Mayank Yadav: உலக கிரிக்கெட்டின் புதிய ‘பேஸ் கிங்’… முதல் போட்டியில் முத்தான சாதனை படைத்த மயங்க் யாதவ்!
IND vs BAN 1st T20: குவாலியரில் உள்ள நியூ மாதவ்ராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் ஆறாவது ஓவரை மெய்டனாக வீசினார் மயங்க் யாதவ். இதன்மூலம், டி20 வரலாற்றில் அறிமுகப் போட்டியிலேயே மெய்டன் ஓவர் வீசிய மூன்றாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை மயங்க் யாதவ் படைத்தார். முன்னதாக, இந்த சாதனையை அஜித் அகர்கர் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் மட்டுமே படைத்துள்ளார். உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளரான பும்ராவால் கூட இந்த சாதனையை படைக்க முடியவில்லை.
முதல் டி20 போட்டியில் வங்கதேசத்தை இந்திய அணி எளிதாக வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 19.5 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, இலக்கை துரத்திய இந்திய அணி வெறும் 11.5 ஓவர்களில் வெற்றி பெற்று மிரட்டியது. வங்கதேசத்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் சாதனை படைத்தார்.
ALSO READ: Dwayne Bravo Birthday: டி20யில் 600 விக்கெட்.. டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்.. டுவைன் பிராவோ சாகச பயணம்!
அப்படி என்ன சாதனை படைப்பு..?
MAIDEN INTERNATIONAL WICKET FOR MAYANK YADAV…!!!! 🇮🇳
– Welcome to team India, Mayank. First of many to come !!! pic.twitter.com/PvcQVuLfxl
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 6, 2024
குவாலியரில் உள்ள நியூ மாதவ்ராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் ஆறாவது ஓவரை மெய்டனாக வீசினார் மயங்க் யாதவ். இதன்மூலம், டி20 வரலாற்றில் அறிமுகப் போட்டியிலேயே மெய்டன் ஓவர் வீசிய மூன்றாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை மயங்க் யாதவ் படைத்தார். முன்னதாக, இந்த சாதனையை அஜித் அகர்கர் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் மட்டுமே படைத்துள்ளார். உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளரான பும்ராவால் கூட இந்த சாதனையை படைக்க முடியவில்லை. அஜித் அகர்கர் கடந்த 2006ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தனது முதல் டி20 போட்டியில் முதல் ஓவரை மெய்டனாக வீசினார். அதன் பிறகு, அர்ஷ்தீப் சிங் கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்து எதிராக அறிமுகமாகி தனது முதல் ஓவரை மெய்டனாக வீசினார். மேலும், மயங்க் யாதவ் தனது அறிமுக போட்டியிலேயே மணிக்கு 149.9 கிமீ வேகத்தில் பந்துவீசி அனைவரையும் கவர்ந்தார்.
The first of many more! ⚡️
📽️ WATCH Mayank Yadav’s maiden international wicket 😎
Live – https://t.co/Q8cyP5jXLe#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/Q0XvZGBQrq
— BCCI (@BCCI) October 6, 2024
முதல் சர்வதேச விக்கெட்:
இந்தியாவின் இன்னிங்ஸின் எட்டாவது ஓவரான தனது இரண்டாவது ஓவரில் மயங்க் யாதவ் தனது முதல் சர்வதேச விக்கெட் எடுத்தார். வங்கதேச கிரிக்கெட் அணியின் அனுபவ வீரரான மஹ்முதுல்லா அடித்த பந்தை வாஷிங்டன் சுந்தர் கைகளில் சிக்கியது. இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சர்வதேச விக்கெட்டை பதிவு செய்தார்.
ஐபிஎல் 2024ல் கலக்கிய மயங்க் யாதவ்:
கடந்த பிப்ரவரி 2023ம் ஆண்டு மயங்க் யாதவை ரூ. 20 லட்சத்திற்கு லன்கோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியது. இருப்பினும், காயம் காரணமாக கடந்த 2023 ஐபிஎல் சீசனில் மயங்க் யாதவால் விளையாட முடியவில்லை. இதை தொடர்ந்து, 2024 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக அறிமுகமான மயங்க் யாதவ், 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
தொடர்ந்து, ஐபிஎல் 2024ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 156.7 கிமீ வேகத்தில் பந்தை வீசி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஐபிஎல் 2024ல் 4 போட்டிகளில் விளையாடிய மயங்க் யாதவ் 12.14 சராசரியில் 7 விக்கெட்டுகளை எடுத்தார். அவரது சிறந்த பந்துவீச்சு 3/14 ஆகும்.
போட்டிக்கு பிறகு மயங்க் யாதவ், “நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். ஆனால், கொஞ்சம் பதட்டாமாகவும் இருந்தேன். இந்த தொடர் காயத்திற்கு பிறகு வலுவாக திரும்பியுள்ளேன் என்று நினைக்கிறேன். ஐபிஎல்லில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு, நான் சர்வதேச கிரிக்கெட்டில் நேரடியாக அறிமுகமானேன். காயத்திற்கு பிறகு மீண்டு வர மிகவும் கஷ்டப்பட்டேன். கடந்த 4 மாதங்களில் நிறைய ஏற்ற தாழ்வுகள் இருந்தன.
போட்டியில் வேகமாக பந்துவீசுவதை விட சரியான நீளத்தில் பந்துவீசுவதில் தான் உறுதியாக இருந்தேன். என் வேகத்தை பற்றி கவலை படாமல் சரியான லைன் மற்றும் லெந்த் பவுல்ட் செய்தேன். ஐபிஎல் போட்டியிலும் நான் மெதுவாகத்தான் பந்து வீசினேன். குவாலியரை அடைந்தபோது, பிட்ச்சில் அதிக பவுன்ஸ் இல்லாததால், அதற்கேற்ப எனது வேகத்தை மாற்றினேன்.” என தெரிவித்தார்.