5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ICC Women’s T20 World Cup: இலங்கையை பந்தாடிய இந்திய மகளிர் அணி.. புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேற்றம்!

India Women Vs Sri Lanka Women: திடீரென விஸ்வரூம் எடுத்த இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 27 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ரிச்சா கோஷ் கடைசி 22 பந்துகளில் 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.

ICC Women’s T20 World Cup: இலங்கையை பந்தாடிய இந்திய மகளிர் அணி.. புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேற்றம்!
இந்திய மகளிர் அணி (Image: BCCI women)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 09 Oct 2024 23:31 PM

2025 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் கட்டாய வெற்றிக்காக இந்திய அணி களமிறங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷெபாலி வர்மா சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்திய தொடக்க வீரர்கள் இருவரும் 12.4 ஓவரில் 98 ரன்கள் சேர்த்தனர்.

ALSO READ: IND vs BAN 2nd T20: வங்கதேசத்தை திணறடித்த இந்திய பௌலர்கள்.. இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 38 பந்துகளில் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுக்க, ஷெபாலி வர்மா 40 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். இதற்குப் பிறகு இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் வேகமாக ரன்களை எடுத்தனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 10 பந்துகளில் 16 ரன்கள் ஆட்டமிழக்க, இவருக்கு பின்னாடி வந்த ரிச்சா கோஷ் 6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இருப்பினும், திடீரென விஸ்வரூம் எடுத்த இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 27 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ரிச்சா கோஷ் கடைசி 22 பந்துகளில் 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.

இலங்கை தரப்பில் சாமரி அதபத்து மற்றும் அனா காஞ்சனா தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்

இலங்கை அணி 173 ரன்கள் இலக்கு:

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை மகளிர் அணியின் தொடக்க வீரர்களாக விஷ்மி மர்றும் சாமரி அதபத்து களமிறங்கினர். இருவரும் முறை 0 மற்றும் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை கொடுத்தனர். அடுத்து உள்ளே வந்த ஹர்ஷிதாவும் 3 ரன்களுடன் நடையைக்கட்டினார். இதன் காரணமாக, இலங்கை அணி 5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 21 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து அடுத்தடுத்து இலங்கை அணி விக்கெட்களை விழ இலங்கை அணி 19.4 ஓவர்களில் 90 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய மகளிர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக கவிஷ்க தில்ஹாரி 21 ரன்கள் எடுத்தார். இவரை தவிர, அனுஷ்கா சஞ்சீவானி 22 பந்துகளில் 20 ரன்களும், அமா காஞ்சனா 22 பந்துகளில் 19 ரன்களும் எடுத்திருந்தனர். இவர்கள் மூவரை தவிர மற்ற 8 பேட்ஸ்மேன்களால் இரட்டை இலக்கத்தை கடக்க முடியவில்லை. இலங்கையின் மிகப்பெரிய நம்பிக்கையான கேப்டன் சாமரி அதபத்து 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

ALSO READ: Afternoon Sleep: பகலில் தூங்குவது நல்லதா கெட்டதா..? எவ்வளவு நேரம் தூங்கலாம்..?

இந்திய அணி தரப்பில் அருந்ததி மற்றும் ஆஷா சோபனா தலா 3 விக்கெட்களும், ரேணுகா தாக்கூர் 2 விக்கெட்களும் எடுத்திருந்தனர். இது தவிர, ஸ்ரேயங்கா பாட்டீல் மற்றும் தீப்தி சர்மா தலா 1 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.

இந்திய மகளிர் அணி 2வது இடம்:

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது அதேநேரத்தில், இந்திய அணி 3 போட்டிகளில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன. பாகிஸ்தான் 3வது இடத்திலும், நியூசிலாந்து 4வது இடத்திலும், இலங்கை அணி 3 போட்டிகளில் விளையாடி 3 தோல்விகளுடன் உலகக் கோப்பை லீக் சுற்றிகளில் இருந்து வெளியேறியது.

Latest News