5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி.. தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி!

உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், டி2 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது அணியை சிறப்பாக வழிநடத்திய கேப்டன் ரோகித் சர்மா, இறுதிப்போட்டியில் அரைசதம் அடித்த விராட்கோலிக்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்தார்.

வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி.. தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி!
விராட் கோலி – ரோகித் சர்மா
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 Jun 2024 12:57 PM

வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி: டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் நேற்று மோதிய இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இரு அணிகளும் நடப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிப்போட்டியில் கூட தோற்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்ததால் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பிரிட்ஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. அதிகபட்சமாக கோஹ்லி 76 ரன் விளாசினார். அக்சர் 47, துபே 27 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து, 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

2007ல் நடந்த முதலாவது ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது ரோகித் தலைமையில் இந்தியா 2வது முறையாக டி20 உலக கோப்பையை கைப்ற்றி அசத்தியது. இந்த நிலையில், உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், டி2 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது அணியை சிறப்பாக வழிநடத்திய கேப்டன் ரோகித் சர்மா, இறுதிப்போட்டியில் அரைசதம் அடித்த விராட்கோலிக்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்தார். மேலும், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ராகுல் டிராவிட்டுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

Also Read: சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் கிங் கோலி..!

போன் போட்டு பேசிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி விராட் கோலியிடம் பேசுகையில், “உங்களிடம் பேசியதில் மகிழ்ச்சி. இறுதிப்போட்டியில் உங்களது பேட்டிங்கை அற்புதமாக நங்கூரமிட்டுள்ளீர்கள். விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் பிரகாசித்திருக்கிறீர்கள். டி20 கிரிக்கெட் உங்களை மிஸ் செய்யும். ஆனால் நீங்கள் தொடர்ந்து புதிய தலைமுறை வீரர்களை ஊக்குவிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார். ரோகித் சர்மாவிடம் மோடி பேசியதாவது, “நீங்கள் சிறந்த ஆளுமை கொண்டவர். உங்களின் அமைதியான மனநிலை, பேட்டிங் மற்றும் கேப்டன்சி இந்திய அணிக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது. உங்கள் டி20 வாழ்க்கை அன்புடன் நினைவில் இருக்கும். இன்று உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி.

ராகுல் டிராவிட்யிடம் மோடி பேசுகையில்,  ”அபாரமான பயிற்சிப் பயணம் இந்திய கிரிக்கெட்டின் வெற்றியை வடிவமைத்துள்ளது. அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, சரியான திறமையை வளர்ப்பது ஆகியவை அணியை மாற்றியுள்ளன. அவரது பங்களிப்புகளுக்காகவும், தலைமுறைகளை ஊக்குவிப்பதற்காகவும் இந்தியா அவருக்கு நன்றி தெரிவிக்கிறது. அவர் உலகக் கோப்பையை உயர்த்தியதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவருக்கு வாழ்த்து தெரிவித்ததில் மகிழ்ச்சி” என்றார்.

Also Read: “என் பிறந்தநாள் பரிசு இது” இந்திய அணிக்கு வாழ்த்து சொன்ன தோனி!