IND vs AUS: நிலைகுலைந்த ஆஸ்திரேலியா.. 275 ரன்கள் இலக்கு – ஜெயிக்குமா இந்தியா?
Border Gavaskar Trophy : 2வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் கடுமையாக சவாலளித்தனர். இதனால் ஆஸ்திரேலியாவின் விக்கெட் மளமளவென சரிந்த நிலையில் 60 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பும்ரா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5ஆம் நாளான இன்று இந்த போட்டியில் யார் ஜெயிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சம நிலையில் உள்ளது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டி முழுவதும் மழையின் ஆதிக்கம் இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் முதல் நாளில் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டது.
Also Read: IND vs AUS: இந்திய அணி தோல்வியை சந்தித்தால்..! இந்திய வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?
முதல் இன்னிங்ஸ் நிலவரம்
இந்த போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் சதம் அடித்தனர். அலெக்ஸ் கேரி 70 ரன்கள் விளாசியதும் ஆஸ்திரேலியா ரன் குவிக்க காரணமாக அமைந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது. அந்த அணியில் கே.எல்.ராகுல் 84 ரன்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா 77 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தனர். கடைசி நேரத்தில் ஆகாஷ் தீப் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகிய இருவரும் ஒன்றிரண்டு ரன்களாக சேர்க்க இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்தது.இறுதியாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் அதிகப்பட்சமாக வீழ்த்தினர்.
Also Read: D Gukesh: சென்னை வந்ததும் குவிந்த ரசிகர்கள்.. குகேஷை மேடையில் கவுரவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!
மளமளவென சரிந்த விக்கெட்டுகள்
இதன் மூலம் 185 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கடைசி நாள் என்பதால் இந்த டெஸ்ட் டிராவில் முடிவடையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் கடுமையாக சவாலளித்தனர். இதனால் ஆஸ்திரேலியாவின் விக்கெட் மளமளவென சரிந்த நிலையில் 60 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பும்ரா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்நிலையில் 18 ஓவர்கள் மட்டுமே பேட் செய்த நிலையில் அணியின் ஸ்கோர் 89 ஆக இருந்தபோது ஆஸ்திரேலியா அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 275 ரன்கள் நிர்விக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் என்ன நடக்கப்போகிறது என்பது இந்திய அணியில் கையில் தான் உள்ளது.