IND vs AUS Pink Ball test: பிங்க் பால் டெஸ்ட் என்றால் என்ன? பிங்க் பந்தில் மட்டும் விளையாட காரணம் என்ன..?

IND vs AUS Day Night Test: கடந்த 2019ம் ஆண்டு பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சவுரவ் கங்குலி, பிங்க் நிற பந்து பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டினார். இதையடுத்து, அதே ஆண்டில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் பகலிரவு டெஸ்ட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

IND vs AUS Pink Ball test: பிங்க் பால் டெஸ்ட் என்றால் என்ன? பிங்க் பந்தில் மட்டும் விளையாட காரணம் என்ன..?

பிங்க் பால் டெஸ்ட் (Image: twitter)

Published: 

04 Dec 2024 08:43 AM

நியூசிலாந்து அணிக்கு எதிரான மோசமான தோல்விக்கு பிறகு, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கு, இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 22ம் தேதி பெர்த் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வருகின்ற டிசம்பர் 6ம் தேதி அடிலெய்டு ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியானது பிங்க் பந்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், பிங்க் பந்து டெஸ்ட் பந்து போட்டி என்றால் என்ன..? முதலில் எப்போது விளையாடப்பட்டது உள்ளிட்ட விவரங்களை இங்கு முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.

ALSO READ: IND vs AUS: அடிலெய்டு ஸ்டேடியத்தில் கலக்கல்..! விராட் கோலி படைத்த சாதனைகள் இவ்வளவா?

பிங்க் பந்து டெஸ்ட் போட்டி என்றால் என்ன..?

பிங்க் பந்து டெஸ்ட் போட்டி என்பது பகலிரவாக நடத்தப்படும் ஒரு டெஸ்ட் போட்டியாகும். பொதுவாக, டெஸ்ட் போட்டி என்பது பகலில் மட்டுமே நடத்தப்படும். அதற்கு மாறாக, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை போல், இது பகல் மற்றும் இரவுகளில் நடைபெறும். பகலிரவு டெஸ்ட் போட்டி ஹோனலு விளக்குகளின் கீழ் பிங்க் நிற பந்தை கொண்டு விளையாடப்படும், இதன் காரணமாகவே, பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு பிங்க் பந்து டெஸ்ட் என்ற பெயர் வந்தது.

பிங்க் பந்தில் மட்டும் விளையாட காரணம் என்ன..?

கிரிக்கெட்டில் பொதுவாக சிவப்பு மற்றும் வெள்ளை பந்துகள் மட்டுமே பயன்படுத்தி விளையாடப்பட்டு வந்தது. பகலிரவு டெஸ்ட் போட்டியில் மட்டும் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படும். இதற்கு முக்கிய காரணம் இரவில் பந்து தெளிவாக தெரிய வேண்டும் என்பதுதான். முன்னதாக, பகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்கு மஞ்சள், பிங்க் மற்றும் அடர் வெள்ளை நிற பந்துகள் பயன்படுத்தி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் பிங்க் பந்து மட்டுமே தெளிவாக தெரிந்ததாக பேட்ஸ்மேன்கள் கருத்து தெரிவித்தனர். இதன் காரணமாகவே, பகலிரவு ஆட்டத்தில் பிங்க் நிற பந்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

முதல் பிங்க் பந்து போட்டி எப்போது நடைபெற்றது..?

கடந்த 2009ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் ஒருநாள் போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றி அடைந்ததை தொடர்ந்து, பிங்க் நிற பந்துக்கு ஐசிசி கிரீன் சிக்னல் கொடுத்தது.

முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி எப்போது நடைபெற்றது..?

பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்து 2000ம் ஆண்டிலேயே வந்தாலும், இது அதிகாரப்பூர்வமாக பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகே செயல்படுத்தப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு அடிலெய்டில் நடைபெற்ற முதல் சர்வதேச பிங்க் நிற பந்து டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று அசத்தியது.

இந்தியாவில் பிங்க் பந்து எப்போது விளையாடப்பட்டது..?

கடந்த 2016ம் ஆண்டு துலீப் டிராபியில் முதல் முறையாக பிங்க் பந்து பயன்படுத்தப்பட்டு விளையாடப்பட்டது. இந்த போட்டி கலவையான விமர்சனங்களை பெற்றதால், பிசிசிஐ பிங்க் நிற பந்து முயற்சியை ஒத்தி வைத்தது.

ALSO READ: IND VS AUS: பிங்க் பால் டெஸ்ட் பற்றிய சுவாரஸ்யங்கள்.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா!

இந்தியாவில் முதல்முறையாக பிங்க் நிற பந்தில் டெஸ்ட் விளையாடப்பட்டது எப்போது..?

கடந்த 2019ம் ஆண்டு பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சவுரவ் கங்குலி, பிங்க் நிற பந்து பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டினார். இதையடுத்து, அதே ஆண்டில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் பகலிரவு டெஸ்ட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிங்க் பந்து டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் எத்தனை பிங்க் டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன..?

இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 22 முறை பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில், அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி 12 பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்திய அணி இதுவரை 4 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.

உடலுக்கு சுறுசுறுப்பு தரும் 7 சூப்பர் உணவுகள் - லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!
புஷ்பா 2 படத்திற்காக வித்யாசமான புரமோஷன் செய்த ராஷ்மிகா
கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?