IND vs AUS: முடிவடையுமா இந்தியா – ஆஸ்திரேலியா 3வது போட்டி? 5ம் நாளில் ஆட்டிப்படைக்கபோகும் மழை..!

IND vs AUS 3rd Test 5th Day Weather: இந்தியா - ஆஸ்திரேலிய இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் முடிவு கிடைக்காமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடையலாம். மேலும், மழை இல்லாவிட்டாலும் நாளைய நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IND vs AUS: முடிவடையுமா இந்தியா - ஆஸ்திரேலியா 3வது போட்டி? 5ம் நாளில் ஆட்டிப்படைக்கபோகும் மழை..!

இந்தியா - ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட்

Published: 

17 Dec 2024 21:57 PM

பார்டர்-கவாஸ்கர் டிராபியின் 3வது டெஸ்ட் போட்டியில் பிரிஸ்பேனில் உள்ள காபாவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றனர். இரு அணிகளும் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடியதை விட மழையின் ஆட்டமே அதிகமாக உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இதுவரை 4 நாட்கள் விளையாடப்பட்டுள்ளது, அதில் மூன்று நாட்கள் மழையின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் பலத்த மழை பெய்ததால் மொத்தமாகவே 13.2 ஓவர்கள் மட்டுமே விளையாட முடிந்தது. இதையடுத்து, இரண்டாவது நாளான ஆட்டம் மழையின் தாக்கத்தால் முழுமையாக கைவிடப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது நாளான நேற்றும், நான்காவது நாளான இன்றும் மழை அதிகளவில் தொந்தரவு செய்தது.

மூன்றாவது நாளான நேற்று மட்டும் 8 முறை மழை பெய்ததால், பெரும்பாலான ஆட்டங்கள் விளையாடப்படவில்லை. அதேபோல், நான்காவது நாளான மழையானது நான்கு முறை குறுக்கிட்டது. அந்தவகையில், 3வது டெஸ்ட் போட்டியின் 5வது நாளான நாளை கடைசி நாள் என்பதால் மழையின் தாக்கம் இருக்குமா இல்லையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே, 3வது டெஸ்ட் போட்டியின் 5வது மற்றும் கடைசி நாளில் பிரிஸ்பேனில் வானிலை எப்படி இருக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: On This Day in 1933: 91 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள்.. டெஸ்ட் வரலாற்றில் முதல் சதத்தை பதிவு செய்த இந்திய அணி..!

5வது நாள் வானிலை எப்படி இருக்கும்..?

வானிலையை கணிக்கும் அக்குவெதரின் தகவலின்படி, பிரிஸ்பேன் டெஸ்டின் 5ம் நாளான நாளை மழை பெய்ய 90 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, இந்தியா – ஆஸ்திரேலிய இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் முடிவு கிடைக்காமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடையலாம். மேலும், மழை இல்லாவிட்டாலும் நாளைய நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரியாகவும், மணிக்கு 13 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: ஒரு வருடம் ஐஸ்கிரீம் சாப்பிடாத சாம்பியன் குகேஷ்.. அவரே சொன்ன காரணம்!

பின்தங்கிய நிலையில் இந்திய அணி:

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் 4 நாட்கள் முடிவடைந்த நிலையில், நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்துள்ளது. ஆகாஷ் தீப் 31 பந்துகளில் 27 ரன்களுடனும், பும்ரா 27 பந்துகளில் 10 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஒன்பதாவது விக்கெட் வீழ்த்தியபோது, ​​ஃபாலோ-ஆனைத் தவிர்க்க இந்திய அணிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. பும்ராவும் ஆகாஷும் இந்த கடினமான நேரத்தில் பொறுமையாக பேட்டிங் செய்து ஃபாலோ-ஆனை தவிர்த்தனர்.

இணையத்தை கலக்கும் சோபிதாவின் நியூ ஆல்பம்
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்?
காலையில் அலாரம் வைத்து எழுந்திருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..!
நடிகை ரித்திகா சிங் சினிமா பயணம்