5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs BAN 1st Test Weather: சென்னையில் திடீர் மழை.. இந்தியா – வங்கதேச இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுமா..?

Chennai Weather Update: இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது இன்று முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் (சேப்பாக்கம்) ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளும் கடந்த ஒரு வாரமாக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு தயாராக இருந்த நிலையில் இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் போட்டி மழையால் ரத்து ஆகுமா என்பது கேள்வியாக உள்ளது.

IND vs BAN 1st Test Weather: சென்னையில் திடீர் மழை.. இந்தியா – வங்கதேச இடையிலான முதல் டெஸ்ட் போட்டி  நடைபெறுமா..?
இந்தியா – வங்கதேச டெஸ்ட் போட்டி (Image: BCCI/TWITTER)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 19 Sep 2024 07:40 AM

40 நாட்களுக்கு மேலான இடைவேளைக்கு பிறகு இந்திய அணி சர்வதேச போட்டிகளில் களமிறங்குகிறது. அந்தவகையில், இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது இன்று முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் (சேப்பாக்கம்) ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளும் கடந்த ஒரு வாரமாக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு தயாராக இருந்த நிலையில் இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் போட்டி மழையால் ரத்து ஆகுமா என்பது கேள்வியாக உள்ளது.

வட இந்தியாவில் வானிலை மோசமாக உள்ள நிலையில், பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆனால், முதல் டெஸ்ட் தென் இந்தியாவில் உள்ள சென்னை என்றாலும், இங்கு நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்துள்ளது. இதனால், ஈரப்பதத்தின் காரணமாக இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் மழையால் ரத்து செய்யப்படுமா என்பது கேள்வியாக உள்ளது.

ALSO READ: India Vs Bangladesh: அஸ்வின் கைகளில் காத்திருக்கும் 5 சாதனைகள்.. வங்கதேச டெஸ்ட் தொடரில் வரலாறு படைப்பாரா?

சென்னையில் மழை:

கடந்த சில நாட்களாக சென்னையில் வெயிலானது வாட்டி வதைத்தது என்றே சொல்லலாம். கடுமையான வெயில் காரணமாக வெளியில் செல்லவே மக்கள் அச்சப்பட்டு இருந்தனர். இந்த சூழ்நிலையில், நேற்று இரவு திடீரென சென்னையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மழை பெய்தது. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஆர்ச்சர்யத்தை கொடுத்துள்ளது.சென்னையில் போட்டி தொடங்கும் ஒரு நாள் முன்பு வரை மழை என்பது இல்லவே இல்லை. ஆனால், சரியாக போட்டி தொடங்கும் 12 மணி நேரத்திற்கு முன்பு சென்னையில் மழை படையெடுத்துள்ளது. இது போட்டியை ரத்து செய்யும் அளவிற்கு பெரிய மழை இல்லை என்றால், போட்டி நடைபெறும் பிட்சை ஈரம் செய்து போட்டி தொடங்க தாமதம் படுத்தும் அளவிற்கு நல்ல மழைதான். எனவே, இந்தியா – வங்கதேச இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் டாஸ் மற்றும் ஆட்டம் தொடங்க தாமதம் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்று சென்னையில் மழை பெய்ய வாய்ப்பா..?

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கும் செப்டம்பர் 19ம் தேதியான இன்று accuweather.com இல் வானிலை முன்னறிவிப்பின்படி, மழை முதல் நாள் ஆட்டத்தை பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மழைக்கான சாத்தியக்கூறு காலையில் 25 சதவீதமாகவும், பிற்பகலில் 46 சதவீதமாகவும் இருக்கும். இருப்பினும், இன்றைய நாள் ஆட்டமானது மழையால் முழுமையாக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை.

ALSO READ: IND vs BAN 1st Test: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்! இந்தியாவின் பிளேயிங் லெவனில் இவர்களுக்கு வாய்ப்பா?

சென்னையில் முதல் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பா..?

மேலும் வானிலை முன்னறிவிப்பின்படி போட்டியின் முதல் நாளில் அதாவது 19 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 20 ஆம் தேதி இரண்டாவது நாளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் போட்டியின் சுவாரஸ்யம் கெட்டுவிடும் அளவுக்கு இருக்காது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சிறிது நேரம் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியின் கடைசி 3 நாள் ஆட்டத்தில் மழைக்கான வாய்ப்பு வெகுவாக குறையும்.

சென்னை டெஸ்ட் போட்டியின்போது, முதல் இரண்டு நாட்களுக்கு பிறகு, அடுத்த மூன்று நாட்கள் சென்னையில் மழை பெய்யும் முறையே 25%, 24% மற்றும் 25% ஆக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் அடுத்த 3 நாட்கள் போட்டி தொடர்ந்து நடைபெற்று யார் வெற்றியாளர்கள் என்ற ரிசல்ட்டும் வரும்.

சென்னையில் செப்டம்பர் 19 முதல் 23 வரை மழைக்கான வாய்ப்பு:

தேதி: மழை பெய்ய வாய்ப்பு

  1. முதல் நாள் – செப்டம்பர் 19: 46%
  2. இரண்டாம் நாள் – செப்டம்பர் 20: 41%
  3. மூன்றாம் நாள் – செப்டம்பர் 21: 25%
  4. நான்காம் நாள் – செப்டம்பர் 22: 24%
  5. ஐந்தாம் நாள் – செப்டம்பர் 23: 25%

ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து டெஸ்ட் போட்டி:

கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இந்தியாவின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற இருந்தது. ஆனால், 5 நாட்கள் முழுவதும் மழை பெய்ததால் ஒரு பந்து கூட இரு அணிகளாலும் விளையாட முடியவில்லை. இது இரு அணிகளும் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. 21ம் நூற்றாண்டில் ஒரு பந்துகூட வீச முடியாமல் முடிந்த டெஸ்ட் போட்டி என்ற வரலாறை இந்த போட்டி படைத்தது.

Latest News