Ravichandran Ashwin: சேப்பாக்கத்தில் சம்பவம் செய்த அஸ்வின்.. வங்கதேசத்திற்கு எதிராக சதம் அடித்து அசத்தல்..!
IND vs BAN: ரவிச்சந்திரன் அஸ்வின் கிரீஸூக்குள் வரும்போது இந்திய அணி 144 ரன்களுக்குள் 6 விக்கெட்களை இழந்து தடுமாறி கொண்டு இருந்தது. இந்திய அணியின் ஸ்கோரை மிகப்பெரிய ரன்களுக்கு எடுத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டபோது யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து தங்களது விக்கெட்களை இழந்தனர். ஆனால் அஸ்வின் கிரீஸுக்கு வந்தவுடனே அட்டகாசமான ஸ்ட்ரோக்குகளை ஆடினார். இவருக்கு உறுதுணையாக ஜடேஜா ஒத்துழைப்பு கொடுத்து, நல்ல பார்ட்னர்ஷிப்பை கொடுக்க, இதன் போது, அஸ்வின் தனது சதத்தை வெறும் 108 பந்துகளில் பூர்த்தி செய்தார்.
இந்தியா vs வங்கதேசம் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று முதல் செப்டம்பர் 19ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. சென்னை டெஸ்டின் முதல் நாளின் முதல் மற்றும் இரண்டாவது அமர்வுகளில் இந்திய வீரர்கள் ஏமாற்றத்தையே தந்தனர். இந்திய அணி 88 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 6 ரன்களிலும், சுப்மன் கில் டக் அவுட்டாகியும், விராட் கோலி 6 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். அதேபோல், இரண்டாவது அமர்வின் ஆரம்பத்திலும் இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை .
ரிஷப் பண்ட் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, ஹசன் மஹ்மூத் தனது 4 பந்தில் 39 ரன்கள் எடுத்திருந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டை அவுட் செய்தார். அடுத்தடுத்து அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால் 56 ரன்களில் வெளியேற, கே.எல்.ராகுலும் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Magnificent CENTURY by @ashwinravi99 👏👏
This is his second Test century at his home ground and 6th overall.
Take a bow, Ash!
LIVE – https://t.co/jV4wK7BgV2…… #INDvBAN@IDFCFIRSTBank pic.twitter.com/VTvwRboSxx
— BCCI (@BCCI) September 19, 2024
சென்னை டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஒருபுறம் ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மான் கில் போன்ற பேட்ஸ்மேன்கள் 10 ஓவர்களுக்குள் பெவிலியன் திரும்ப, மறுபுறம் 8-வது இடத்தில் பேட் செய்ய வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சதம் அடித்து அற்புதம் செய்தார். இதன்மூலம், அஸ்வின் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 6 சதத்தை பதிவு செய்தார். விஐபி அறையில் அமர்ந்து பேட்டிங்கை ரசித்து கொண்டிருந்த தனது தந்தையின் முன் அஸ்வின், இந்த சிறப்பான இன்னிங்ஸை ஆடியது மிகப்பெரிய விஷயம்.
Century for Ravichandran Ashwin!
He came when India was struggling at 144/6 and rescued the team with Jadeja. pic.twitter.com/t5FWtCYFiv
— Cricket is Love ❤ (@cricketfan__) September 19, 2024
6 விக்கெட்டை இழந்து தடுமாறிய இந்திய அணி:
ரவிச்சந்திரன் அஸ்வின் கிரீஸூக்குள் வரும்போது இந்திய அணி 144 ரன்களுக்குள் 6 விக்கெட்களை இழந்து தடுமாறி கொண்டு இருந்தது. இந்திய அணியின் ஸ்கோரை மிகப்பெரிய ரன்களுக்கு எடுத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டபோது யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து தங்களது விக்கெட்களை இழந்தனர். ஆனால், அஸ்வின் கிரீஸுக்கு வந்தவுடனே அட்டகாசமான ஸ்ட்ரோக்குகளை ஆடினார். இவருக்கு உறுதுணையாக ஜடேஜா ஒத்துழைப்பு கொடுத்து, நல்ல பார்ட்னர்ஷிப்பை கொடுக்க, இதன் போது, அஸ்வின் தனது சதத்தை வெறும் 108 பந்துகளில் பூர்த்தி செய்தார். அஸ்வின் இந்த போட்டியில் ஜடேஜாவுடன் 150 ரன்களுக்கு மேல் தனது பார்ட்னர்ஷிப்பை அமைத்தது மட்டுமின்றி அடுத்த 50 பந்துகளில் சதத்தையும் எட்டினார்.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் (102 நாட் அவுட்), ரவீந்திர ஜடேஜா (86 நாட் அவுட்) ஆகியோரின் சிறப்பான இன்னிங்ஸின் அடிப்படையில் இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.
அஸ்வினின் ஆறாவது சதம்:
கடந்த 2010ம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன அஸ்வின், கடந்த 2011ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன்பிறகு, 2013ம் ஆண்டு மீண்டும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அஸ்வின் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை அடித்தார். 2016ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மீண்டும் சதம் அடித்த அஸ்வின், இந்த முறை வெளிநாட்டு மண்ணில் அவரது முதல் டெஸ்ட் சதமாக பதிவானது. அதே டெஸ்ட் தொடரில் மீண்டும் ஒரு சதம் அடித்த அஸ்வின், கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் தனது 5வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். தற்போது, 1312 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் அஸ்வின் இன்று தனது 6வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.