ICC Equal Prize Money: கிரிக்கெட்டில் இனி அனைத்தும் சமம் என நிரூபித்த ஐசிசி.. உலகக் கோப்பையில் சமமான பரிசுத் தொகை அறிவிப்பு!
World Cups: 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை முதல் ஆடவர் மற்றும் பெண்கள் உலகக் கோப்பை வெற்றியாளர்களுக்கு சமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆடவர் கிரிக்கெட்டுக்கு இணையாக மகளிர் கிரிக்கெட்டை ஐசிசி உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக இனிமேல் ஐசிசி போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு வழங்கப்படும் அதே பரிசுத் தொகை மகளிர் கிரிக்கெட்டுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2024 மகளிர் உலகக் கோப்பையுடன் இது தொடங்கவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அடுத்த மாதம் நடைபெறும் மகளிர் டி20 உலகக் கோப்பை முதல் ஆடவர் மற்றும் பெண்கள் உலகக் கோப்பை வெற்றியாளர்களுக்கு சமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆடவர் கிரிக்கெட்டுக்கு இணையாக மகளிர் கிரிக்கெட்டை ஐசிசி உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக இனிமேல் ஐசிசி போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு வழங்கப்படும் அதே பரிசுத் தொகை மகளிர் கிரிக்கெட்டுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2024 மகளிர் உலகக் கோப்பையுடன் இது தொடங்கவுள்ளது. இதையடுத்து, மகளிர் டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் மகளிர் அணிக்கு 2.34 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும். முன்னதாக, கடந்த ஜூலை 23ம் தேதி நடந்த ஐசிசி ஆண்டு மாநாட்டின்போது ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின் வெற்றியாளருக்கு சமமான பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய ஆண்கள் அணிக்கு 2.45 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. ஐசிசி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வருகின்ற 2030 ஆண்டுகளுக்குள் ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு சமமான பரிசுத்தொகை வழங்க முயற்சி செய்யப்படும் என தெரிவித்தது. ஆனால், 7 ஆண்டுகளுக்கு முன் அதாவது இந்த 2024 ஆண்டு முதலே மகளிர் டி20 உலகக் கோப்பையில் இருந்து ஐசிசி அமல் படுத்தி அசத்தியுள்ளது.
கடந்த உலகக் கோப்பையை விட பரிசுத்தொகை எவ்வளவு அதிகம்..?
ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மகளிர் டி20 உலகக் கோப்பையில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத் தொகையாக 2.34 மில்லியன் டாலராக இன்று ஐசிசி அறிவித்தது. இது கடந்த 2023ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பெற்ற பரிசுத்தொகையை விட 134% அதிகமாகும்.
The stakes just got higher 🚀
Biggest-ever prize money pool announced for ICC Women’s #T20WorldCup 2024 👇https://t.co/CSuMLPjbwV
— ICC (@ICC) September 17, 2024
இரண்டாம் பிடிக்கும் அணிக்கு கடந்த மகளிர் உலகக் கோப்பையில் இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையை விட 134% அதிகமாகும்.
அதன்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு இதுவரை இல்லாத வகையில் 1 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் டாலர் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. இதன்படி 2024 மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு குறைந்தபட்சம் 24 லட்சத்து 34 ஆயிரம் டாலர்கள் அதாவது ரூ.19.59 கோடி கிடைக்கும். அதே சமயம் பைனலில் தோற்று இரண்டாவது இடம் பிடிக்கும் அணியின் ரூ.10.64 கோடி வழங்கப்படும்.
இது தவிர அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகளுக்கும் தலா ரூ.6.55 கோடியும், சூப்பர்-8ஐ எட்டும் ஒவ்வொரு அணிக்கும் ரூ.3.18 கோடியும் வழங்கப்படும். இது தவிர, ஒவ்வொரு குழுவிலிருந்தும் மூன்றாம் இடம் பெறும் அணிகளுக்கு ரூ.2.06 கோடியும், மீதமுள்ள அணிகளுக்கு ரூ.1.87 கோடியும் வழங்கப்படும்.
மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு இதுவரை வழங்கப்பட்ட பரிசுத்தொலையில், இது மிகப் பெரிய பரிசுத் தொகையாக இருக்கும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
2024 டி20 மகளிர் உலகக் கோப்பை:
ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள 2024 மகளிர் டி20 உலகக் கோப்பையில் 10 அணிகள் பங்கேற்கிறது. இதில், தலா ஐந்து அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. அதேசமயம், குரூப் பியில் வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் ஸ்டேஜ் அக்டோபர் 15ம் தேதி முடிவடையும் நிலையில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.