5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs AUS: இந்திய அணி தோல்வியை சந்தித்தால்..! இந்திய வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?

Border Gavaskar Trophy: ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட தொகையினை பெறுவார்கள். அதாவது, இந்திய வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் ரூ.6 லட்சமும், டி20 போட்டிகளில் ரூ.3 லட்சமும் பெறுகிறார்கள்.

IND vs AUS: இந்திய அணி தோல்வியை சந்தித்தால்..! இந்திய வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?
இந்திய அணிImage Credit source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 18 Dec 2024 08:15 AM

பார்டர் – கவாஸ்கர் டிராபியில் இந்திய அணி கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முன்னதாக அடிலெய்டில் தோல்வியடைந்த இந்திய அணி, இப்போது காபாவிலும் தோல்வியடையும் சூழலில் உள்ளது. ஆட்டத்தின் நான்காவது நாளில் ஃபாலோ-ஆனை தவிர்க்க பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் ஜோடி சிறப்பாக செயல்பட்டது. இந்தநிலையில் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் இந்திய அணி தோற்றால் ஒரு வீரருக்கு எவ்வளவு தொகை வழங்கும், வெற்றி பெற்றால் எவ்வளவு தொகை வழங்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

ALSO READ: D Gukesh: சென்னை வந்ததும் குவிந்த ரசிகர்கள்.. குகேஷை மேடையில் கவுரவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தோற்றால் எவ்வளவு தொகை வழங்கப்படும்..?

ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், அதன் வீரர்களுக்கு அதிகளவிலான தொகையை பிசிசிஐ வழங்குகிறது என்று கூறப்படுகிறது. ஆனால், ஒரு போட்டியில் இந்திய அணி தோற்கும் போது, ​​அந்த அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பணம் கிடைக்கும் என்று நினைத்து பார்த்து உள்ளீர்களா..? அந்தவகையில், இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும்ம் தோல்வியடைந்தாலும் அணி வீரர்களுக்கு ஒரே தொகையை மட்டுமே பிசிசிஐ வழங்கும். அதாவது, பிசிசிஐ நிர்ணயித்த போட்டிக் கட்டணம் அணி வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் வீரர்களுக்கு பிசிசிஐ ரூ.15 லட்சம் வழங்குகிறது. அணி வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும், வீரருக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படுகிறது. இது தவிர, டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதுகளை பெறும் வீரருக்கு, ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து தனித் தொகையைப் பெறுவார்கள்.

ஒருநாள், டி20 போட்டிகளுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது..?

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட தொகையினை பெறுவார்கள். அதாவது, இந்திய வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் ரூ.6 லட்சமும், டி20 போட்டிகளில் ரூ.3 லட்சமும் பெறுகிறார்கள். டெஸ்ட் போட்டிகளை போன்று சிறப்பாகச் செயல்படும் வீரர்கள் தொடர் ஸ்பான்சர்களிடமிருந்து தனித் தொகையைப் பெறுவார்கள். இந்தத் தொகை ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு போட்டிக்கும் வேறுபடும்.

ALSO READ: IND vs AUS: முடிவடையுமா இந்தியா – ஆஸ்திரேலியா 3வது போட்டி? 5ம் நாளில் ஆட்டிப்படைக்கபோகும் மழை..!

மற்ற அணி வீரர்கள் எவ்வளவு தொகை பெறுகிறார்கள்..?

ஆஸ்திரேலிய வீரர்கள் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி அல்லது தோல்விக்கு 15 முதல் 16 லட்சம் ரூபாய் வரை பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இது ஒரு வீரர்களுக்கான போட்டிக் கட்டணம் ஆகும். அதேநேரத்தில், ஒருநாள் போட்டியில் வீரர்களின் போட்டி கட்டணம் ரூ.8.5 லட்சமாகவும், டி20 போட்டிக்கான கட்டணம் ரூ.5.6 லட்சமாகவும் உள்ளது. ஆஸ்திரேலிய அணியை போன்று இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் ஒவ்வொரு போட்டிக்கும் ஏறக்குறைய அதே தொகையை பெறுகிறார்கள். இந்த பட்டியலில் குறைந்த தொகையை பெறும் அணியாக பாகிஸ்தான் அணி உள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் ஒரு டெஸ்ட் போட்டிக்கு சுமார் ரூ.3.5 லட்சம் பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இது இந்திய வீரர்கள் ஒரு டி20 போட்டிக்கு பெறும் சம்பளம் ஆகும்.  அதேபோல், பாகிஸ்தான் வீரர்கள் ஒருநாள் போட்டிக்கு சுமார் ரூ.2 லட்சமும், டி20 போட்டிக்கு ரூ.1.30 லட்சமும் பெறுகிறார்கள்.

 

Latest News