Border Gavaskar Trophy: பார்டர்-கவாஸ்கர் டிராபியில் அதிக முறை டக் அவுட்! யார் அந்த இந்திய வீரர்..?
India vs Australia: உலகில் எந்த ஒரு வீரரும் எந்தவொரு போட்டியிலும் அதிக முறை டக் அவுட்டான சாதனையை வைத்திருக்க விரும்ப மாட்டார்கள். ஆனால், முன்னாள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, பார்டர் - கவாஸ்கர் டிராபியில் அதிக முறை டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்கு பிறகு, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் ஸ்டேடியத்தில் வருகின்ற 22ம் தேதி முதல் தொடங்குகிறது. பார்டர் கவாஸ்கர் டிராவி தொடர் இந்தியாவில் 9 முறை விளையாடப்பட்டுள்ளது. இதில், இந்திய அணி 8 முறை வென்றுள்ளது. அதேபோல், ஆஸ்திரேலியாவில் 7 முறை நடந்துள்ளது. அதில், ஆஸ்திரேலிய அணி 4 முறை வென்றுள்ளது. இது தவிர, கடந்த இரண்டு பார்டர்-கவாஸ்கர் டிராபியிலும் இந்திய அணியே டிராபியை வென்றுள்ளது.
மோசமான சாதனை:
பார்டர் – கவாஸ்கர் டிராபியில் ஒரு இந்திய வீரர் தனது பெயரில் மோசமான சாதனையை படைத்துள்ளார். இப்படியான சாதனையை எந்த ஒரு வீரரும் தங்கள் பெயரில் பதிவு செய்ய விரும்பமாட்டார்கள். அப்படியான மோசமான சாதனையை படைத்துள்ளார். அதாவது பார்டர் – கவாஸ்கர் டிராவில் அதிக முறை டக் அவுட்டாகியுள்ளார். உலகில் எந்த ஒரு வீரரும் எந்தவொரு போட்டியிலும் அதிக முறை டக் அவுட்டான சாதனையை வைத்திருக்க விரும்ப மாட்டார்கள். ஆனால், முன்னாள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, பார்டர் – கவாஸ்கர் டிராபியில் அதிக முறை டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு முதல் 2018 வரை பார்டர் – கவாஸ்கர் டிராபியில் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா, ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, இதுவரை 12 முறை டக் அவுட்டாகி உள்ளார். இதன்மூலம், பார்டர் – கவாஸ்கர் டிராபியில் அதிகமுறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் இஷாந்த் சர்மா முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த 2 இடங்களிலும் இந்திய வீரர்களின் பெயர்களே உள்ளது.
டாப் – 3 வீரர்கள் பட்டியல்:
பார்டர் – கவாஸ்கர் டிராபியில் இஷாந்த் சர்மா இதுவரை 25 போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 12 முறை டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் தற்போதைய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் முறையே 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளனர். பார்டர் – கவாஸ்கர் டிராபியில் அஜித் அகர்கர் இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8 முறை டக் அவுட்டாகியுள்ளார். அதேபோல், ஜாகீர் கான் 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 முறை டக் அவுட்டாகியுள்ளார்.
பார்டர் கவாஸ்கர் டிராபியில் அதிக முறை டக் அவுட் ஆன டாப் – 5 வீரர்கள்:
- இஷாந்த் சர்மா – 12
- அஜித் அகர்கர் – 8
- ஜாகீர் கான் – 7
- நாதன் லியோன் – 7
- ஹர்பஜன் சிங் – 6
இஷாந்த் சர்மா:
Happy birthday Ishant Sharma…!!!
A workhorse of Indian Test bowling under Kohli, game changing spell in Champions Trophy final, started his career with a firey spell against Ponting – one of finest ever from India. pic.twitter.com/Inpne2ErY4
— Johns. (@CricCrazyJohns) September 2, 2023
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் இஷாந்த் சர்மாவும் ஒருவர். தனது வேகம் மற்றும் ஸ்விங் பந்துவீச்சால் பல போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றிகளை தேடி தந்துள்ளார். மேலும், பார்டர் – கவாஸ்கர் டிராபியில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார். பார்டர் – கவாஸ்கர் டிராபியில் 25 போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இஷாந்த் சர்மாவுக்கு கடந்த 2021ம் ஆண்டு பிறகு, இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. இவர் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் கடந்த 2021ம் ஆண்டு கான்பூரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இஷாந்த் சர்மா இதுவரை டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பார்டர் -கவாஸ்கர் டிராபிக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.