IND vs BAN 1st T20: களத்தில் கதகளி ஆடிய ஹர்திக்.. வங்கதேசத்தை ஆட்டிபடைத்து இந்திய அணி வெற்றி!
India vs Bangladesh 1st T20I: ஒரு முனையில் மெஹ்தி ஹசன் மட்டும் நின்று நிதானமாக நின்று ரன்களை திரட்ட, ரிகாத் அலி மற்றும் தஸ்கின் அகமது முறையே 11 மற்றும் 12 ரன்கள் அடித்து முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் காரணமாக வங்கதேச அணி 100 ரன்களை கடந்தது. மெஹ்தி ஹசன் 35 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருக்க, 19.5 ஓவர்களில் வங்கதேச அணி 127 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.
இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டி20 போட்டி குவாலியரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதல் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து, வங்கதேச அணியில் தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் பர்வேஸ் ஹூசைன் களமிறங்கினர். முதல் ஓவர் வீசி லிட்டன் தாஸையும், 3வது ஓவரை வீசி பர்வேஸையும் தனது வேகத்தால் வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். தொடர்ந்து வங்கதேச அணியின் ஸ்கோர் 57 ரன்களாக இருந்தபோது அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்து தடுமாற்றம் கண்டது.
இந்தநிலையில், வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ நீண்ட நேரம் நின்று 25 பந்துகளில் 1 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உதவியுடன் 27 ரன்களை அடித்து பந்துவீசிய வாஷிங்டன் சுந்தரிடமே கேட்சானார். தொடர்ந்து, வங்கதேச அணிக்கு மஹ்முதுல்லாவின் அனுபவமும், ஜாகர் அலியின் திறமையும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோது, அந்த நம்பிக்கையை இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சுக்குநூறாக உடைத்து அவுட் செய்தனர்.
ஒரு முனையில் மெஹ்தி ஹசன் மட்டும் நின்று நிதானமாக நின்று ரன்களை திரட்ட, ரிகாத் அலி மற்றும் தஸ்கின் அகமது முறையே 11 மற்றும் 12 ரன்கள் அடித்து முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் காரணமாக வங்கதேச அணி 100 ரன்களை கடந்தது. மெஹ்தி ஹசன் 35 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருக்க, 19.5 ஓவர்களில் வங்கதேச அணி 127 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.
Innings Break!
A magnificent bowling performance restricts Bangladesh to 127 👏👏#TeamIndia‘s chase coming up shortly ⏳
Scorecard – https://t.co/Q8cyP5jXLe#INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/Gu6wQLPXxg
— BCCI (@BCCI) October 6, 2024
வங்கதேசத்திற்கு எதிரான இந்த போட்டியில் வருண் சக்ரவர்த்தி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்த, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அறிமுக வீரர் மயாங்க் யாதவ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர்.
128 ரன்கள் இலக்கு:
128 என்ற இலக்குடன் இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதல் தனது பாணியில் அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா 7 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 16 ரன்கள் விளாசிய நிலையில், எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி நடையை கட்டினார். அப்போது, இந்திய அணி வெறும் 2 ஓவர்களில் 25 ரன்கள் எடுத்திருந்தது.
ALSO READ: MS Dhoni: ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா இல்லையா? அனுமதிக்காக மும்பை செல்லும் சிஎஸ்கே நிர்வாகிகள்!
இதையடுத்து மூன்றாவதாக களமிறங்கிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 14 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசி முஸ்தபிசுர் ரஹ்மான் பந்தில் அவுட்டானார். தொடர்ந்து சஞ்சு சாம்சனும், நிதிஷ் குமார் ரெட்டியும் களத்தில் நின்று இந்திய அணிக்காக ரன்களை திரட்டி கொண்டிருந்தனர். போட்டியை சஞ்சு சாம்சன் கைகளால் முடியும் என்று நினைத்தபோது, மெஹ்தி ஹசன் மிராஜ் பந்தில் சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து, நிதிஷ் குமாருடன், ஹர்திக் பாண்டியாவும் இணைந்து கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு ஓட விட, களத்தில் கதகளி ஆடி கொண்டிருந்தனர். 52 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார் ஹர்திக் பாண்டியா. இந்திய அணியின் வெற்றியின்போது இன்றைய போட்டியில் அறிமுகமான நிதிஷ் ரெட்டி 15 பந்துகளில் 1 சிக்ஸர் உதவியுடன் 16 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் உதவியுடன் 39 ரன்களுடனும் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
𝙎𝙈𝘼𝘾𝙆𝙀𝘿 with power and timing!@hardikpandya7 dispatches one over deep extra cover 🔥
Live – https://t.co/Q8cyP5jXLe#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/kNaZjSl1Tq
— BCCI (@BCCI) October 6, 2024
இதன்மூலம், இந்திய அணி 11.5 ஓவர்களில் இலங்கை எட்டி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர்.