WTC Final 2025: ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் இந்திய அணி பைனல் வருமா? சமன்பாட்டின் முழு விவரம்! - Tamil News | icc world test championship points table indian cricket team wtc final qualification scenario after loss test series against australia | TV9 Tamil

WTC Final 2025: ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் இந்திய அணி பைனல் வருமா? சமன்பாட்டின் முழு விவரம்!

WTC Points Table: இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் தொடரில் 4-0 என்ற கணக்கில் வென்றால், அதாவது 4 வெற்றி, 1 டெஸ்ட் டிரா ஆனால், இந்தியாவின் மொத்த சதவீத புள்ளிகள் 65.79 சதவீதமாக உயரும். இப்படி நடந்தால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.

WTC Final 2025: ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் இந்திய அணி பைனல் வருமா? சமன்பாட்டின் முழு விவரம்!

இந்திய கிரிக்கெட் அணி (Image: GETTY)

Published: 

06 Nov 2024 21:28 PM

நியூசிலாந்து டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் க்ளீன் ஸ்வீப் செய்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை சிக்கலில் தள்ளியது. இந்த தொடரை இழந்ததன் மூலம் இந்திய அணி ஐசிசி உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை இழந்தது. இதனால், இந்திய அணிக்கு டெஸ்ட்சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பாதை கடினமாகிவிட்டது. இந்த தோல்விக்கு பிறகு, இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

ALSO READ: ICC Test Rankings: 10 ஆண்டுகளுக்குப் பிறகு தரவரிசையில் கடும் வீழ்ச்சி.. மீண்டு வருவாரா விராட் கோலி..?

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால், இந்த தொடரை 4-0 என கைப்பற்ற வேண்டும். அதேபோல், 4-1 என்ற கணக்கில் வென்றாலும் இந்திய அணிக்கு நம்பிக்கை இருக்கும். ஒருவேளை இந்த தொடரில் இந்திய அணி தோற்றால் என்ன நடக்கும் என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. தொடரை இழந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான போட்டியில் இந்திய அணி நீடிக்குமா என்பதை இங்கே பார்க்கலாம்.

இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் தொடரில் 4-0 என்ற கணக்கில் வென்றால், அதாவது 4 வெற்றி, 1 டெஸ்ட் டிரா ஆனால், இந்தியாவின் மொத்த சதவீத புள்ளிகள் 65.79 சதவீதமாக உயரும். இப்படி நடந்தால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.

இப்படியான சூழ்நிலையில், ஆஸ்திரேலிய இறுதிப்போட்டியில் இருந்து வெளியேறியது. மறுபுறம், நியூசிலாந்து சொந்த மண்ணில் இங்கிலாந்தை 3-0 என தோற்கடித்தால் அதன் சதவீத புள்ளிகள் 64.29 ஆக இருக்கும். அதேபோல், தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கையை சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் வீழ்த்தினால், அது 69.44% புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும். இதன் காரணமாக, இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தலாம்.

இந்திய அணி தொடரை இழந்தால் என்ன நடக்கும்..?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய இழந்தாலும், இந்திய அணிக்கு சாதகமாகவே வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இதற்கு மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து இந்திய அணி காத்திருக்க வேண்டும்.

அதாவது, ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தினால், நியூசிலாந்து – இங்கிலாந்து தொடர் 1-1 என சமநிலையை பெற வேண்டும். அதேபோல், இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுடனான தொடரை தென்னாப்பிரிக்கா அணி 1-1 என சமன் செய்ய வேண்டும்.

ALSO READ: IND vs AUS: கத்தி முனையில் நிற்கும் 4 இந்திய வீரர்கள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்தான் கடைசியா..?

அப்போது, இந்திய அணி இப்படி தோற்றிருந்தால், மற்ற அணிகளின் சமன்பாடு அப்படியே இருக்கும். இதன் காரணமாக, ஆஸ்திரேலிய அணி 58.77% புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். அதனை தொடர்ந்து இந்திய அணி 53.51% சதவீதத்துடன் இரண்டாவது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும். இதன்பிறகு, தென்னாப்பிரிக்க அணி 52.78% சதவீதத்துடன் 3வது இடத்தையும், நியூசிலாந்து அணி 52.38% சதவீதத்துடன் 4வது இடத்தையும், இலங்கை அணி 51.28% சதவீதத்துடன் 5வது இடத்தையும் பிடிக்கும்.

பாலை காய்ச்சாமல் குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்!
காலிஃபிளவர் சாப்பிடுவது உடலுக்கு இவ்வளவு நன்மைகளை தருமா?
ஸ்மார்ட்போனில் நெட்வொர்க் வேகம் அதிகரிக்க இவற்றை பின்பற்றுங்கள்!
நடிகை அபர்ணா பாலமுரளியின் லேட்டஸ்ட் ஆல்பம்