5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ICC Womens T20 World Cup: ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இன்று மோதல்! யாருடைய வெற்றி இந்தியாவுக்கு சாதகம்?

Australia Women vs Pakistan Women: குரூப் ஏ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் உள்ளன. 3 போட்டிகளில் விளையாடி 3 தோல்விகளுடன் இலங்கை ஏற்கனவே வெளியேறிவிட்டது. ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 2 போட்டிகளில் விளையாடி, இன்னும் தலா 2 போட்டிகளில் விளையாடவுள்ளது. தற்போது இரு அணிகளுக்கு இடையே இன்று குரூப் ஸ்டேஜின் மூன்றாவது போட்டி நடைபெறுகிறது. இதன்பிறகு, ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வருகின்ற 13ம் தேதி எதிர்கொள்கிறது.

ICC Womens T20 World Cup: ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இன்று மோதல்! யாருடைய வெற்றி இந்தியாவுக்கு சாதகம்?
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் -ஹர்மன்ப்ரீத் கவுர் (Image: pakistan cricket and PTI)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 11 Oct 2024 17:48 PM

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை 2024ன் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் இப்போது இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதுவரை இலங்கை உள்பட இரண்டு அணிகள் 2024 டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளன. அதேசமயம், குரூப் ஏ மற்றும் பி பிரிவில் உள்ள தலா 4 அணிகள் அரையிறுதிக்கான போட்டியில் உள்ளன. இதில், 3 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, குரூப் ஏ பிரிவில் புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் +0.576 உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இன்று அதாவது அக்டோபர் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. இந்திய அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமானது. இந்த போட்டியின் முடிவை பொறுத்துதான் இந்திய மகளிர் அணி 2024 டி20 மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுமா இல்லையா என்பது தெரியும். இவ்வாறான நிலையில், இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெற்றால் அது இந்தியாவுக்கு பாதிப்பை தரும் என்பதை இங்கே பார்ப்போம்.

ALSO READ: Rohit Sharma: ஆஸ்திரேலியா தொடரை மிஸ் செய்யப்போகும் ரோஹித்.. அடுத்த டெஸ்ட் கேப்டன் யார்?

இந்தியாவுக்கு சாதகமாக அமையுமா..?

பலம் மிக்க ஆஸ்திரேலிய அணி இன்று பாகிஸ்தான் அணியை வீழ்த்தினால் 6 புள்ளிகளை பெறும். இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி அரையிற்ய்திக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மறுபுறம், பாகிஸ்தான் அணி இந்த போட்டியுடன் கிட்டதட்ட டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிவிடும். இதன்பிறகு, பாகிஸ்தான் அணிக்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரே போட்டி மட்டுமே உள்ளது. இதில், பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் 4 புள்ளிகளை மட்டுமே பெறும். அதேநேரத்தில், இந்திய அணியும் தற்போது 4 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆனால், இந்திய அணியின் நிகர ரன் ரேட்டை விட பாகிஸ்தான் அணியின் நிகர ரன் ரேட் அதிகமாக உள்ளது.

ஆஸ்திரேலிய மகளிர் அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு போட்டிக்கு தகுதிபெறும். அதேநேரத்தில், குரூப் ஏ பிரிவில் அரையிறுதிக்கு போகும் அடுத்த நிலையில் நியூசிலாந்தும், இந்தியாவும் மட்டுமே உள்ளன. நியூசிலாந்து அணி தனது எஞ்சிய இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையை வீழ்த்தினால் 6 புள்ளிகளை பெறும். இதன் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு வலுவான போட்டியாளராக இருப்பார்கள்.

அதேநேரத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான குரூப் ஸ்டேஜின் கடைசி ஆட்டத்தில் எப்படியும் இந்தியா வெற்றி பெற்று 6 புள்ளிகளை பெற வேண்டும். இந்திய அணி இவ்வாறு செய்வதன்மூலம், மூன்று அணிகளும் தலா 6 புள்ளிகளைப் பெறும், பின்னர் NRR அடிப்படையில் டாப்-2 முடிவு செய்யப்படும். குழுவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.

ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் வென்றால் என்ன நடக்கும்?

ஒருவேளை இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி, பலம் மிக்க ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தினால் அரையிறுதிக்கு 4 அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும். நியூசிலாந்து அணி தனது அடுத்த போட்டியில் இலங்கையை தோற்கடித்தால், பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் தலா 4 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணியும் இருக்கும். இதன் மூலம் எஞ்சிய இரண்டு போட்டிகளும் நாக் அவுட் போல் இருக்கும். இந்தியா-ஆஸ்திரேலியா, நியூசிலாந்து-பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். ஆனால் அரையிறுதி வாய்ப்பிற்கான கடைசி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் மறக்க முடியாத உண்மை.

அனைத்து அணிகளின் நிலை என்ன..?

குரூப் ஏ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் உள்ளன. 3 போட்டிகளில் விளையாடி 3 தோல்விகளுடன் இலங்கை ஏற்கனவே வெளியேறிவிட்டது. ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 2 போட்டிகளில் விளையாடி, இன்னும் தலா 2 போட்டிகளில் விளையாடவுள்ளது. தற்போது இரு அணிகளுக்கு இடையே இன்று குரூப் ஸ்டேஜின் மூன்றாவது போட்டி நடைபெறுகிறது. இதன்பிறகு, ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வருகின்ற 13ம் தேதி எதிர்கொள்கிறது. அதேசமயம் பாகிஸ்தான் நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இது தவிர இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஒன்று நடைபெற உள்ளது.

ALSO READ: Hardik Pandya Birthday: பிறப்பு முதல் விவாகரத்து வரை.. ஹர்திக் பாண்டியாவின் 30 ஆண்டுகால வாழ்க்கை!

மறுபுறம், நியூசிலாந்து அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில், அரையிறுதிக்கான பந்தயத்தில் உள்ளது. குரூப் ஏ பிரிவில் 4 அணிகளுக்கு இடையே டாப்-2 இடத்துக்கான போர் நடந்து வருகிறது. புள்ளிகள் பட்டியலில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அதன் இரண்டு போட்டிகளிலும் 4 புள்ளிகள் மற்றும் +2.524 நிகர ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி 4 புள்ளிகள் மற்றும் +0.576 நிகர ரன் ரேட்டுடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 2 புள்ளிகள் மற்றும் +0.555 நிகர ரன் ரேட்டுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. அதேநேரத்தில், நியூசிலாந்து 2 புள்ளிகள் மற்றும் +0.050 நிகர ரன் ரேட்டுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இலங்கை மகளிர் அணி 3 போட்டிகளில் விளையாடி 3 தோல்விகளுடன் -2.564 நிகர ரன் ரேட்டுடன் 5வது மற்றும் கடைசி இடத்தை பிடித்து குரூப் ஸ்டேஜில் இருந்து வெளியேறியது.

Latest News