IND W Vs AUS W: கடைசி வரை திக்! திக்! போராடி வீழ்ந்த இந்திய அணி.. கரை சேர்க்க தவறிய கவுர்! - Tamil News | ICC Womens T20 World Cup 2024: India Women vs Australia Women Australia Women won by 9 runs | TV9 Tamil

IND W Vs AUS W: கடைசி வரை திக்! திக்! போராடி வீழ்ந்த இந்திய அணி.. கரை சேர்க்க தவறிய கவுர்!

ICC Women's T20 World Cup: இந்திய அணி வெற்றி பெற 20 ஓவரில் 152 ரன்கள் தேவை முனைப்புடன் களமிறங்கியது. இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IND W Vs AUS W: கடைசி வரை திக்! திக்! போராடி வீழ்ந்த இந்திய அணி.. கரை சேர்க்க தவறிய கவுர்!

ஹர்மன்ப்ரீத் கவுர் (Image: BCCI women)

Updated On: 

13 Oct 2024 23:23 PM

2024 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் 18வது போட்டியில் இன்று அதாவது அக்டோபர் 13ம் தேதி இந்திய மகளிர் அணி மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு இடையே நடைபெற்றது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜோ கிரிக்கெட்டில் நடந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு தஹ்லியா மெக்ராத்தும், இந்திய அணிக்கு ஹர்மன்ப்ரீத் கவுரும் தலைமை தாங்கினர். இந்த போட்டியில் முதல் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் உதவியுடன் 40 ரன்கள் எடுத்திருந்தர். இவரை தவிர, அலிஸ் பெர்ரி மற்றும் கேப்டன் தஹ்லியா மெக்ராத் தலா 32 ரன்கள் எடுத்திருந்தனர்.

ALSO READ: Watch Video: ராம்ப் வாக்கில் ’வாவ்’ சொல்ல வைத்த மனு பாக்கர்.. மாடலிங்கில் மற்றொரு அவதாரம்!

இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் தாக்கூர், தீப்தி சர்மா ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளையும், பூஜா வஸ்த்ரகர், ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 20 ஓவரில் 152 ரன்கள் தேவை என்ற நிலையில் அரையிறுதிக்கு எப்படியாவது முன்னேற  வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியது.

இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகளாக துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும், ஷாபாலி வர்மாவும் களமிறங்கினர். அடுத்து உள்ளே வந்த ஜெமிமாவும் 16 ரன்களில் நடையைக்கட்டினார். இதன் காரணமாக இந்திய அணி 47 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதன்பிறகு, ஹர்மன்ப்ரீத் கவுருடன், தீப்தி சர்மா கூட்டணி அமைத்தார். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் மெதுவாக ரன்களை எடுக்க, அதன்பிறகு தங்களது வேகத்தை கூட்டி பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட தொடங்கினர். இதையடுத்து, ஹர்மன்ப்ரீத் மற்றும் தீப்தி இடையே 63 ரன்களின் முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

ALSO READ: IND vs BAN 3rd T20 All Records: வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அடுக்கப்பட்ட சாதனைகள்.. சம்பவம் செய்த இந்திய அணி..!

இந்திய அணி 110 ரன்கள் எடுத்திருந்தபோது, தூக்கி அடிக்கப்பட்ட தீப்தி ஷர்மா ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனை தொடர்ந்து, சீரான இடைவெளியில் இந்திய அணியின் விக்கெட்கள் விழத் தொடங்கின. ஒருமுறை 3 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, அடுத்த 31 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. மேலும், கடைசி ஓவரின் முதல் பந்தில் ஹர்மன்பிரீத் கடைசி ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்து, நான் ஸ்ட்ரைக் சென்றார். இதுதான் இந்திய அணிக்கு பாதகமாக அமைந்தது. இந்திய அணிக்கு கடைசி 6 பந்துகளில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவர் மட்டும் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்தது. இதுவே இந்திய அணிக்கு தோல்வியை அமைத்து கொடுத்தது.

இதையடுத்து, இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த தோல்வியால் இந்திய அணி அரையிறுதிக்கு செல்வது கடினமாகிவிட்டது. இந்தப் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் அவரால் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. இது தவிர தீப்தி சர்மா 29 ரன்களும், ஷபாலி வர்மா 20 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் 20 ரன்களை தொட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
தண்ணீரின்றி உயிர் வாழும் பாலைவன விலங்குகள் என்னென்ன?
உங்களைச் சுற்றி மகிழ்ச்சியான உறவுகளை உருவாக்குவது எப்படி?
மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் அப்துல் கலாமின் பொன்மொழிகள்...!