5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Oman vs UAE: 6 பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து டக் அவுட்! கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனை..!

ICC CWC League 2: 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணி முதல் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. ஆமிர் கலீம் 32 ரன்களும், ஹமீத் மிர்சா 20 ரன்களும் எடுத்து அவுட்டாக, அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் ஓமன் அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.

Oman vs UAE: 6 பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து டக் அவுட்! கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனை..!
ஓமன் vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (Image: UAE/TWITTER)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 08 Nov 2024 18:51 PM

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் 2 சுற்றில் ஓமன் அணி இதுவடை சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக்2ன் 46 வது போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஓமன் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் நீண்ட நேரம் கூட கிரீஸில் நிற்கவில்லை. இதனால், மோசமான சாதனையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி படைக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

ALSO READ: Border Gavaskar Trophy: பார்டர்-கவாஸ்கர் டிராபியில் அதிக முறை டக் அவுட்! யார் அந்த இந்திய வீரர்..?

6 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்:

ஓமனில் உள்ள அல் எமிரேட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த முடிவே ஓமன் அணிக்கு சாதகமாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 25.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து 78 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியில் அதிகபட்சமாக அலி நசீர் 21 ரன்கள் எடுத்திருந்தார். இந்த இன்னிங்ஸின்போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 6 பேட்ஸ்மேன்கள் ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் டக் அவுட் ஆகி வெளியேறினர். இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் 6 பேட்ஸ்மேன்கள் ஒருநாள் போட்டியில் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பியது இது ஆறாவது முறையாக அமைந்தது. இதற்குமுன்பு, இந்த மோசமான சாதனையை பாகிஸ்தான், ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா அணிகள் படைத்துள்ளன.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணியின் மூன்று முறை இந்த மோசமான சாதனையை படைத்துள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தலா ஒரு முறை பதிவு செய்துள்ளது.

எந்தெந்த வீரர்கள் டக் அவுட்:

ஓமனுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இன்னிங்ஸில் ஆர்யன்ஷ் சர்மா, விஷ்ணு சுகுமாரி, கேப்டன் ராகுல் சோப்ரா, அயன் கான், துருவ் பராஷர், ராகுல் பாட்டியா ஆகியோர் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர்.

போட்டியில் நடந்தது என்ன..?

டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 26 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. இதில், 6 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டாகினர். மற்ற பேட்ஸ்மேன்களாக முகம்து வாசிம் 13 ரன்களிலும், அரவிந்த் 11 ரன்களிலும், அலி நசீர் 21 ரன்களிலும், பசில் ஹமீத் 12 ரன்களிலும், ஜூனைத் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஓமன் தரப்பில் ஷகீல் அகமது அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். மேலும், ஜெய் ஒரேடா 2 விக்கெட்டுகளும், முசாஹிர் ரசா மற்றும் சமய் ஸ்ரீவஸ்தவா தலா 1 விக்கெட்டும் எடுத்திருந்தனர்.

ALSO READ: Ind vs SA 1st T20: திடீரென குறுக்கிட்ட மழை.. இந்தியா- தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டி நடைபெறுமா..?

79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணி முதல் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. ஆமிர் கலீம் 32 ரன்களும், ஹமீத் மிர்சா 20 ரன்களும் எடுத்து அவுட்டாக, அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் ஓமன் அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தரப்பில் பாசில் ஹம்மீத் 3 விக்கெட்டும், அப்சல் கான் 2 விக்கெட்டும், துருவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Latest News