ICC Champions Trophy 2025: குறைந்தது ஒரு போட்டியாவது விளையாடுங்கள்.. இந்தியாவிடம் இறங்கிவந்த பாகிஸ்தான் வாரியம்!

India vs Pakistan: 2023 ஆசியக் கோப்பை பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்திய அணி ஹைப்ரிட் மாடலில் இறுதிப் போட்டி உள்பட அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடியது. அதன்படியே, இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் தங்களது போட்டிகள் அனைத்தையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கையில் நடத்த ஐசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளது.

ICC Champions Trophy 2025: குறைந்தது ஒரு போட்டியாவது விளையாடுங்கள்.. இந்தியாவிடம் இறங்கிவந்த பாகிஸ்தான் வாரியம்!

இந்தியா - பாகிஸ்தான் (Image: GETTY)

Published: 

15 Nov 2024 11:14 AM

2025 ஐசிசி சாம்பியன் டிராபி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைக்கு இன்னும் ஐசிசியால் கூட தீர்வு காணப்படவில்லை. இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்து வரும் ஈகோ பிரச்சனையால், ஐசிசி இப்போது இக்கட்டான சூழலில் தத்தளித்து வருகிறது. அதாவது, ஒருபுறம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இந்த போட்டிக்கு இந்திய அணியை அனுப்பக்கூடாது என இந்திய அரசு உறுதியாக உள்ளது. அதேநேரத்தில், இந்த போட்டியை ஹைபிரிட் முறையில் நடத்த பாகிஸ்தான் அரசும் மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்த இந்த போட்டிக்கான அட்டவணையை ஐசிசி இன்னும் வெளியிடாமல் வைத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை பொறுத்தவரை சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக, பாகிஸ்தான் எந்த சூழ்நிலையிலும் இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பை கைவிடாது. அதேநேரத்தில், இந்திய அரசும் இந்திய வீரர்களின் பாதுகாப்பு விஷயங்களை கருத்தில்கொண்டு தீர்மானமாக உள்ளது.

ALSO READ: Border Gavaskar Trophy: பார்டர்-கவாஸ்கர் டிராபியில் கேப்டனாக அதிக வெற்றிகள்.. முதலிடத்தில் இந்திய கேப்டனா..?

பாகிஸ்தானின் புதிய ஃபார்முலா:

சாம்பியன்ஸ் டிராபி 2025ல் இந்திய அணி விளையாடவில்லை என்றால் அது ஐசிசி ஈடுசெய்ய முடியாத இழப்பை தரும். அதேநேரத்தில், பாகிஸ்தானிடம் இருந்து போட்டியை நடத்தும் உரிமை பறிக்கப்பட்டால், அதற்கு சுமார் 1800 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். இதையடுத்து, போட்டி அட்டவணையில் சில மாற்றங்களை செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதன்படி, இந்திய அணி தனது 3 குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் பாகிஸ்தான் ஸ்டேடியத்தில் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த போட்டியும் இந்தியாவிற்கு மிக அருகில் உள்ள லாகூரில் இருக்கும் கடாபி ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படி இந்திய அணி விளையாடினால், குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் உள்ள மீதமுள்ள ஆட்டங்களில் இந்திய அணி ஹைப்ரிட் வடிவத்தில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறது. ஒரு வேளை இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறினால், இந்த போட்டியும், ஹைப்ரிட் வடிவத்திலும், இறுதிப் போட்டிக்கு வந்தால் மீண்டும் பாகிஸ்தானில் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியிட்டுள்ள வரைவு அட்டவணையின்படி, 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி லாகூரில் நடைபெறும். இது எக்காரணத்தை கொண்டும் மாற்றப்படாது. முன்னதாக, 2023 ஆசியக் கோப்பை பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்திய அணி ஹைப்ரிட் மாடலில் இறுதிப் போட்டி உள்பட அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடியது. அதன்படியே, இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் தங்களது போட்டிகள் அனைத்தையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கையில் நடத்த ஐசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில், பிசிபியின் புதிய திட்டத்தை பிசிசிஐ ஏற்குமா இல்லையா என்பதுதான் அனைவரின் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசி வரலாற்றில் இதுவே முதல் முறை:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை துபாயில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு அனுப்பியது. இப்போது, இந்த கோப்பையானது நாளை முதல் பாகிஸ்தான் முழுவதும் ரசிகர்களின் பார்வைக்காக சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் கோப்பை சுற்றுப்பயணம் இஸ்லாமாபாத்தில் நவம்பர் 16-ம் தேதி தொடங்குகிறது. இதில் ஸ்கார்டு, முரி, ஹன்சா, முசாபராபாத் போன்ற இடங்கள் அடங்கும். கோப்பை சுற்றுப்பயணம் நவம்பர் 16 முதல் நவம்பர் 24 வரை நடைபெறும். இதற்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் 2025 பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெற இருக்கிறது.

ALSO READ: Border-Gavaskar Trophy: நெருங்கும் பார்டர் – கவாஸ்கர் டிராபி.. பல சாதனைகளை குவிக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்!

சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை நவம்பர் 11 ஆம் தேதி லாகூரில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இன்னும் இந்திய அணி, பாகிஸ்தான் பிரச்சனை தீர்க்கப்படாததால் ஐசிசி அட்டவணையை இறுதி செய்து அதை அறிவிக்க முடியவில்லை. வழக்கமாக போட்டி அட்டவணை குறைந்தது 100 நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்படும். இதற்குப் பிறகுதான் கோப்பை சுற்றுப்பயணம் தொடங்கும். ஆனால், இந்த முறை போட்டியின் அட்டவணை அறிவிக்கப்படாமலே கோப்பை சுற்றுப்பயணம் மேற்கொள்வது ஐசிசி வரலாற்றில் இதுவே முதல் முறையாக நடைபெறவுள்ளது.

தோல்வியில் இருந்து எளிதாக மீள்வது எப்படி?
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்!
கிராம்பை வாயில் வைத்து தூங்கலாமா?
3 வேளை சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?