5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ICC Champions Trophy 2025: இந்திய ரசிகர்களை கவர பாகிஸ்தான் புதிய யுக்தி.. சாம்பியன் டிராபியில் பங்கேற்குமா இந்திய அணி?

Champions Trophy: சாம்பியன் டிராபிக்காக இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதா இல்லையா என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். 2008-ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்திய அணி இதுவரை பாகிஸ்தான் சென்று எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை.

ICC Champions Trophy 2025: இந்திய ரசிகர்களை கவர பாகிஸ்தான் புதிய யுக்தி.. சாம்பியன் டிராபியில் பங்கேற்குமா இந்திய அணி?
இந்தியா – பாகிஸ்தான் (Image: GETTY)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 02 Nov 2024 11:23 AM

அடுத்த ஆண்டு பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெறவுள்ளது. 2025ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன் டிராபியில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்குமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு இல்லாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் பிசிசிஐ அனுப்ப மறுக்கிறது. இருப்பினும், சாம்பியன் டிராபி போட்டியில் விளையாட இந்திய அணி, பாகிஸ்தான் நாட்டிற்கு வரும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ALSO READ: IND vs NZ: சர்ச்சையான சிராஜ் பேட்டிங் ஆர்டர்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் நைட் வாட்ச்மேன் என்றால் என்ன..?

இந்திய ரசிகர்களுக்கு சிறப்பு சலுகை:

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளைக் காண தங்கள் நாட்டுக்கு வர விரும்பும் இந்திய ரசிகர்களுக்கு விரைவான விசா வழங்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும், மத்திய அமைச்சருமான மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை காண ஏராளமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களும், ஆர்வலர்களும் பாகிஸ்தானுக்கு வருவார்கள். இந்திய ரசிகர்கள் பாகிஸ்தானுக்கு வந்து லாகூரில் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியை காண வேண்டும். இதற்காக, இந்திய ரசிகர்களுக்கு சிறப்பு டிக்கெட் ஒதுக்கீடு செய்து, விரைவில் விசா வழங்க உரிய நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

2025 சாம்பியன் டிராபி இடம் மாற்றமா..?

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நீண்ட காலமாக நல்லுறவு இல்லை. இதனால், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு எந்த தொடர்களிலும் விளையாடுவது கிடையாது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஐசிசி நடத்தும் போட்டிகள் மற்றும் ஆசிய கோப்பையில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில், 2025 சாம்பியன் டிராபி போட்டியை ஹைபிரிட் மாடலில் நடத்த பிசிசிஐ கோரிக்கை வைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டால், இந்திய அணி தனது அனைத்து குரூப் ஸ்டேஜ் போட்டிகளிலும் இலங்கை அல்லது துபாய் ஸ்டேடியங்களில் விளையாடும். அதனை தொடர்ந்து, இந்திய அணி அரையிறுதிக்கு வந்தாலும், ஸ்டேடியங்கள் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. தற்போது, 2025 சாம்பியன் டிராபியின் அட்டவணையின்படி, இரண்டு அரையிறுதி போட்டிகளும் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெற இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக இறுதிப் போட்டியும் லாகூரில் திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை இந்திய அணி இறுதிப் போட்டிக்கு சென்றாலும், இறுதிப் போட்டி லாகூரில் இருந்து பாகிஸ்தானுக்கு வெளியே நடத்தப்படலாம். கிடைத்த தகவலின்படி இறுதிப் போட்டி துபாயில் நடைபெறும் என தெரிகிறது. ஆனால், இந்தப் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி இன்னும் ஏற்றுகொள்ளவில்லை.

ALSO READ: IPL 2025: தக்கவைத்த பிறகு எந்த அணியிடம் எவ்வளவு தொகை..? கல்லா கட்ட போகும் ஏலம்!

பாகிஸ்தான் தயாரித்த வரைவு அட்டவணையின்படி, இந்திய அணி தனது அனைத்து போட்டிகளையும் லாகூரில் விளையாட இருக்கிறது. அதன்படி, இந்திய அணி தனது தல் போட்டியில் வங்கதேசத்தை பிப்ரவரி 20ம் தேதி எதிர்கொள்கிறது. அதன்பிறகு, பிப்ரவரி 23-ம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விளையாடுகிறது. இதேவேளை, குரூப் ஸ்டேஜில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி மார்ச் 1ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

சாம்பியன் டிராபிக்காக இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதா இல்லையா என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். 2008-ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்திய அணி இதுவரை பாகிஸ்தான் சென்று எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. 2007-க்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையே டெஸ்ட் தொடரும் நடைபெறவில்லை. கடைசியாக பாகிஸ்தான் அணி, கடந்த 2013ம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. அதன்பிறகு, பாகிஸ்தான் அணி கடந்த 2023 ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்றது.

Latest News