5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

WTC Final 2025: லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்.. தேதியை அறிவித்த ஐசிசி!

ICC: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இரண்டு சீசன்கள் இதுவரை விளையாடப்பட்டுள்ளன. முதல் சீசன் 2019 முதல் 2021 வரை நடைபெற்றது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மற்றொரு ஐசிசி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது. அதேபோல், 2023ம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில், இந்திய அணி தோல்வியை சந்தித்தது. 

WTC Final 2025: லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்.. தேதியை அறிவித்த ஐசிசி!
ஆஸ்திரேலியா (Image: ICC/ Twitter)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 03 Sep 2024 16:39 PM

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025ன் இறுதி போட்டிக்கான தேதியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் மூன்றாவது சீசன் லாட்ர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் ஜூன் 16ம் தேதி ரிசர்வ் நாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இது மூன்றாவது இறுதிப் போட்டியாகும். வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் முதல் முறையாக நடைபெறவுள்ளது.

ALSO READ: IPL 2025: ஐபிஎல் 2025ல் இம்பேக்ட் பிளேயர் விதி இல்லையா? பிசிசிஐ தீவிர ஆலோசனை!

இதுகுறித்து ஐசிசி தலைவர் வெளியிட்ட அறிக்கையில், “ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கிரிக்கெட் உலகில் மிக குறுகிய காலத்தில், அதிகமாக பேசப்பட்ட ஒரு நிகழ்வாகும். எனவே, இதற்கான தேதியை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். 2025ம் ஆண்டின் இறுதிப் போட்டி உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் அதிகரித்து வரும் ஈர்ப்புக்கு ஒரு அங்கீகாரமாகும். இது ரசிகர்களை வெறித்தனமாக ஆக்கியுள்ளது. எனவே அடுத்த ஆண்டு போட்டிக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இரண்டு சீசன்கள் இதுவரை விளையாடப்பட்டுள்ளன. முதல் சீசன் 2019 முதல் 2021 வரை நடைபெற்றது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மற்றொரு ஐசிசி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது. அதேபோல், 2023ம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில், இந்திய அணி தோல்வியை சந்தித்தது.  இதன் காரணமாக, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா முறையே 2021 மற்றும் 2023 இல் இந்த பட்டத்தை வென்றுள்ளன. இரண்டு முறையும் இந்தியா இறுதிப் போட்டியில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கடந்த 2021ம் ஆண்டு சவுத்தாம்ப்டனில் முதல் முறையாக நடைபெற்றது. அதே நேரத்தில், இரண்டாவது நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

ALSO READ: Paralympics 2024: பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்.. பேட்மிண்டனில் கலக்கிய நிதேஷ் குமார்..!

2025 இறுதிப் போட்டி எந்த அணிகளுக்கு இடையே நடைபெறும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தற்போது புள்ளிப்பட்டியலில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளன. அதே நேரத்தில், நியூசிலாந்து மூன்றாவது இடத்திலும், இங்கிலாந்து நான்காவது இடத்திலும், இலங்கை ஐந்தாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா ஆறாவது இடத்திலும், வங்கதேசம் ஏழாவது இடத்திலும் உள்ளன.

இன்னும் சில மாதங்களில் அனைத்து அணிகளும் அதிக அளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில், அதன் பிறகு எந்தெந்த அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடிக்கிறதோ, அந்த அணி வருகின்ற 2025ம் ஆண்டு லார்ட்ஸில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும்.

Latest News