5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Border Gavaskar Trophy: கடந்த 5 தொடர்களில் 4ல் வெற்றி.. இந்தியா – ஆஸ்திரேலியா இதுவரை நேருக்குநேர்!

IND vs AUS BGT Head To Head: பார்டர் கவாஸ்கர் டிராபியின் கீழ் நடைபெற்ற கடந்த 5 தொடர்களில் 4 தொடரை இந்திய அணியே வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணி 1ல் வென்றுள்ளது. ஆஸ்திரேலியா கடைசியாக 2014-15 சீசனில் பார்டர் கவாஸ்கர் டிராபியில் 4 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்திய அணியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.

Border Gavaskar Trophy: கடந்த 5 தொடர்களில் 4ல் வெற்றி.. இந்தியா – ஆஸ்திரேலியா இதுவரை நேருக்குநேர்!
இந்திய அணி (Image: GETTY)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 21 Nov 2024 12:31 PM

இந்தியா -ஆஸ்திரேலியான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நாளை (நவம்பர் 22ம் தேதி) முதல் தொடங்குகிறது. இந்த தொடரில் இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியானது ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் ஸ்டேடியத்தில் நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடுவாரா என்பது இன்னும் தெரியவில்லை. ரோஹித் சர்மா இல்லாத நேரத்தில் துணை கேப்டன் பும்ரா அணிக்கு தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் தலைமை தாங்க இருக்கிறார்.

இந்தநிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன், இதுவரை கடந்த பார்டர் – கவாஸ்கர் டிராபியை எந்த ஆண்டு எந்த அணி வென்றது என்ற பட்டியலை இங்கே காணலாம்.

ALSO READ: Border Gavaskar Trophy: 9 வெற்றிகள்.. அதிக ரன்கள்.. இதுவரை ஆஸ்திரேலியாவில் இந்திய அணி படைத்துள்ள சாதனைகள்!

வரலாறு:

பார்டர் – கவாஸ்கர் வரலாற்றில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இதுவரை மொத்தம் 56 டெஸ்ட் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இந்திய அணி அதிகபட்சமாக 24 டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 20 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. அதேநேரத்தில், இரு அணிகளுக்கும் இடையே 12 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.

கடந்த 1996-97 சீசனில் இருந்து பார்டர்-கவாஸ்கர் தொடர் விளையாடப்பட்டு வருகிறது. இதிலிருந்து தற்போது வரை இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மொத்தம் 16 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளன. அதில், இந்திய அணி 10 டெஸ்ட் தொடர்களையும், ஆஸ்திரேலிய அணி 5 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. கடந்த 2003-04 சீசன் மட்டும் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது.

பார்டர் கவாஸ்கர் டிராபியின் கீழ் நடைபெற்ற கடந்த 5 தொடர்களில் 4 தொடரை இந்திய அணியே வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணி 1ல் வென்றுள்ளது. ஆஸ்திரேலியா கடைசியாக 2014-15 சீசனில் பார்டர் கவாஸ்கர் டிராபியில் 4 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்திய அணியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.

பார்டர்-கவாஸ்கர் டிராபி கடைசி 5 தொடர் முடிவுகள்:

2014 – 15 சீசன்:

2014 – 15 சீசனில் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில், ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது. மீதமுள்ள 2 போட்டிகள் டிராவில் முடிந்தது. இந்த தொடரில்தான் தோனி ஓய்வை அறிவித்தார்.

2016-17 சீசன்:

2016-17 சீசனில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்தது. இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரை வென்று பழி தீர்த்தது. ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் 1 டெஸ்டில் வெற்றி பெற்றிருந்த நிலையில், 1 டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

2020-21 சீசன்:

2020-21 சீசனில் 4 டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய அணி மீண்டும் ஆஸ்திரேலியா சென்றது. இங்குதான் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க கபா டெஸ்ட் வெற்றி, சிட்னி டெஸ்ட் டிரா போன்றவற்றை செய்தது. இதையடுத்து, இந்திய அணி தொடரை 2-1 என்ற கைப்பற்றி அசத்தியது. இதில், ஆஸ்திரேலிய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் வெற்றி பெற்றிருந்த நிலையில், ஒரு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

ALSO READ: IND vs AUS: இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் எப்போது? இலவசமாக எங்கு பார்க்கலாம்?

2022-23 சீசன்:

2022-23 சீசனில் 4 டெஸ்ட் தொடர்களில் விளையாட ஆஸ்திரேலியா வந்தது. இதிலும், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. ஆஸ்திரேலிய அணி 1 டெஸ்ட் போட்டியில் மட்டும் வெற்றிபெற்றிருந்த நிலையில், ஒரு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

பார்டர் – கவாஸ்கர் டிராபியின் கடைசி 4 தொடர்கள் தலா 4 போட்டிகள் கொண்டவை. தற்போது நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் 5 போட்டிகள் கொண்டவை. கடைசி 4 டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஒரே வித்தியாசத்தில் வென்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திரா ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

Latest News