5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND W vs AUS W: இந்திய அணிக்கு வாழ்வா சாவா போட்டி..! ஆஸ்திரேலியாவை இன்று வீழ்த்துமா ஹர்மன்ப்ரீத் படை?

ICC Womens T20 World Cup: ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளது. இங்கே நியூசிலாந்து அணியின் பங்கு மிகவும் முக்கியமானது. நியூசிலாந்து மகளிர் அணி அதன் அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால், இந்தியா அரையிறுதிக்கு செல்வது மிகவும் கடினமாகி விடும்.

IND W vs AUS W: இந்திய அணிக்கு வாழ்வா சாவா போட்டி..! ஆஸ்திரேலியாவை இன்று வீழ்த்துமா ஹர்மன்ப்ரீத் படை?
இந்தியா – ஆஸ்திரேலியா (Image: GETTY)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 13 Oct 2024 10:47 AM

2024 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி ஷார்ஜாவில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியானது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றால் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்கும். அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் இந்திய அணி கிட்டத்தட்ட வெளியேறிவிடும் அபாயத்தை பெறும்.

நடப்பு உலகக் கோப்பையில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் ஹாட்ரிக் வெற்றிகளை ஆஸ்திரேலிய அணி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளில் 3லிலும் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில், 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்ற இந்திய அணி, ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்து 2வது இடத்தில் இருக்கிறது.

ALSO READ: India vs Bangladesh 3rd T20I: டி20யில் கிட்டத்தட்ட 300.. ஒட்டுமொத்த சாதனையை முறியடித்த இந்திய அணி..!

இதுவரை இரு அணிகளும் நேருக்குநேர்:

இந்திய மகளிர் அணியும், ஆஸ்திரேலிய மகளிர் அணியும் சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 34 போட்டிகளில் நேருக்குநேர் விளையாடியுள்ளன. இதில், அதிகபட்சமாக பலம் மிக்க ஆஸ்திரேலிய அணி 25 முறையும், இந்தியா வெறும் 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவு இல்லாமல் முடிந்துள்ளது.

அதேபோல், டி20 மகளிர் உலகக் கோப்பையில் இரு அணிகளும் 6 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், ஆஸ்திரேலியா 4 முறையும், இந்தியா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

2020ம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவும், இந்திய மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதேசமயம், கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வி அடைந்தது. எனவே, இந்திய அணி இன்று நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று பழிதீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்..?

ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளது. இங்கே நியூசிலாந்து அணியின் பங்கு மிகவும் முக்கியமானது. நியூசிலாந்து மகளிர் அணி அதன் அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால், இந்தியா அரையிறுதிக்கு செல்வது மிகவும் கடினமாகி விடும். நியூசிலாந்து அடுத்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் வென்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தோற்றாலும், பெரிய தோல்வியை சந்திக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் தற்போது இந்திய மகளிர் அணியின் நிகர ரன்-ரேட் நியூசிலாந்து மகளிர் அணியை விட சிறப்பாக உள்ளது.

போட்டியை பற்றிய விவரம்:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இந்த போட்டி இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரவு 7. 30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

போட்டியை எங்கு காணலாம்..?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டு களிக்கலாம். அதேபோல், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஆப் மற்றும் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பையும் நீங்கள் பார்க்கலாம்.

ALSO READ: MS Dhoni: ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா இல்லையா? அனுமதிக்காக மும்பை செல்லும் சிஎஸ்கே நிர்வாகிகள்!

2024 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இரு அணிகளின் விவரம்:

ஆஸ்திரேலிய அணி:

அலிசா ஹீலி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), டார்சி பிரவுன், ஆஷ்லே கார்ட்னர், கிம் கார்த், கிரேஸ் ஹாரிஸ், அலனா கிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், தஹ்லியா மெக்ராத், சோஃபி மோலினக்ஸ், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, மேகன் ஷட், அனாபெல், சதர்லான்ட், டெய்லாமின் ஜார்ஜியா வேர்ஹாம்

இந்திய அணி:

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், டி ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், எஸ் சஜனா

Latest News