5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Watch Video: அவுட் இல்லாத பந்துக்கு வெளியே சென்ற கோலி.. கோபத்தில் கத்திய ரோஹித் சர்மா..!

Virat Kohli: இன்றைய நாள் முடிய வெறும் 15 நிமிடங்களே இருந்த நிலையில் மெஹிதி ஹாசன் பந்தை விராட் கோலி சந்தித்தார். மெஹிதி ஹாசன் வீசிய 19.1 பந்தை அதிரடியாக பவுண்டரிக்கு விரட்டிய விராட் கோலி, அடுத்த பந்தே அவரது சுழலில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். அப்போது இந்திய அணியிடம் ஒன்றல்ல, மூன்று டிஆர்எஸ் இருந்தது. எதிரே இருந்த கில்லிடம் சிறிது ஆலோசனை நடத்திய விராட் கோலி டிஆர்எஸ் எதுவும் எடுக்காமல் நேரடியாக பெவிலியன் நோக்கி நடக்க தொடங்கினார்.

Watch Video: அவுட் இல்லாத பந்துக்கு வெளியே சென்ற கோலி.. கோபத்தில் கத்திய ரோஹித் சர்மா..!
விராட் கோலி அவுட் (Image: twitter)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 20 Sep 2024 17:39 PM

இந்தியா – வங்கதேசம் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, தற்போது வங்கதேசத்துக்கு எதிராக பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2வது இன்னிங்ஸை ஆடி வருகிறது. இந்தநிலையில், இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸின்போது, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி அவுட் இல்லாத பந்துக்கு அவுட் என நினைத்து வெளியே சென்றார். தற்போது அது அவுட் இல்லை என்று தெரிந்ததும் விராட் கோலி ரசிகர்கள் அவரது பெயரை ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ALSO READ: Periods At Early Age: மிக இளம் வயதில் பெண் குழந்தைகள் வயதுக்கு வர காரணம் என்ன..? பெற்றோர்களே! இவற்றை கவனியுங்கள்..!

என்ன நடந்தது..?

வங்கதேசத்திற்கு எதிரான 2வது இன்னிங்ஸை தொடங்கி, இந்திய அணி 15 ரன்களை தொட்டபோது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 5 ரன்களில் தஸ்கின் அகமது பந்துவீச்சில் அவுட்டானார். தொடர்ந்து இந்திய அணி 28 ரன்கள் எடுத்திருந்தபோது கடந்த இன்னிங்ஸில் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால் 10 ரன்களில் அவுட்டானார். இதன் காரணமாக, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 4வது வீரராக உள்ளே களமிறங்கியபோது சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் ‘விராட் கோலி’ விராட் கோலி’ என்ற கோஷத்தை எழுப்பினர். வந்தவுடன் பவுண்டரியுடன் இன்னிங்ஸை தொடங்கிய விராட் கோலி, இந்த முறை தான் சந்தித்த ஒவ்வொரு பந்தையும் மிகவும் பதட்டமில்லாமலும், கவனமுடனும் சந்தித்தார். இதனால், இந்த முறை நீண்ட நாட்களுக்கு பிறகு விராட் கோலி டெஸ்ட் வடிவத்தில் சதம் அடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

இன்றைய நாள் முடிய வெறும் 15 நிமிடங்களே இருந்த நிலையில் மெஹிதி ஹாசன் பந்தை விராட் கோலி சந்தித்தார். மெஹிதி ஹாசன் வீசிய 19.1 பந்தை அதிரடியாக பவுண்டரிக்கு விரட்டிய விராட் கோலி, அடுத்த பந்தே அவரது சுழலில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். அப்போது இந்திய அணியிடம் ஒன்றல்ல, மூன்று டிஆர்எஸ் இருந்தது. எதிரே இருந்த கில்லிடம் சிறிது ஆலோசனை நடத்திய விராட் கோலி டிஆர்எஸ் எதுவும் எடுக்காமல் நேரடியாக பெவிலியன் நோக்கி நடக்க தொடங்கினார்.

அதன்பின் 5வது வீரராக உள்ளே வந்து ரிஷப் பண்ட் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது விராட் கோலி அவுட்டான வீடியோ ஸ்கீரினில் போடப்பட்டது. அதை அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இதை பார்த்து அங்கையே கடுப்பில் கத்தினார். இந்த வீடியோ மற்றும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு காரணம், விராட் கோலி மெஹிதி ஹாசன் வீசிய பந்தை முதலில் தனது பேட்டிங்கில் வாங்கிய பிறகு, அவரது காலில் பட்டது. அப்படி என்றால் இது எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் இல்லை. அந்த நேரத்தில், விராட் கோலி இந்திய அணியின் கையில் இருந்த டிஆர்எஸ் முறையை பயன்படுத்தி தனது விக்கெட்டை காப்பாற்றி இருக்கலாம். நீண்ட நாட்களாக டெஸ்ட் சதம் அடிக்காத வேட்டையையும் இன்று விராட் கோலி படைத்திருக்கலாம்.

டெஸ்ட் சதம் எப்போது..?

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி தனது பெயரில் 80 சதங்களை பதிவு செய்துள்ளார். தற்போது, சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை முறியடிக்க உலகமே எதிர்பார்க்கும் ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே. இருப்பினும், கடந்த 14 மாதங்களாக விராட் கோலியால் ஒரு டெஸ்ட் சதம் கூட அடிக்க முடியவில்லை. விராட் கோலி தனது கடைசி டெஸ்ட் சதத்தை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி அடித்தது. இதற்கு பிறகு, விராட் கோலி 6 இன்னிங்ஸ்களில் விளையாடி முறையே 38, 76, 46, 12, 6 மற்றும் 17 ரன்கள் எடுத்துள்ளார்.

ALSO READ: Food Recipes: குழம்பு என்ன வைப்பது என்று யோசனையா..? ஆந்திரா ஸ்டைலில் இப்படி பருப்புப்பொடி செய்து அசத்துங்க!

100 சதங்கள் அடிப்பாரா விராட் கோலி..?

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் இதுவரை 80 சதங்கள் அடித்துள்ள நிலையில், சச்சினின் சாதனையை முறியடிக்க இவருக்கு இன்னும் 21 சதங்கள் தேவை. கோலியைப் பொறுத்தவரை, அவர் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சச்சினின் சாதனையை முறியடிக்க அவர் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஏழு சதங்களை அடிக்க வேண்டும். வங்கதேசத்திற்க்ய் எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி ஒரு டெஸ்ட் போட்டி விளையாடி முடித்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலாவது தனது சதத்திற்கான காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News