Watch Video: ’இங்க ஆளு இல்லை நிப்பாட்டுங்க’- வங்கதேசத்திற்கு பீல்டிங் செட் செய்த ரிஷப் பண்ட்..!

Rishabh Pant: இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்டின் மூன்றாவது நாளான இன்று தொடங்கியதில் இருந்து சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் வங்கதேச பந்துவீச்சாளருக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தினர். இந்த ஜோடியை உடைப்பதில் எதிரண்டி பந்துவீச்சாளர்கள் மும்முரமாக செயல்பட்டனர். இதற்கிடையில், ரிஷப் பண்ட் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது மிட் விக்கெட்டில் ஆள் இல்லாததை கண்டுள்ளார். போட்டியின் போது, ​​ரிஷப் பண்ட் 29 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த போது, ​​ரிஷப் பண்ட் வங்கதேசத்தின் பீல்டிங்கை அமைத்தார்.

Watch Video: ’இங்க ஆளு இல்லை நிப்பாட்டுங்க’- வங்கதேசத்திற்கு பீல்டிங் செட் செய்த ரிஷப் பண்ட்..!

ரிஷப் பண்ட் (Image: twitter)

Updated On: 

28 Oct 2024 12:41 PM

வங்கதேசத்திற்கு எதிரான சென்னையில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இதுவரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ரிஷப் பண்ட் மற்றும் கில்லின் நிதானமான சதத்தால் இந்திய அணி, வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாளான நேற்று இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 67 ரன்களுடன் தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த கில் மற்றும் பண்ட் இன்று காலை வரை சிறப்பாக விளையாடி அசத்தினர். அப்போது, சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சதத்தை நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டு இருக்கும்போது, சுவாரசியமான காட்சி ஒன்று அரங்கேறியது. அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

ALSO READ: Watch Video: அவுட் இல்லாத பந்துக்கு வெளியே சென்ற கோலி.. கோபத்தில் கத்திய ரோஹித் சர்மா..!

வைரல் வீடியோ:


இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்டின் மூன்றாவது நாளான இன்று தொடங்கியதில் இருந்து சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் வங்கதேச பந்துவீச்சாளருக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தினர். இந்த ஜோடியை உடைப்பதில் எதிரண்டி பந்துவீச்சாளர்கள் மும்முரமாக செயல்பட்டனர். இதற்கிடையில், ரிஷப் பண்ட் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது மிட் விக்கெட்டில் ஆள் இல்லாததை கண்டுள்ளார். போட்டியின் போது, ​​ரிஷப் பண்ட் 29 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த போது, ​​ரிஷப் பண்ட் வங்கதேசத்தின் பீல்டிங்கை அமைத்தார். அதாவது, பந்து போடுவதை நிறத்த சொல்லிவிட்டு, ”ஏய், இங்கே ஒருவர் வர வேண்டும். அண்ணே! இருவர் இங்கே. இங்கே மிட் விக்கெட்டில் ஆள் இல்லை பாருங்கள்” என்று சொன்னார்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் வங்கதேச அணியின் கேப்டன் சாண்டோவும், பண்ட்டின் ஆலோசனையை ஏற்று ஒரு வீரரை மிட் விக்கெட்டில் நிறுத்தினார்.

ரிஷப் பண்ட் சதம்:


வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் அபாரமான விளையாடி 4 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதே சமையம் ரிஷப் பண்ட் முதல் இன்னிங்ஸில் வெறும் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

எம்.எஸ். தோனியை சமன் செய்த ரிஷப் பண்ட்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக டெஸ்ட் சதங்களை அடித்த இந்திய விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் தோனியின் சாதனையை பண்ட் சமன் செய்துள்ளார். தோனி தனது டெஸ்ட் வாழ்க்கையில் இதுவரை 6 சதங்களை அடித்துள்ளார். தற்போது பண்ட் 6 சதங்கள் அடித்து தோனியை சமன் செய்துள்ளார். பண்ட் டெஸ்ட் போட்டியில் இன்னும் ஒரு சதம் அடித்தால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டெஸ்டில் இந்தியாவுக்காக அதிக சதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெறுவார்.

ALSO READ: IND vs BAN 1st Test: ரிஷப் பண்ட், கில் அதிரடி சதம்.. வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..!

குறைந்த இன்னிங்ஸில் 6 டெஸ்ட் சதங்கள்:

டெஸ்ட் வரலாற்றில் 57 இன்னிங்ஸ்களில் விக்கெட் கீப்பராக தனது டெஸ்ட் வாழ்க்கையில் ஆறாவது சதத்தை அடித்தார். இந்த சாதனையை எட்டுவதற்கு தோனிக்கு 144 இன்னிங்ஸ்களில் 6 சதங்கள் அடித்திருந்தார்.

ரிஷப் பண்ட் தனது கடைசி டெஸ்டில் 2022 நவம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடினார். டிசம்பர் 2033ம் ஆண்டு மிகப்பெரிய கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், சுமார் 21 மாத நீண்ட காத்திருப்பு பிறகு மீண்டும் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.

ஷிகர் தவான் சாதனையும் முறியடிப்பு:

இந்திய அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவானை பின்னும் தள்ளியுள்ளார் ரிஷப் பண்ட். டெஸ்ட் போட்டியில் தவானை விட அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக பண்ட் உருவெடுத்துள்ளார். தவான் தனது 34 டெஸ்ட் போட்டிகளில் 2,315 ரன்கள் எடுத்துள்ளார். அதே நேரத்தில், ரிஷப் பண்ட் 34 டெஸ்ட் போட்டியில் 6 சதங்கள், 11 அரைசதங்களுடன் 2419 ரன்கள் எடுத்துள்ளார்.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!