ICC Women T20 World Cup 2024: கோலாகலமாக தொடங்கிய மகளிர் டி20 உலகக் கோப்பை.. இந்தியா எப்போது, யாருடன் மோதுகிறது..?
Indian Women Team: இந்தியா இந்த ஆண்டு 7 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது. இதில், நான்கு போட்டிகளில் வெற்றியும், மூன்று போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. மேலும், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் (செப்டம்பர் 29) மற்றும் தென்னாப்பிரிக்கா (அக்டோபர் 1) ஆகிய அணிகளுக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
2024 மகளிர் டி20 உலகக் கோப்பை இம்முறை துபாய் மண்ணில் நடைபெறவுள்ளது. மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 முன்னதாக வங்கதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அரசியல் அமைதியின்மை காரணமாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ஐசிசி உலகக் கோப்பை போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றியது. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 7வது முறையாக கோப்பையை வெல்ல முயற்சிக்கும். அதே சமயம் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல கடினமாக முயற்சிக்கும். லீக் போட்டிகளில் பங்கேற்கும் 10 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றிலும் 5 அணிகள் இடம்பெறும்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் குரூப் – ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அதேநேரத்தில், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் குரூப் பியில் இடம்பெற்றுள்ளன. இன்று வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடங்குகிறது. இந்தநிலையில், 2024 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி எந்த அணியுடன் முதல் போட்டியில் விளையாடுகிறது..? மற்ற அணிகளுடன் எப்போது விளையாடுகிறது உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம்.
2024 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அட்டவணை:
- அக்டோபர் 4 – இந்தியா vs நியூசிலாந்து, துபாய் சர்வதேச ஸ்டேடியம், துபாய் (இந்திய நேரப்படி இரவு 7.30 மணி)
- அக்டோபர் 6 – இந்தியா vs பாகிஸ்தான், துபாய் சர்வதேச மைதானம், துபாய் (இந்திய நேரப்படி பிற்பகல் 3.30)
- அக்டோபர் 9 – இந்தியா vs இலங்கை, துபாய் சர்வதேச ஸ்டேடியம், துபாய் (இந்திய நேரப்படி இரவு 7.30 மணி)
- அக்டோபர் 13 – இந்தியா vs ஆஸ்திரேலியா, ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம், ஷார்ஜா (இந்திய நேரப்படி இரவு 7.30)
இந்தியா இந்த ஆண்டு 7 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது. இதில், நான்கு போட்டிகளில் வெற்றியும், மூன்று போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. மேலும், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் (செப்டம்பர் 29) மற்றும் தென்னாப்பிரிக்கா (அக்டோபர் 1) ஆகிய அணிகளுக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. இதையடுத்து, அடுத்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
மகளிர் டி20 உலகக் கோப்பை 2024ன் நேரடி ஒளிபரப்பு இந்தியாவில் எந்த சேனல்களில் பார்க்கலாம்..?
இந்தியாவில் 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றுள்ளது. இதையடுத்து, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் டிவியில் பார்க்கலாம். மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு டிஸ்னி+ஹாட்ஸ்டாரிலும் ரசிகர்கள் நேரடியாக கண்டு களிக்கலாம்.
ALSO READ: Babar Azam: கேப்டன் பதவியில் இருந்து விலகிய பாபர் அசாம்.. பாகிஸ்தான் அணியின் அடுத்த கேப்டன் யார்..?
2024 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேம்லதா, ஆஷா ஷோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், சஜ்னா சஜீவன்.
மகளிர் டி20 உலகக் கோப்பையை இதுவரை அதிக முறை வென்றது யார்..?
கடந்த 2009ம் ஆண்டு முதல் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 பதிப்புகள் நடந்துள்ள நிலையில், இன்று முதல் 9 பதிப்பு தொடங்குகிறது. இதுவரை நடந்த 8 பதிப்புகளில் பலம் மிக்க ஆஸ்திரேலிய அணி 6 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா ஒருமுறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்திய மகளிர் அணி இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. கடந்த