5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs PAK Preview: சூடுபிடிக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை.. இன்று பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா.. யாருக்கு வெற்றி?

Women T20 World Cup: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகளில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் இதுவரை 15 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இந்தியா அதிகபட்சமாக 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவை 3 முறை மட்டுமே தோற்கடித்துள்ளது. இருப்பினும், இந்த மூன்று வெற்றிகளில் 2 டி20 உலகக் கோப்பைகளில் இருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

IND vs PAK Preview: சூடுபிடிக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை.. இன்று பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா.. யாருக்கு வெற்றி?
இந்தியா – பாகிஸ்தான் (Image: Matthew Lewis-ICC/ICC via Getty Images)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 06 Oct 2024 09:27 AM

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024ல் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் மோத இருக்கின்றனர். அரையிறுதிக்கு தகுதிபெற வேண்டும் என்றால், ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், அதிகபடியான ரன் ரேட்டை உயர்த்த வேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் 2024 டி20 உலகக் கோப்பையில் தங்களது 2வது போட்டியில் களமிறங்குகின்றன. முன்னதாக, இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் இலங்கையுடன் மோதியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மறுபுறம், இந்தியா தங்களது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்தியாவை நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதல் தோல்விக்கு பின், இன்றைய போட்டியில் இந்திய மகளிர் அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். இந்த சூழலில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

ALSO READ: MS Dhoni: ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா இல்லையா? அனுமதிக்காக மும்பை செல்லும் சிஎஸ்கே நிர்வாகிகள்!

இந்தியா – பாகிஸ்தான் இதுவரை நேருக்குநேர்:

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகளில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் இதுவரை 15 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இந்தியா அதிகபட்சமாக 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவை 3 முறை மட்டுமே தோற்கடித்துள்ளது. இருப்பினும், இந்த மூன்று வெற்றிகளில் 2 டி20 உலகக் கோப்பைகளில் இருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மழைக்கு வாய்ப்பா..?

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இன்று நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டியின்போது துபாயில் வானிலை தெளிவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், 3 சதவீத மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஆனாலும், மழையால் போட்டி ரத்தாக வாய்ப்பு இல்லை.

வெப்பநிலையானது பகலில் சுமார் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், இரவில் 29 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காற்றின் வேகம் மணிக்கு 10 கிமீ முதல் 15 கிமீ வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்:

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி, இந்தியா-பாகிஸ்தான் போட்டி பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கும். போட்டிக்கான டாஸ் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் சற்று மெதுவான தன்மை கொண்டதாகவும், பந்து பழமையானால் நின்று வரும். எனவே, இரு அணிகளின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் இது சாதகமாக அமையலாம். எனவே, இன்றைய போட்டியில் இரு அணிகளின் சுழற்பந்து வீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்தலாம்.

போட்டியை எங்கு காணலாம்..?

2024 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலம் இந்தியாவில் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். போட்டியின் நேரடி ஒளிபரப்பை லைவ்வாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் கண்டு களிக்கலாம்.

ALSO READ: IND vs BAN T20 Squad: வங்கதேச டி20 தொடரில் விலகிய ஷிவம் துபே.. இளம் வீரரை அழைத்த பிசிசிஐ.. காரணம் என்ன..?

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இரு அணிகள் விவரம்:

இந்திய அணி:

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்த்ரகர், தயாளன் ஹேம்லதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், ஸ்ரேயங்கா பாட்டீல், சஜ்னா சஜீவன்.

பாகிஸ்தான் அணி:

பாத்திமா சனா (கேப்டன்), அலியா ரியாஸ், டயானா பெய்க், குல் ஃபிரோஸ், இராம் ஜாவேத், முனிபா அலி, நஷ்ரா சுந்து, நிடா தார், ஒமைமா சோஹைல், சதாப் ஷமாஸ், சித்ரா அமின், சையதா அருப் ஷா, தஸ்மியா ரூபாப், சாடியா இக்பால், துபா ஹசன்.

Latest News