதல் தர கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்:
- 10/20 – பிரேமாங்ஷு சட்டர்ஜி (பெங்கால்) vs அசாம் (1956-57) – ரஞ்சி டிராபி
- 10/46 – தேபாஷிஷ் மொஹந்தி (கிழக்கு மண்டலம்) vs தெற்கு மண்டலம் (2000-01) – துலீப் டிராபி
- 10/49 – அன்ஷுல் கம்போஜ் (ஹரியானா) vs கேரளா (2024-25) ரஞ்சி டிராபி
- 10-74 – அனில் கும்ப்ளே (இந்தியா) vs பாகிஸ்தான் (1999) டெஸ்ட் போட்டி
- 10/78 – பிரதீப் சுந்தரம் (ராஜஸ்தான்) vs விதர்பா (1985–86) ரஞ்சி டிராபி
- 10/78 – சுபாஷ் குப்தே (மும்பை) vs பஹவல்பூர் XI (1954-55)