ICC Women T20 World Cup 2024: மகளிர் டி20 உலகக் கோப்பை இன்று தொடக்கம்… டூடுலில் சிறப்பு கௌரவம் செய்த கூகுள்!
Google Doodle Today: ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024ன் முதல் போட்டி இன்று வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த போட்டியானது பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தநிலையில், ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பை மற்றும் பெண் கிரிக்கெட் வீராங்கனைகளை கௌரவப்படுத்தும் விதமாக கூகுள் ஆக்கப்பூர்வமான மற்றும் வண்ணமயமான டூடுலை உருவாக்கியுள்ளது.
2024 மகளிர் டி20 உலகக் கோப்பை இன்று முதல் பிரமாண்டமாக தொடங்குகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2024ம் ஆண்டு மகளிர் டி20 உலகக் கோப்பையின் 9வது பதிப்பை நடத்த உள்ளது. இதில் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இந்தியா உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024ன் முதல் போட்டி இன்று வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த போட்டியானது பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தநிலையில், ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பை மற்றும் பெண் கிரிக்கெட் வீராங்கனைகளை கௌரவப்படுத்தும் விதமாக கூகுள் ஆக்கப்பூர்வமான மற்றும் வண்ணமயமான டூடுலை உருவாக்கியுள்ளது.
ALSO READ: Food Recipes: காலை ஸ்நாக்ஸாக சாப்பிட சூப்பர் டிஸ்.. பனீர் சீஸ் கட்லெட் ஈஸியா இப்படி செய்து கொடுங்க!
கூகுள் டூடுலில் உள்ள சிறப்பு என்ன..?
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு இன்று உருவாக்கப்பட்டுள்ள இந்த வண்ணமயமான டூடுலில், ஆடுகளத்தில் பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகள் இருக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மகளிர் வீராங்கனை பேட்டிங் செய்வதும் போன்றும், மற்றொரு வீராங்கனை கேட்ச் எடுப்பது போன்றும், மூன்றாவது வீராங்கனை விக்கெட் வீழ்த்துவது போன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், கூகுளில் O என்ற வார்த்தை கிரிக்கெட் வந்தையும் குறிக்கிறது.
கூகுள் டூடுல் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, இன்றைய சூடுலில் 2024 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதை குறிக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு தொடங்கிய மகளிர் டி20 உலகக் கோப்பையானது, இன்று தொடங்கும் உலகக் கோப்பையோடு சேர்த்து ஒன்பதாவது பதிப்பாகும். ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 6 முறையும், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தலா ஒரு முறையும் வென்றுள்ளன.
இந்தியாவிற்கு எப்போது போட்டிகள் நடைபெறுகிறது..?
இந்தியாவின் முதல் ஆட்டம் வெள்ளிக்கிழமையான நாளை (அக்டோபர் 4) நியூசிலாந்திற்கு எதிராக தொடங்குகிறது. தொடர்ந்து, இந்திய மகளிர் அனி பாகிஸ்தான் எதிராக வருகின்ற 6ம் தேதியும், இலங்கைக்கு எதிராக வருகின்ற 9ம் தேதியும் களமிறங்குகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் துபாய் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது, அதேபோல், வருகின்ற அக்டோபர் 13ம் தேதி ஷார்ஜா ஸ்டேடியத்தில் பலம் மிக்க ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி சந்திக்கிறது.
வெற்றிபெறும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை..?
வருகின்ற ஐசிசி போட்டிகளில் இருந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு, ஆண் கிரிக்கெட் அணிக்கு இணையான பரிசுத் தொகை வழங்கப்படும் என ஐசிசி அறிவித்திருந்தது. அதன்படி, ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையான பரிசுத் தொகை வழங்கப்படும் முதல் ஐசிசி நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மகளிர் உலகக் கோப்பையில் வெற்றி பெறும் அணிக்கு 2.34 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு தொகை வழங்கப்படவுள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் தலா 5 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவும், பாகிஸ்தான் அணியும் ஒரே அணியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
குழு ஏ: ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை
குழு பி: வங்கதேசம், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்
மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மற்றும் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை தவிர, இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் போட்டி மட்டும் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது.
மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அனி விவரம்:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேம்லதா, ஆஷா ஷோபானா, ராதா, ஸ்ரேயங்கா பாட்டீல், சஜ்னா சஜீவன்
காத்திருப்பு வீராங்கனைகள்: உமா செத்ரி (விக்கெட் கீப்பர்), தனுஜா கன்வார், சைமா தாகூர்