India Vs Pakistan: இந்தியாவின் கோரிக்கைக்கு அடிபணிய வேண்டாம்.. சாம்பியன்ஸ் டிராபியில் தலையிட்ட பாகிஸ்தான் அரசு!

ICC Champions Trophy: இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இதன் காரணமாக, இரு நாட்டு கிரிக்கெட் அணிகளும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இருதரப்பு தொடர்களில் பங்கேற்கவில்லை. இருப்பினும், உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் மட்டுமே மோதி வருகிறது.

India Vs Pakistan: இந்தியாவின் கோரிக்கைக்கு அடிபணிய வேண்டாம்.. சாம்பியன்ஸ் டிராபியில் தலையிட்ட பாகிஸ்தான் அரசு!

பாபர் அசாம் - ரோஹித் சர்மா (Image: twitter)

Published: 

13 Nov 2024 10:49 AM

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பாகிஸ்தானில் நடத்துவது குறித்து நாளுக்குநாள் பிரச்சனை அதிகரித்து வருகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்றால் இந்திய அணி பங்கேற்காது என்றும், பாகிஸ்தானை தவிர வேறு எங்கும் போட்டியை நடத்த மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் உறுதியாக இருந்து வருகிறது. இந்தநிலையில், சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை துபாய்க்கு மாற்ற வேண்டும் என பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்க வேண்டாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த உறுதி நிலைபாடு சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவதில் சிக்கலை உண்டாக்கும். முன்னதாக, பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடத்தினால் இந்திய அணி பங்கேற்காது என ஐசிசியிடம் சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ தெரிவித்தது. மேலும், இந்திய அணியின் போட்டிகளை நடுநிலையான இடங்களான துபாய் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ: Team India: விரைவில் தந்தையாக போகும் 3 இந்திய கிரிக்கெட் வீரர்கள்.. யார் அவர்கள்?

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு:

பிசிசிஐ கோரிக்கையின்படி, ஹைபிரிட் முறையில் போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐசிசி அறிவித்துள்ளது. மேலும், துபாய் அல்லது இலங்கையில் இந்திய அணியின் போட்டிகளை நடத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில், ஹைபிரிட் மாடலில் போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயாராக இல்லாத நிலையில், இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க பாகிஸ்தான் அரசை அணுகியது.

அப்போது, பாகிஸ்தான் அரசானது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெளிவான பதில் ஒன்றை கூறியுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றது. அதில், எக்காரணம் கொண்டும் இந்தியாவின் கோரிக்கைக்கு அடிபணிய மாட்டோம் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிசிபி அதிகாரி ஒருவர் பேசுகையில், “ பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் எந்த போட்டியையும் வேறு நாட்டில் நாங்கள் நடத்த மாட்டோம். நேரம் வரும்போது எங்களது உறுதியான நிலைப்பாட்டை அறிவிப்போம். தற்போது, ​​இந்தியாவின் முடிவு குறித்து ஐசிசி தெரிவித்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் உரிமை எங்களிடம் உள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு வெளியே போட்டிகளை நடத்தும் எண்ணம் இல்லை. மேலும் இந்தியாவின் கோரிக்கைக்கு அடிபணிய வேண்டாம் என்றும் அரசு கூறியுள்ளது. எனவே, சாம்பியன்ஸ் டிராபி முழுவதையும் பாகிஸ்தானில் நடத்த உள்ளோம்” என்று தெரிவித்தார்.

மறுத்தால் என்ன நடக்கலாம்..?

பாகிஸ்தான் கிரிக்கெட் வரியம் ஹைபிரிட் மாடலில் நடத்த தயாராக இல்லை என்றால், சாம்பியன்ஸ் டிராபியை நடத்து உரிமையை இழக்கலாம். இதனால், வேறு நாட்டில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் உரிமையை ஐசிசி வழங்கும். சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் உரிமையை இழந்தால், முழுப் போட்டியிலிருந்தும் விலக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், பாகிஸ்தான் நாட்டில் மட்டுமே ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் என ஐசிசி அறிவித்தால், இந்திய அணி போட்டியில் இருந்து விலகும். இதனால், மிகப்பெரிய நிதி இழப்பு அபாயம் ஏற்படும். இதை கருத்தில் கொண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை அறிய ஆர்வமாக உள்ளது.

இந்தியா – பாகிஸ்தான்:

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இதன் காரணமாக, இரு நாட்டு கிரிக்கெட் அணிகளும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இருதரப்பு தொடர்களில் பங்கேற்கவில்லை. இருப்பினும், உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் மட்டுமே மோதி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் ஐசிசி போட்டிகளிலும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடவில்லை என்றால் ரசிகர்களும் சரி, பொருளாதார சூழலிலும் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும்.

எவ்வளவு நிதி இழப்பு ஏற்படும்..?

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் மூலம் ஐசிசி அதிக பணத்தை சம்பாதிக்கிறது. அதாவது இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் ஒரு வினாடிக்கு ரூ.4 லட்சம் பணத்தை ஐசிசி பெற்றது. இதன்மூலம், முழுப் போட்டியிலும் ஐசிசி எவ்வளவு பணத்தை பெறும் என்பதை யோசித்து பாருங்கள். ஒளிபரப்பு மட்டுமின்றி, ஐசிசி பெறும் ஸ்பான்சர்ஷிப்பில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியும் பெரும் பங்கு வகிக்கிறது. 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியின் மூலம் ஐசிசி சுமார் $25 மில்லியன் சம்பாதித்தது.

ALSO READ: Border Gavaskar Trophy: பார்டர்-கவாஸ்கர் டிராபி வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர் இவரா..? அப்போ! விராட் கோலி எத்தனையாவது இடம்?

ஐசிசி இதுபோன்று பெறும் பணத்தை கொண்டுதான் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே போன்ற பல கிரிக்கெட் வாரியங்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. இதனால், சிறு கிரிக்கெட் வாரியங்களின் வருமானமும் பாதிக்கப்படும். இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி பொழுதுபோக்கிற்கும் உற்சாகத்திற்கும் மட்டுமல்ல, கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் முக்கியமானது என்பது தெளிவாகிறது.

 

கொசுவர்த்தி சுருள் ஏற்படுத்தும் பாதிப்புகள்...
செலரி ஜூஸ் குடிப்பதினால் கிடைக்கும் நன்மைகள்!
குளிர்காலத்தில் மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
முடி உதிர்வை தடுக்கும் 7 வீட்டு சமையலறை பொருட்கள்..!