ICC Women’s T20 World Cup 2024: இடம் மாற்றப்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை.. வங்கதேசத்தை கைவிட்ட ஐசிசி.. காரணம் என்ன?

ICC: வரவிருக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 இப்போது வங்கதேசத்திற்குப் பதிலாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) நடத்தப்படும் என்று ஐசிசி சமீபத்தில் அறிவித்தது. வங்கதேசத்தில் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வங்கதேச கிரிக்கெட் வாரியமே டி20 உலகக் கோப்பையை நடத்துவதற்கான உரிமையை தக்க வைத்துக் கொள்ளும் எனவும், மேலும் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICC Women’s T20 World Cup 2024: இடம் மாற்றப்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை.. வங்கதேசத்தை கைவிட்ட ஐசிசி.. காரணம் என்ன?

டி20 உலகக் கோப்பை (Image Credit source: Icc X account)

Published: 

21 Aug 2024 11:18 AM

மகளிர் டி20 உலகக் கோப்பை: ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியானது இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. முன்னதாக, இந்த உலகக் கோப்பை போட்டி முழுவதும் வங்கதேசத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது ஐசிசி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, வரவிருக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 இப்போது வங்கதேசத்திற்குப் பதிலாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) நடத்தப்படும் என்று ஐசிசி சமீபத்தில் அறிவித்தது. வங்கதேசத்தில் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வங்கதேச கிரிக்கெட் வாரியமே டி20 உலகக் கோப்பையை நடத்துவதற்கான உரிமையை தக்க வைத்துக் கொள்ளும் எனவும், மேலும் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: Manu Bhaker: ஸ்டாலினை தெரியாது.. தமிழ்நாட்டில் வந்து மனுபாக்கர் சொன்ன பதில்!

ஐசிசி அறிக்கை வெளியீடு:

ஐசிசி தலைமை நிர்வாகி ஜெஃப் அலார்டைஸ் வெளியிட்ட அறிக்கையில், ”வங்கதேசத்தில் உலகக் கோப்பை போட்டியை நடத்த முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது, ஏனெனில் இந்த நிகழ்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் செய்திருந்தது. ஆனால், வங்கதேசத்தில் வன்முறை நடப்பதால் பல பங்கேற்கும் அணிகளின் அரசாங்கங்கள் அங்கு செல்வது குறித்து தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தன. இதன் காரணமாக இது சாத்தியமில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வங்கதேச கிரிக்கெட் வாரியம் தனது ஹோஸ்டிங் உரிமையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதன்படி, வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் பார்வையில் மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர் 3 முதல் 20 வரை துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஷார்ஜாவில் நடைபெறும். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு இலங்கை மற்றும் ஜிம்பாப்வே வழங்கிய ஆதரவிற்கு நன்றி. எதிர்காலத்தில் இந்த இரு நாடுகளிலும் ஐ.சி.சி. நடத்தும் போட்டிகள் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

வங்கதேசத்தில் என்ன பிரச்சனை..?

ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு பிறகு, வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் சுமார் 230க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, 84 வயதான நோபல் பரிசு பெற்ற முகமது யூனஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. முன்னாள் பிரதமருக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹசன் பாப்பனும் வன்முறை காரணமாக வேறு நாட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

முன்னதாக, ஆஸ்திரேலிய டி20 கேப்டன் அலிசா ஹீலி கடந்த திங்களன்று, வங்கதேசத்தில் விளையாடுவது குறித்து அச்சமாக இருக்கிறது என்று தெரிவித்தார். இதன் காரணமாகவே, வங்கதேசத்தில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை யூஏஇக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

ALSO READ: Health Tips: உங்களுக்குள் உடலுறவு இல்லையா..? இந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்!

எந்தெந்த அணிகள் பங்கேற்கின்றன..?

மகளிர் டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. அதன்படி, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் களமிறங்குகின்றன.

 

30 வயதுக்கு பிறகும் முகத்தில் முகப்பரு எதனால் ஏற்படுகிறது..?
பெற்றோரிடம் குழந்தைகள் ரகசியமாக தெரிந்து கொள்ளும் விஷயங்கள்!
நீங்கள் வேலை பார்க்கும் இடம் சரியானதா? - அறிய டிப்ஸ் இதோ!
இரவில் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள்..!