Watch Video: நோ லுக் ஷாட்டில் மாஸ் செய்த ஹர்திக் பாண்டியா.. பந்தை பார்க்காமல் பவுண்டரிக்கு விரட்டி கெத்து!
Hardik Pandya: வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமதுவின் பந்தில் 'நோ லுக்' ஷாட்டை ஆடி பரபரப்பை ஏற்படுத்தினார் ஹர்திக் பாண்டியா. வங்கதேச அணியின் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் தஸ்கின் அகமது 12வது ஓவரில் மூன்றாவது பந்தை வீசியபோது, அந்த பந்தை பார்க்காமல் பின்னோக்கி அடித்தார் பாண்டியா. இது புல்லட் வேகத்தில் விக்கெட் கீப்பரைக் கடந்து எல்லைக் கோட்டைத் தாண்டி பவுண்டரிக்கு சென்றது.
வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது. இரு அணிகள் மோதும் தொடரின் முதல் போட்டி குவாலியரில் உள்ள நியூ மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போது, நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 39 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். குவாலியரில் உள்ள நியூ மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் ஆடிய ஷாட் உலகையே வியப்பில் ஆழ்த்தியது.
ALSO READ: Dwayne Bravo Birthday: டி20யில் 600 விக்கெட்.. டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்.. டுவைன் பிராவோ சாகச பயணம்!
நோ – லுக் ஷாட்:
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 127 ரன்களில் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது. பதிலுக்கு பேட்டிங் செய்த இந்திய அணி 11.5 ஓவர்களில் இலக்கை விரட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமதுவின் பந்தில் ‘நோ லுக்’ ஷாட்டை ஆடி பரபரப்பை ஏற்படுத்தினார் ஹர்திக் பாண்டியா. வங்கதேச அணியின் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் தஸ்கின் அகமது 12வது ஓவரில் மூன்றாவது பந்தை வீசியபோது, அந்த பந்தை பார்க்காமல் பின்னோக்கி அடித்தார் பாண்டியா. இது புல்லட் வேகத்தில் விக்கெட் கீப்பரைக் கடந்து எல்லைக் கோட்டைத் தாண்டி பவுண்டரிக்கு சென்றது. இந்த காட்சியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
My best player hit kind of shots in IranAttack #IndvsBan first T20i
Best shot by #HardikPandya t20 pic.twitter.com/aApBuv0eVZ— nitu vijendra choudhary (@nitu12dara) October 6, 2024
போட்டியில் நடந்தது என்ன..?
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் எடுத்த முடிவு சரிதான் முதல் ஓவரிலேயே தெரிந்தது. தொடக்க ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் லிட்டன் தாஸை அவுட் செய்து விக்கெட்டை வீழ்த்தினார். இப்படியாக, வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 19.4 ஓவரில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் வருண் சக்ரவர்த்தி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அபாரமாக பந்துவீசி தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இது தவிர, ஹர்திக் பாண்டியா, மயங்க் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 11.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 39 ரன்களும், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தலா 29 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதில் பங்களித்தனர்.
Clutch. It’s in his DNA 🥶@hardikpandya7 pic.twitter.com/0s2qx2VcfU
— 𝘿𝙞𝙡𝙞𝙥𝙑𝙆18 (@Vk18xCr7) October 6, 2024
குவாலியரில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 49 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது. இதன்மூலம், சர்வதேச டி20யில் 100 ரன்களுக்கு மேல் சேஸ் செய்யும்போது மீதமுள்ள பந்துகளில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இது தவிர, ஹர்திக் பாண்டியா தனது பெயரில் மிக பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் 5வது முறையாக சிக்ஸர் அடித்து வெற்றியை தேடி கொடுத்து விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார். இந்த சாதனையை விராட் கோலி 4 முறை செய்துள்ளார்.
ALSO READ: IND vs BAN 1st T20: களத்தில் கதகளி ஆடிய ஹர்திக்.. வங்கதேசத்தை ஆட்டிபடைத்து இந்திய அணி வெற்றி!
இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது . இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது.